சிறீலங்கா உல்லாசத்துறைக்கு எதிராக பேர்லினில் பரப்புரை

யேர்மன் பேர்லின் மாநிலத்தில் நடைபெறும் உலகலாவியரீதியில் மிகபெரிய உல்லாசப் பயணிகளுக்கான சொர்க்கம் 2009 கண்காட்சியில் முதல் நாள் போராட்டமாக பல தமிழ் இளையோர்கள் யேர்மன் மொழியிலும் ஆங்கில மொழியிலும் எழுதப்பட்ட சொர்க்கத்தின் மறுபக்கம், எனும் துண்டுபிரசுரம் அங்கே பத்தாயிரத்துக்கும் மேலாக கூடியிருந்த மக்களுக்கு கொடுத்தார்கள்.
அத்துடன் அங்கே தாயக மக்களின் உண்மையான அவலநிலமைகள் அடங்கிய கண்காட்சியும் பார்வையாளர்களுக்கு வைக்கப்பட்டது.

சிறப்பாக ஓர் பேர்லின் வாழ் இளைஞன் சிறிலங்கா நாட்டின் கண்காட்சி நிலையத்துக்கு சென்று அவர்கட்கு எதிராக தான் அணிந்திருந்த உடையில் சிறிலங்காவின் சுற்றுலா விமானத்திலிருந்து இரத்தம் வடியும் காட்சியை பதித்து பத்தாயிரத்துக்கும் மேலான மக்களின் மத்தியிலும், 185 நாடுகளின் கண்காட்சி நிலையங்களின் ஊடாகவும் தனது ஆதங்கத்தை தெரிவித்தார்.





Comments