குடாநாட்டின் புதுவகை வர்த்தகக் கலாசாரம்

குடாநாட்டுக்கான தரைவழிப்பாதை தடைப் பட்ட காலத்தில் இருந்து 2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 11 ஆம் திகதிக்குப் பின்னர் இப்பிரதேசத்து மக் களின் அத்தியாவசிய உணவுப் பொருள்கள் மற்றும் பாவனைப் பொருள்கள் கிடைப்பதும், அவற்றின் விலை களும் எட்டாக் கொப்பில் நின்றதையும் மறக்க இயலாது. இப்போதும்கூட, பொருள்கள் தாராள மாகக் கிடைப் பதாகவும், சராசரி விலைகளுக்குப் பெறக்கூடியதாக இருப்பதாகவும் கூற முடியாதே!

அத்தியாவசிய உணவுப் பொருள்களும் சரி, ஏனைய பொருள்களும் சரி, கடல்வழியாக அரசாங்க அதிபரூடாகவும், தனியார்துறையினரா லும் தருவிக்கப் படுகின்றன. கப்பல் சேவைகளில் தாமதங்கள், தடங் கல்கள் ஏற்படும்போது, உணவுப் பொருள்கள் உட்பட ஏனைய பாவனைப் பொருள் களுக்குத் தட்டுப்பாடு உண்டாவதும் அவற்றைப் பங்கீட்டுக்கு வழங்க வேண்டிய நிர்ப்பந்தம் உருவாவதும் அடிக்கடி நிகழ்ந்து கொண்டே இருக் கிறது. இது இந்தப் பிரதேசத்தின் மாறாத நோய் என்ற நிலைக்கும் மாறிவிட்டது....!

இத்தகைய சந்தர்ப்பங்களில், பொருள்களின் நியாயமான விலையை அடியோடு மறந்து வர்த்தகர் கள் தமது இலாபத்தை மட்டுமே முன்னிலைப்படுத்தி விற்பனை செய்து மக்களைப் பாதிப்புறச் செய் வதும் சர்வசாதாரணமாகிவிட்டது. அதுவே புதிய "வர்த்தக தர்மம்" ஆகியும் விட்டது!

மறுபுறத்தில் பொருள்களின் நிறைகளைக் குறைத்து விற்பனை செய்வதும் இப்போது சர்வ சாதாரணம். தட்டிக் கேட்பார் எவருமில்லை என்ற போக்கும் (ஏன் நோக்கும்) தட்டுப்பாடான காலம், தட்டுப்பாடற்ற காலம் என்ற பேத மில்லாமல் மக் களைச் சுரண்டும் அதர்மம் கொடிகட்டிப் பறக்கிறது.

கூட்டு மொத்தமாக, அல்லது நடைமுறை விதியாக மேற்öசான்ன இரண்டு வகைகளும் ஒன்று சேர்ந்ததே பின்னிப்பிணைந்ததே குடாநாட்டின் இன்றைய "வியாபாரக் கலாசாரம்" எனலாம்.

மேற்சொன்ன வியாபாரக் கலாசாரத்தின் ஓர் அங் கமான நிறை குறைந்த பொருள் விற்பனை பற்றிய செய்தி ஒன்று வெளிவந்திருக்கிறது. கடந்த ஒரு வாரத்தில் மட் டும் பாண் தயாரிப்பதில் ஈடுபடும் எட்டு பேக்கறிகளைப் பாவனையாளர் அலுவல்கள் சபையின் அதிகாரிகள் குழு ஒன்று கண்டுபிடித் திருக்கிறது என்பதே அந்தச் செய்தி. யாழ்ப்பாணம், சுன்னாகம், சாவகச்சேரி ஆகிய பகுதிகளில் குடா நாட்டில் பரவலாக இந்த "வியாபாரக் கலாசாரம்" தொற்றிக்கொண்டிருக்கிறது என்பது இதிலிருந்து தெட் டத் தெளிவாகிறது.

சம்பந்தப்பட்ட பேக்கறி உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகத் தெரி விக்கப்படு கிறது.

மறுபுறத்தில் குடாநாட்டின் உணவகங்களில் தின் பண்டங்கள் அதிகூடிய விலைகளில் விற் பனை செய்யப் படுவது குறித்த முறைப்பாடுகள் பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகார சபைக்குக் கிடைத்திருப்பதாக மற்றொரு தகவல் வெளியாகி உள்ளது.

குடாநாட்டில் சில காலமாக உணவுப் பொருள் களின் விலைகள் எல்லையின்றி, எக்கச்சக்கமாக உயர்ந்து நின்றன என்பது மறுக்க முடியாத அல்லது சளப்பமுடியாத உண்மை. அவ்வேளை உணவகங் களில் தின்பண் டங்களின் விலைகள் உயர்ந்தன. அது தவிர்க்க முடியாத விலை உயர்வு; நியாயமான தும் கூட.

முன்னர் உயர்த்தப்பட்ட விலைகளிலேயே இப்போதும் தின்பண்டங்களை விற்பனை செய் வதை, எந்தவகைக் கணக்குப் போட்டுக் காட்டி னாலும் ஏற்றுக்கொள்ள முடியாது. உணவக உரி மையாளர்களுக்கு இலாபம் இன்றி அவற்றை நடத்த இயலாது என்பது யதார்த்தமே ஆனால் தின்பண் டங்களைத் தயாரிப்பதற்குத் தேவையான பொருள் கள் தட்டுப்பாடின்றியும் குறைந்த விலைகளிலும் கிடைக்கும் இந்தக் காலத்திலும் முந்திய விலை களில் விற்பனை செய்வது அதிக லாபம் ஈட்டுவது மாற்று மார்க்கம் இன்றி அங்கு உண்பதற்கு நிர்ப் பந்திக்கப்படுவோரின் வயிற்றில் அடிப்பதாகும்!

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். மேற்கூறிய இரண்டு வகை வர்த்தகக் குற்றங்களை விட மக்களைப் பாதிக்கும் கலப்படம், காலாவதி யான பொருள்களைப் பாவனையாளர்களிடம் கட்டி அடிப்பது போன்ற பல வர்த்தகக் குற்றங்கள் இப் பிரதேசத்தில் மலிந்துள்ளன.

திருடனாகப் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்று கூறிக்கொண்டு, அதிகாரிகள் வெறுமனே நிலத்தைப் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. நெருப்புக் கொளுத்தும் இராசாவுக்குக் கொள்ளி எடுத்துக் கொடுக்கும் மந்திரிகளாக அவர்கள் இருக்கக் கூடாது.

மொத்தத்தில் மக்களுக்கு நியாயமான விலை களில் பொருள்கள் கிடைப்பதற்கான நீதி செய்யப் படவேண்டும்

Comments