முல்லைத் தீவில் யுத்தம் இடையறாது தொடர்கிறது. லட்சக்கணக்கான மக்கள் இடையில் சிக்குண்டு சொல்லொணாத் துயரத்தில் துவண்டு தவிக்கின்றனர். உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் மக்கள் மீதான கரிசனைகள் வெறும் உதட்டளவிலேயே வெளிப்படுத்தப்படுகின்றன.
யதார்த்தத்தில் நாளாந்தம் மக்கள் கொல்லப்பட்டும் காயமடைந்தும் அவயவங்களை இழந்தும் வருகி;றனர். கணவனைப் பிரிந்த மனைவியும் மனைவியைப் பிரிந்த கணவனும்
மனைவியும் மனைவியைப் பிரிந்த கணவனும் பெற்றோரைப் பிரிந்த பிள்ளைகளும் பிள்ளைகளைப் பிரிந்த பெற்றோரும் என ஒரு இனத்தின் துயரம் நீள்கிறது. இந்தத் துயரங்களிடையே பாரிய காயங்களுக்குட்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அபத்த வாழ்வுக்குள்ளான மக்களின் இதயங்கள் இங்கு பேசுகின்றன.
ஊடகவியலாளர்களின் மூச்சுக் காற்றுக் கூட பாதிக்கப்பட்ட இந்த மக்கள் மீது விழக் கூடாது என கங்கணம் கட்டி நிற்கும் அரசாங்க அதிகாரிகளையும் படையினரையும் மீறி பல்வேறு சிரமங்களின் மத்தியில் எடுக்கப்பட்ட இந்த மக்களின் உள்ளக் குமுறலை நீங்களும் கேட்டுப் பாருங்கள்.
இலங்கையின் மிகவும் இறுக்கமான பொருளாதாரத் தடையினால் வன்னியில் வாழும் மக்கள் பெரும் பட்டினிச் சாவை எதிர்கொண்டுள்ளனர். உணவுத் தடையினால் ஏற்கனவே சிலர் உயிரிழந்துள்ள நிலையில், கடும் வெயிலுக்கு மத்தியில் கூடாரங்களுக்குள் வாழும் மக்கள் தண்ணீருக்காக நீண்ட தூரம் அலையும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
மிகவும் நெருக்கமாக மக்கள் தங்கியுள்ள இடங்களுக்கு தொண்டர் அமைப்புகள் தண்ணீரை எடுத்துச் சென்று வழங்குகின்றனர். இலட்சக்கணக்கான மக்கள் தண்ணீருக்காக நீண்ட வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்து தண்ணீரைப் பெறவேண்டிய அவலத்திற்கு உள்ளாகியுள்ளனர்:
நாள் ஒன்றுக்கு ஒரு குடம் தண்ணீரே வழங்கப்படுவதாகவும், வரிசையில் காத்திருந்தும் தண்ணீர் கிடைக்காமலும் திரும்பிச் செல்ல வேண்டிய நிலை ஏற்படுவதாகவும் இங்கு காத்திருந்த மக்கள் தெரிவித்தனனர். வேதனையுடன் காத்திருக்கும் மக்களையும் ஒரு கணம் பாருங்கள்:
இங்கே சொடுக்கி ஒலியை கேளுங்கள்
Comments