தமிழின விரோதக் கூட்டணி: தமிழருவி மணியன்

சென்னையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் ஈழத்தமிழருக்காக உயிர் நீத்த 16 பேருக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய தமிழருவி மணியன் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியதாவது,

உலகத் தமிழர்களின் தலைவர் என்று கூறும் தமிழக முதல்வர் கருணாநிதியால், 40 தொகுதிகளையும் கைப்பற்ற முடிந்த அவரால், தமிழ்நாட்டுக்கு முல்லைப்பெரியாறு, ஒகேனக்கல் காவிரிப் பிரசனையில் தீர்வுகாண முடியவில்லை.

அவர் நினைத்திருந்தால் தமிழர்களை காப்பாற்றியிருக்க முடியும். கடைசித் தமிழன் இருக்கும்வரை கொன்று குவித்து சிங்கள நாடக மாற்ற முயலும் முயற்சிக்கு ஆதரவு கொடுத்துக்கொண்டிருக்கிறார். திமுக-காங்கிரஸ் கூட்டணி என்பதே தமிழின விரோதக் கூட்டணி என்றார்.

Comments