ஐ.நாவில் இலங்கை விடயத்தை சீனா எதிர்த்தால் "நடைமுறையான வாக்கெடுப்பு" நடைபெறும்

ஐ.நாடுகள் பாதுகாப்பு சபையில் இலங்கை விடயம் தொடர்பான கூட்டம் நடாத்துவது தொடர்பாக சீனா எதிர்ப்பை தெரிவித்தால் சீனாவின் “வீட்டோ” உரிமைகள் இல்லாமல் "நடைமுறை ரீதியான வாக்கெடுப்பு" மேற்கொள்ளப்படும். என சபையின் நெருக்கமான அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

சர்வதேச சமாதானம் மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான தருணத்தில் இவ்வாறான நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மெக்ஸிக்கோவினால் ஐ.நா. பாதுகாப்பு சபையில் இலங்கை விடயம் ஆராயப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்த போது அதனை ரஷ்யா முழுமையான எதிர்த்தது. மீண்டும் ஐரோப்பிய பாராளமன்ற உறுப்பினர்கள் இலங்கை விடயம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கும் நிலையில் சீனா முழுமையான எதிர்ப்பை தெரிவித்துவருகின்றது.

தற்போது சிப்பாப்பே என அழைக்கப்டும் ரொடிஸ்யாவின் விவகாரத்தை சீனாவும், ரஷ்யாவும் உள்நாட்டு விவகாரம் என தெரிவித்த போது அமெரிக்காவும், பிரிட்டனும் சேர்ந்த நடைமுறை வாக்கெடுப்பு விடயத்தைப் பயன்படுத்தி பாதுகாப்பு சபை கூட்டத்தில் அதனை இடம்பெறச் செய்யதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்கா, பிரித்தானிய, ஐரோப்பிய நாடுகள், ஐ.நா. செயலாளர் நாயகம் ஆகியோர் இலங்கையில் போரை நிறுத்தி சமாதானப் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க வேண்டும் என பல தடைவைகள் கோரிக்கை விடுத்திருந்த போதும் அதனை விடுதலைப் புலிகள் ஏற்றுக் கொண்ட போதிலும் இலங்கை அரசாங்கம் தொடர்ந்து மறுத்துவந்துள்ளது.

இலங்கை விடயத்தில் அமெரிக்கா அதிக அளவு அக்கறையும், கவலையும் அடைந்திருப்பதாக ஐ.நாவின் பாதுகாப்பு சபையில் இலங்கை விடயம் தொடர்பான கூட்டத்திற்கு ஆதரவு வழங்குவதாக அமெரிக்கத்தூதுவர் சூசான் ரைஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் போர்க் குற்றங்களை மேற்கொண்டுவருவதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையார் நவநீதம்பிள்ளை கூறியவற்றை இலங்கை அரசாங்கம் மறுத்திருந்த போதிலும் அது சரியான அறிக்கை என ஐ.நா சபை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments