வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் 'கொலைஞர் கருணாநிதி'

அதிகாரம் கையில் இருந்தும் போரை நிறுத்த அதைப் பயன்படுத்தாமல் 'உயிரை தருவேன்' 'ஐயகோ தீர்மானம்' 'கடைசி வேண்டுகோள்' என்று நாட்களை கடத்திய 'கொலைஞர் கருணாநிதி', போராட்டம் நடத்திய வழக்கறிஞர்களையும் போலீசாரை விட்டு அடித்து நொறுக்கினார்.

மாணவர்கள் சேர்ந்து இருந்தால்தானே போராட்டம் நடத்துவார்கள் என்று அவர்களுக்கும் விடுமுறை அளித்து வீட்டுக்கு அனுப்பி விட்டார். இலங்கை தமிழர்களுக்காக போராடிக் கொண்டிருந்த வழக்கறிஞர்களையும் போலிசாரையும் மோத விட்டு திசை திருப்பி இப்போது நீதிபதிகளுக்கும், வழக்கறிஞர்களுக்கும் சண்டை மூட்டி விட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்.

மேடையில் பேசிக் கொண்டிருந்த சீமான், கொளத்தூர் மணி மற்றும் நாஞ்சில் சம்பத் போன்றோர்களையும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அடைத்து விட்டு இப்போது புதிதாக ஒரு நாடகத்தை அரங்கேற்றியுள்ளார்.

இப்போது இலங்கை தமிழ்ர்களுக்கு சமையல் பத்திரங்கள், உணவுப் பொருட்களை அனுப்பப் போகிறாராம். தினமும் வன்னி மக்களுடைய தலைகளில் 1000க்கும் மேற்பட்ட குண்டுகள் வீசப்படுகின்றன. பிணங்களை புதைப்பதற்கு கூட நேரமில்லை. அழுவதற்கு கூட நேரமில்லாமல் தொடர்ந்து குண்டுகள் வீசப்படுகின்றன.

போரை நிறுத்த வழி செய்யாமல் பத்திரம், பண்டம் தருவாராம். அதை வைத்து அவர்கள் சமையல் செய்து சாப்பிடுவார்களாம். எந்த பிரச்சினையாக இருந்தாலும் அதை திசை திருப்பி விடுவதில் 'கொலைஞர்' கருணாநிதிக்கு நிகர் யாரும் இல்லை. தன் மீது ஏற்பட்ட களங்கத்தை துடைப்பதற்கு அவர் கண்டுபிடித்த உத்திதான் இது. 40 நாடாளுமன்ற உறுப்பினர்களை தி.மு.க கூட்டணிக்கு அள்ளிக் கொடுத்ததற்கு நமக்கு கிடைத்த பலன்.

இலங்கை தமிழர்களின் கழுத்தை அறுத்த காங்கிரஸ் கட்சி, மருந்து தடவ மருத்துவர்களை அனுப்பி இருக்கிறது. அவர்கள் போர் நடக்கும் இடத்திற்கு செல்லாமல் புல்மோட்டைக்கு சென்றிருக்கிறார்கள். கருணாநிதிதான் இப்படி என்றால் மற்றவர்கள் அதற்கும் ஒரு படி மேல் போய்விட்டார்கள். காங்கிரஸ் கட்சி கூட்டணிக்கு வர வில்லை என்று தெரிந்தவுடன் ஜெயலலிதா நீலிக் கண்ணீர் வடிக்கிறார்.

தேர்தலில் ஜெயித்த பின்பு யாராவது இவரிடம் போய் ஏன் இலங்கை தமிழருக்கு உதவ வில்லை என்று கேட்க முடியுமா?

வைகோவோ அம்மாவின் உண்ணாவிரதத்தை முடித்து வைக்கும் பெரும் பேறு கிட்டியதாக புளகாங்கிதம் அடைகிறார்.

ராமதாசோ பச்சோந்தியை விட நிறம் மாறுவதில் சாதனை படைத்தது விட்டார்.

திருமாவளவனோ தி.மு.க கூட்டணியில் இருக்கிறாராம்.

ஆனால் காங்கிரஸ் கூட்டணியில் இல்லையாம்.

விஜயகாந்த் இதுவரை தீக்குளித்து இறந்த 11 பேருக்கு அஞ்சலி கூட செலுத்த வில்லை.

இவர்கள் தமிழக மக்களின் காதில் பூ சுற்றி முடித்து விட்டு இப்போது ஈழத் தமிழர்களின் காதிலேயும் பூ சுற்ற ஆரம்பித்து விட்டார்கள். கொள்கைக்காக மனம் மாறாத தேசியத் தலைவர் எங்கே? இப்படி பச்சோந்தி போல் நிறம் மாறும் இவர்கள் எங்கே?

இலங்கை தமிழர்களுக்கு உருப்படியாய் உதவி செய்ய முடியாவிட்டால் சும்மாவாவது இருக்கலாம். ஏன் உபத்திரவம் கொடுத்து குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும்?

குடும்ப நலனுக்காக இனப்படுகொலையை வைத்து பதவிக்காக அரசியல் செய்யும் இவர்கள் இலங்கையில் இருந்திருந்தால் இந்நேரம் சிவலோக பதவி கிடைத்திருக்கும்.

போரை நிறுத்த வழி செய்யாமல் கலைஞர் அனுப்பும் பாத்திரங்கள் ஆளில்லாத சுடுகாட்டிற்குதான் போய் சேரும். பல்லி, பாம்புகள், தேள்கள்தான் அவற்றில் குடியிருக்கும். நாய், நரிகள் உருட்டி விளையாடும். அந்த ஒலி கொலைஞர் கருணாநிதியின் காதுகளில் தேமதுர ஓசையாக பாயும்.

- நவீன் -

- தமிழ்க்கதிர் -

Comments