புதுமத்தளான் பகுதியில் இன்று(20.03.2009) காலை 10.00 மணியளவில் பொதுமக்கள் மீது இராணுவத்தினர் RPG தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் கர்பினி பொன் ஒருவர் இறந்துள்ளதுடன் மேலும் 9 பேர் காயமடைந்ததாக, தெரிவிக்கப்படுகிறது.
பொதுமக்கள் கூடியிருந்த, குடியிருப்பு பகுதி நோக்கி வந்த இராணுவத்தினர் கண்மூடித்தனமாக தாக்கியதில் மக்கள் நாலாபுறமும் சிதறி ஓடியதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இராணுவத்தினர் தாக்குதலுக்கு பயன்படுத்திய RPG ரக எறிகணைகளின் படங்கள் இங்கு இணைக்கப்பட்டுள்ளது.
இறந்த கர்பினிபெண் தாசன்மொறாயஸ் அன்னலச்சுமி, வயது 31 என்று அறியப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களின் விபரம்:
சங்கரப்பிள்ளை- 65
சுசிகலா- 18
நிரோசா 12
சின்னச்சாமி- 65
இராசலிங்கம் 48
தருமரத்தினம் 40
விஜயநாதன் 37
லோகநாதன் 35
Comments