இருப்பினும் இந்த உடல்கள் இலங்கை புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து கொண்டுவரப்பட்டதாக பெயர் குறிப்பிட விரும்பாத பணியாளர் ஒருவர் அதிர்வு இணையத்திற்கு தெரிவித்தார். புதுக்குடியிருப்பில் தொடர்ந்தும் கடும் மோதல் இடம்பெற்று வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையின் 58வது இராணுவப் படைப் பிரிவு, விடுதலைப் புலிகளுடனான போரின்போது பெரும் சேதத்தை சந்தித்துள்ளதாகவும், அதனால் தற்போது அதில் பெருமளவு இந்திய இராணுவத்தினர் சேர்க்கப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.
இந்தப் படைப் பிரிவில், தற்போது சிங்கள இராணுவத்துடன் இணைந்து இந்திய இராணுவத்தினரும் புதுக்குடியிருப்பில் தாக்குதல் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அதேபோல 59வது படைப் பிரிவிலும் 30 சதவீதம் பேர் இந்திய இராணுவத்தினராகவே காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
பலாலி விமானப்படைத் தளத்தில் இருந்து கொழும்பு செல்லும் பயணிகள் விமானசேவை இடைநிறுத்தம் செய்யப்படுவதும், சிலநேரங்களில் தடைப்படுவதும் யாவரும் அறிந்த விடையமே. தற்போது கிடைக்கப் பெறும் தகவிலின் படி, இந்திய இராணுவ வருகைக்காகவே பலாலி விமான நிலையம் சிலவேளைகளில் மூடப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
யாழ்ப்பாணத்தில் இந்திய ரூபாய் நோட்டுகள் பல பணமாற்று நிலையங்களில் மாற்றப்படுவதாகவும் ,இந்திய இராணுவத்தினர் திரும்பிச் செல்லும் தருனத்தில் வெளிநாட்டு தொலைக்காட்சிப் பெட்டிகள் உட்பட பல பொருட்களை வாங்கிச் செல்வதாகவும் அறியப்படுகிறது. இவை அனைத்தும் தற்போது முஸ்லீம் வியாபாரிகளால் கையாளப்படுவதாகவும், தமிழ் பேசும் வியாபாரிகளை புறந்தள்ளி இந்த நடவடிக்கையை இராணுவத்தினரும் துனை ஆயுதக் குழுக்களும் நடாத்திவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
1990 களில் விடுதலைப் புலிகளால் தாம் பலவந்தமாக வெளியேற்றப்பட்டதாக கூறிவரும் முஸ்லீம் வியாபாரிகள் தற்போது புலிகளுக்கு எதிராக செயல்பட்டுவருவதாக நம்பப்படுகிறது. எது எவ்வாறு இருப்பினும், விடுதலைப் புலிகளுக்கு எதிராக , அமெரிக்கா, இஸ்ரேல், யப்பான் பாக்கிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் கூட்டாக இணைந்து செயல்பட்டுவருவது அம்பலமாகியுள்ளது.
ஆதலால் புலம் பெயர் வாழ் தமிழ் மக்களாகிய நாமே , எமது தேசியதலைவரின் கரங்களை பலப்படுத்தவேண்டும். எமது போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லவேண்டும் !
Comments