தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஆதரித்து பேசியதாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாகவும் கூறி இயக்குனர் சீமானை புதுச்சேரி காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்நிலையில் இயக்குனர் சீமானின் காவல் நீட்டிப்பு முடிந்ததைத் தொடர்ந்து புதுச்சேரி நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரது காவலை ஏப்ரல் 16ஆம் திகதி வரை நீட்டித்து நீதிபதி பொங்கியப்பன் உத்தரவிட்டார்.
அப்பொழுது அங்கு பெரும் திரளாக திரண்டிருந்த பெரியார் திராவிடர் கழக தோழர்கள் அதன் புதுச்சேரி மாநில தலைவர் லோகு அய்யப்பன் தலைமையில் இயக்குனர் சீமானை வாழ்த்தியும் தமிழ் தேசிய தலைவர் மாவீரன் வே.பிரபாகரன் அவர்களையும் விடுதலைப்புலிகளையும் வாழ்த்தி நீதிமன்ற வளாகத்திலேயே குரல் எழுப்பினர். தமிழீழ ஆதரவாளர்கள் பலர் திரண்டிருந்தனர்.
இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக கூறி புதுச்சேரி காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட இயக்குனர் சீமானின் மறியலை ஏப்ரல் 16ஆம் திகதி வரை நீட்டித்து புதுச்சேரி நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டது. சிறை மற்றும் நீதிமன்றம் வெளியில் திரளான தமிழுணர்வாளர்கள் திரண்டிருந்து புலிகளை ஆதரித்து முழக்கமிட்டனர்.
Comments