வன்னியில் சிறிலங்கா படையினர் எறிகணை, எம்ஐ-24 ரக உலங்குவானூர்தி தாக்குதல்: 30 சிறுவர்கள் உட்பட 92 தமிழர்கள் படுகொலை

வன்னியில் சிறிலங்கா படையினர் இன்றும் நடத்திய எறிகணை மற்றும் எம்ஐ-24 ரக உலங்கு வானூர்தி தாக்குதல்களில் 30 சிறுவர்கள் உட்பட 92 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 153 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதிகளான அம்பலவன்பொக்கணை, இடைக்காடு, மாத்தளன் மற்றும் இரட்டைவாய்க்கால் பகுதிகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை தொடக்கம் மாலை வரை சிறிலங்கா படையினர் ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை, பீரங்கி, மோட்டார், ஆர்பிஜி உந்துகணை மற்றும் எம்ஐ-24 ரக உலங்குவானூர்தி தாக்குதல்களை நடத்தினர்.

இதில் 30 சிறுவர்கள் உட்பட 92 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 153 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

அருணாசலம் ரவி (வயது 37)

அழகு மீனா (வயது 49)

ஆறுமுகம் சசீலா (வயது 18)

லோகநாதன் நிசாந்தினி (வயது 09)

வைரமுத்து செல்வரத்தினம் (வயது 50)

லௌசீகன் லேகா (வயது 23)

விசுவலிங்கம் கனகரத்தினம் (வயது 65)

பெரியாம்பிள்ளை சோபமலர் (வயது 67)

ரவிசங்கர் லவநிசா (வயது 02)

சத்தியானந்தன் சசிகலா (வயது 29)

வடிவேலு சந்திரலிங்கராசா (வயது 51)

ஐங்கரகுமார் நிதுசன வான்மதி (வயது 09)

ஜேம்ஸ் அந்தோனிப்பிள்ளை (வயது 50)

சின்னமணி இன்பநாதன் (வயது 47)

கந்தசாமி தியாகராசா (வயது 47)

தியாகராசா சங்கீதா (வயது 13)

வீரசிங்கம் தர்மலிங்கம் (வயது 56)

தில்லையம்பலம் திருச்செல்வம் (வயது 52)

ஜோசப் வேணுசன் (வயது 05)

தில்லைநாதன் சுமதி (வயது 38)

லோகநாதன் ஹேமா (வயது 32)

கலைவாணி (வயது 27)

லோகநாதன் லோஜிதா (வயது 09)

சிவதீபன் புஸ்பராணி (வயது 04)

சத்தியமூர்த்தி குணாளன் (வயது 09)

புலேந்திரன் விக்கினேஸ்வரி (வயது 42)

சி.கலைவாணன் (வயது 27)

துரைசிங்கம் (வயது 47)

கணபதிப்பிள்ளை சண்முகம் (வயது 61)

கஸ்தூரி (வயது 14)

விஜயரத்தினம் இரத்தினராசா (வயது 44)

முருகையா சிவனம்மா (வயது 64)

கருணாநிதி தர்சா (வயது 22)

மயில்வாகனம் குகேந்திரராசா (வயது 44)

கமலநாதன் ராதிகா (வயது 23)

மகேந்திரராசா கமலநாதன் (வயது 26)

குகேந்திரராசா ராஜலா (வயது 05)

கந்தசாமி தனுசன் (வயது 08)

ஆறுமுகம் கந்தசாமி (வயது 42)

சோதி (வயது 48)

தர்மேந்திரன் கார்த்திகா (வயது 06)

கே.தர்சன் (வயது 22)

எஸ்.சிவரூபன் (வயது 06)

வீ.இந்திரராஜா (வயது 40)

ஆர்.தியாகு (வயது 40)

கஸ்தூரி (வயது 16)

வீ.துரைசிங்கன் (வயது 47)

சத்தியமூர்த்தி குணாளன் (வயது 09)

வினோஜா (வயது 17)

கணபதிப்பிள்ளை சண்முகராஜா (வயது 58)

விசுவலிங்கம் கனகரத்தினம் (வயது 65)

வீரசிங்கம் தர்மசிங்கம் (வயது 52)

வீரசிங்கம் இந்திரராஜா (வயது 42)

சின்னமணி இன்பநாதன் (வயது 47)

கந்தையா சிவபாதம் (வயது 50)

சிவபாதம் மோகன்ராஜ் (வயது 25)

சிவபாதம் தர்மராஜ் (வயது 23)

மோகன்ராஜ் ராதிகா (வயது 24)

பாலச்சந்திரன் தர்சன் (வயது 08)

சத்தியமூர்த்தி குணாளன் (வயது 10)

நாகலிங்கம் பாலகிருஸ்ணன் (வயது 42)

மயில்வாகனம் குகேந்திரராசா (வயது 44)

குகேந்திரராசா ராஜனா (வயது 13)

அன்ரன் லோசன் ரேகா (வயது 03)

சின்னமணி இன்பராசா (வயது 47)

சசிகுமார் தேவபாக்கியம் (வயது 51)

ஐங்கரன் நிருசன் வான்மதி (வயது 09)

தில்லையம்பலம் திருச்செல்வம் (வயது 04)

சிவதீபன் புஸ்பராணி (வயது 32)

குகேந்திரராசா (வயது 46)

விஜயரட்ணம் இந்திரராசா (வயது 46)

மரியநாயகம் கதீசன் (வயது 21)

பாலகுமார் பாதூசன் (வயது 05)

மயில்வாகனம தேவநேசன் (வயது 14)

கனியமுதன் கவிஞன் (வயது 16)

வைரமுத்து காருண்யன் (வயது 12)

வைரவன் துரைசிங்கம் (வயது 42)

காந்தி மதியமலர் (வயது 29)

கலாதீபன் விதுசனா (வயது 08)

தேவன் பவிசா (வயது 09)

கண்ணாளன் காவியா (வயது 13)

வேணுகாந்தன் யோகாம்பாள் (வயது 40)

கலைத்தேவன் ரேணுகா (வயது 35)

இன்பநாதன் சின்னராசா (வயது 44)

அந்தோனி ஜோசப் மரியநாயகம் (வயது 52)

கதிர்வேலு மருதம்மா (வயது 52)

கதிரித்தம்பி பவிசனா (வயது 11)

நாகமணி துசாந்தன் (வயது 12)

ஆகியோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளையில் மாத்தளன் கடற்பரப்பில் பொருட்களை இறக்கிக் கொண்டிருந்த கப்பலை நோக்கி சிறிலங்கா படையினர் ஆர்பிஜி உந்துகணை தாக்குதல் மற்றும் கனரக துப்பாக்கிச்சூட்டுத் தாக்குதலை நடத்தினர்.

இதில் கரையோரத்தில் நின்ற இரு சிறுவர்கள் உடல் சிதறி படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

சத்தியமூர்த்தி குணாளன் (வயது 10)

நாகலிங்கம் பாலகிருஸ்ணன் (வயது 16)

ஆகியோர் இரண்டு சிறுவர்களே படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

அதேவேளையில் சிறிலங்கா வான்படையின் எம்ஐ - 24 உலங்குவானூர்தி இன்று நடத்திய தாக்குதலில் 2 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 15 பேர் படுகாயமடைந்தனர்.

வைரமுத்து செல்வரத்தினம் (வயது 55)

விசுவலிங்கம் கனகரத்தினம் (வயது 65)

ஆகியோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

Comments