இளந்தமிழர் இயக்கம் நடத்திய தமிழீழ ஆதரவு பரப்புரைப் பயணம் (25.02.09 - 06.03.09)

ஈழத்தமிழர் இனக்கொலையை இணைந்து நடத்தும் இந்திய அரசைக் கண்டித்து மாவீரன் முத்துக்குமார் உள்ளிட்ட தமிழ் இளைஞர்கள் உயிராயுதம் ஏந்தி தன்னுடலை தீக்கிரையாக்கினர். முத்துக்குமாரின் எழுச்சி மிகு இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற தேர்தல் கட்சிகளை சாராத உணர்வுள்ள மாணவர்கள், இளைஞர்கள் சிலர் ஒன்று கூடி “இளந்த்தமிழர் இயக்க்கம்” அமைத்தனர். இவ்வியக்கத்தின் முதல் வேலைத் திட்டமாக தமிழீழ ஆதரவுப் பரப்புரைப் பயணம் நடத்தினர்.

25-02-09 காலை தஞ்சை கமலா திரையரங்கு அருகில் நடந்த விழாவில் பயணம் தொடக்கி வைக்கப்பட்டது. திரைப்பட இயக்குநர்கள் மணிவண்ணன், ஆர்.கே.செல்வமணி, எழுத்தாளர் தூரன் நம்பி, ஓவியர் புகழேந்தி உட்பட பல தலைவர்கள் தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பரையாற்றினர். வட தமிழ்நாடு நோக்கி ஒரு அணியும், தென் தமிழ்நாடு நோக்கி ஒரு அணியும் பரப்புரைப் பயணம் மேற்கொண்டது வட தமிழ்நாடு நோக்கிச் சென்ற அணிக்கு தோழர் ம.செந்தமிழன் தலைமை தாங்கினார். தென் தமிழ்நாடு நோக்கிச் சென்ற அணிக்கு இளந்தமிழர் இயக்க செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் சேசுபாலன் ராஜா, வழக்கறிஞர் செபா கௌதம் ஆகியோர் தலைமை தாங்கினர்.

வட தமிழ்ந்நாடு அணி
இவ்வணி பாப்பாநாடு, மன்னார்குடி, திருத்துறைப்பு+ண்டி, வேதாரண்யம், திருவாரூர், குடவாசல், நாச்சியார் கோவில், குடந்தை, மயிலாடுதுறை, ஏ.வி.சி.கல்லூரி, சீர்காழி, வல்லம்படுகை, சிதம்பரம், சாக்காங்குடி, காட்டுமன்னார்கோவில், கடலூர், நெல்லிக்குப்பம், விழுப்புரம், திருவண்ணாமலை, பேர்ர், களம்பு+ர், வேலூர், ஆம்பு+ர், சோலையார்பேட்டை, ஓசூர், காவேரிப்பட்டினம், பெண்ணாகரம், தர்மபுரி, மேட்டூர், இளம்பிள்ளை, ஏற்காடு வழியாக சேலத்தில் தமது 10 நாள் பரப்புரைப் பயணத்தை நிறைவு செய்தது.

தென் தமிழ்ந்நாடு அணி
செங்கிப்பட்டி, காமாட்சிபுரம், தச்சங்குறிச்சி, ஆகாசங்கோட்டை, கந்தர்வக்கோட்டை, புதுக்கோட்டை, பொன்னமரவாதி, திருப்பத்தூர், காரைக்குடி, ஆலங்குடி, வடகாடு, கீரமங்கலம், கொத்தமங்கலம், அறந்தாங்கி, கோட்டைப்பட்டினம், மீமிசல், தொண்டி, தேவிப்பட்டினம், இராமேசுவரம், இரமநாதபுரம், தூத்துக்குடி, வடக்கு ஆத்தூர், தெற்கு ஆத்தூர், கொழுவநல்லூர், குரும்பு+ர், திருச்செந்தூர், தென்திருப்பேரை, ஆழ்வார் திருநகரி, கருங்குளம், செய்துங்கநல்லூர், நெல்லை, தென்காசி, முள்ளிக்குளம், திருவில்லிப்புத்தூர், வத்திராயிருப்பு, தம்பிப்பட்டி, அயன்கரிசல்குளம், திருமங்கலம், திருப்பரங்குன்றம், பழங்கானத்தம், முதன்மை வீதிகள், பெத்தானியாபுரம், உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, தேனி, அல்லி நகரம், பெரியகுளம், தேவதானப்பட்டி, வத்தலகுண்டு, பள்ளப்பட்டி, கொடை ரோடு, திண்டுக்கல், எரியோடு, கோவிலூர், குஜிலியம்பாரை, கூடலூர், ஈரோடு, கோபி, கவுந்தப்பாடி, குன்னத்தூர், சேவக்கவுண்டனூர்,பெரிய புலியு+ர், காளிங்கராயன் பாளையம், பவானி, குமாரபாளையம் வழியே 10 நாள் பயண முடிவில் சேலம் மாநகரை அடைந்தது.

இரண்டு பயணக்குழுவினரையும் அங்கங்கே த.தே.பொ.க., பெரியார். தி.க., விடுதலைச் சிறுத்தைகள், ம.தி.மு.க., பா.ம.க., இந்தியக் கம்யு+னிஸ்ட் கட்சி, த.தே.வி.இ., த.தே.இ., சி.பி.ஐ-எம்.எல்., வி.வி.மு., தமிழர் கழகம், குடந்தைத் தமிழ்ச் சங்கம் மற்றும் பல்வேறு தமிழ் அமைப்புகள், மக்கள் கண்காணிப்பகம் உள்ளிட்ட மனித உரிமை அமைப்பினர் வரவேற்று உபசரித்து பரப்புரைகளுக்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்து தந்தனர். .

இன எழுச்ச்சி மாநாடு
மார்ச் 6 அன்று மாலை சேலம் போஸ் மைதானத்தில் இன எழுச்சி மாநாடு சிறப்பாக நடந்தேறியது. இசைநிகழ்ச்சியுடன் மாநாட்டு நிகழ்வுகள் தொடங்கின. இளந்தமிழர் இயக்க செயற்குழு உறுப்பினர் இராஜாராம் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். பெ.தி.க. மாவட்டச் செயலாளர் ப.பாலு வரவேற்புரையாற்ற இளந்தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளர் க.அருணபாரதி தலைமை தாங்கினார்.

ஈழத்தமிழர்களுக்காக தன்னுயிரைத் தீக்கிரையாக்கிய மாவீரன் முத்துக்குமாரின் பாட்டி, வேலூர் சீனிவாசனின் அம்மா ஆகியோருக்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் பெ.மணியரசன் பொன்னாடை அணிவித்தார். இளந்நதமிழர் இயக்கம் சார்பில் முத்துக்குமாருக்கு மணி மண்டபம் கட்டப்பட்டு அதில் தீக்குளித்த ஈகியர் அனைவருக்கும் நினைவுச் சின்னங்கள் எழுப்பப்படும் என்று செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் நல்லதுரை அறிவித்தார்.

இளந்தமிழர் இயக்க நிர்வாகக் குழு உறுப்பினர் வழக்கறிஞர் செபா கௌதம், மற்றும் தோழர் ம.செந்தமிழன் உரையாற்றினர். காங்கிரசை ஆரிய இனவெறிக் கட்சி என்று பிரகடனப்படுத்தியும், புலிகள் மீதான தடையை நீக்கி ஈழவிடுதலைப் போரை அங்கீகரிக்க வேண்டும் என்றும், கைது செய்யப்பட்டுள்ள இயக்குநர் சீமான், கொளத்தூர் மணி ஆகியோரை விடுதலை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பயணத்தில் “காங்கிரசுக்கு வாக்களிக்க மாட்டோம்” என்று பொதுமக்களிடம் வாங்கிய 1 லட்சம் கையெழுத்துகள் கொண்ட படிவங்களை மேடையில் முன்வைத்தனர். ஓவியர் புகழேந்தி, எழுத்தாளர் தூரன் நம்பி, இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம், பெ.தி.க. பொதுச் செயலாளர் கோவை கு.ராமகிருட்டிணன், த.தே.வி.இ.; பொதுச் செயலாளர் தியாகு, த.தே.பொ.க. பொதுச் செயலாளர் பெ.மணியரசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாநாட்டின் இறுதியில் தோழர் பிந்து சாரன் நன்றி கூறினார்.

(விரிவிற்கு காண்க ).

Comments