![](http://www.puthinam.com/d/p/2009/apr/lr/vanni_20090423.jpg)
வலைஞர்மடம், அம்பலவன்பொக்கணை ஆகிய பகுதிகள் மீது மீது சிறிலங்கா படையினர் இன்று வியாழக்கிழமை செறிவான எறிகணை, ஆர்பிஜி உந்துகணை மற்றும் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
இத்தாக்குதலில் காயமடைந்த கியூடெக் கரித்தாஸ் நிறுவன பணிப்பாளர் அருட்திரு வசந்தசீலன் அடிகளார் தனது கால் ஒன்றை இழந்துள்ளார்.
சிறிலங்கா படையினரின் தாக்குதல்களில் படுகொலை செய்யப்பட்டவர்களில் 87 பேரின் உடலங்கள் முள்ளிவாய்க்கால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
கடந்த மூன்று நாட்களில் கத்தோலிக்க திருச்சபையின் முன்று அருட்தந்தையர்கள் காயமடைந்துள்ளனர் என்று புதினத்தின் வன்னிச் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
Comments