வன்னியில் தொடரும் தமிழின அழிப்பு தாக்குதல்: இன்றும் 29 தமிழர்கள் படுகொலை

வன்னியில் சிறிலங்கா படையினர் தொடர்ச்சியாக நடத்தி வரும் தமிழின அழிப்புத் தாக்குதலில் இன்றும் 29 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 31 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதிகளான மாத்தளன், அம்பலவன்பொக்கணை மற்றும் வலைஞர்மடம் பகுதிகளில் இன்று சனிக்கிழமை காலை தொடக்கம் மாலை வரை சிறிலங்கா படையினர் தொடர்ச்சியாக ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை, மோட்டார், பீரங்கி, ஆர்பிஜி உந்துகணை மற்றும் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களை நடத்தினர்.

இதில் 29 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 31 பேர் படுகாயமடைந்துள்ளனர்.







கொல்லப்பட்டவர்களில் அடையாளம் காணப்பட்டோர் பெயர் விபரம் வருமாறு:

சின்னத்தம்பி சசிக்குமார் (வயது 28)

பெருமாள் பெரியசாமி (வயது 55)

சசிக்குமார் சின்னச்சாமி (வயது 28)

சா. இராசபூபதி (வயது 60)

வல்லிபுரம் சுதர்சன் (வயது 32)

தமிழ்ச்செல்வன் தயாநிதி (வயது 11)

பாலகரன் விஜயகுமாரி (வயது 30)

ஐயம்பிள்ளை கோபாலசிங்கம் (வயது 47)

முருகையா நகுலேஸ்வரன் (வயது 25)

விஜயரட்ணம் கிருஸ்ணவேணி (வயது 32)

முருகேசு விமலேந்திரன் (வயது 30)

கேதீஸ்வரன் ஜெனிசா (வயது 12)

முகுந்தன் சாருயன் (வயது 14)

பாக்கியநாதன் கம்சனா (வயது 12)

காத்தலிங்கம் பாலன் (வயது 13)

கேதாரம் வேதாரணியம்பிள்ளை (வயது 32)

பாலசிங்கம் கனிஸ்டன் (வயது 18)

மேகன் முருகானந்தம் (வயது 28)

காத்தமுத்து பவிசன் (வயது 10)

முருகானந்தம் தவராசா (வயது 09)

முத்துலிங்கம் பவித்திரா (வயது 08)

கபிலன் ரூபன்ராஸ் (வயது 29)

இரத்தினம் கந்தையா (வயது 40)

முத்தையா பாஸ்கரன் (வயது 39)

பாஸ்கரன் கேதுசா (வயது 13)

முனியாண்டி கிருஸ்ணவேணி (வயது 24)

தம்பையா மதியாபரணம் (வயது 35)

ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் இருவரின் பெயர் விபரம் கிடைக்கப்பெறவில்லை.






Comments