முள்ளிவாய்க்கால் வடக்குப் பகுதி மோதல்களில் 350 படையினர் பலி! 700 படையினர் காயம்!

முள்ளிவாய்க்கால் வடக்குப் பகுதியி்ல் சிறீலங்காப் படையினர் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய முறியடிப்புத் தாக்குதல்களில் 350 வரையான சிறீலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 700 வரையான படையினர் காயமடைந்துள்ளனர் என விடுதலைப் புலிகளின் உத்தியோகபூர்வ வானொலியான புலிகளின் குரல் வானொலி அறிவித்துள்ளதாக தமிழ்நெட் இணையத் தளம் தெரிவித்துள்ளது.

இதேநேரம் இன்று வியாழக்கிழமை சிறீலங்காக் கடற்படையினர் மேற்கொண்ட தரையிறக்க முயற்சி ஒன்று கடற்புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ள என வன்னியில் இருந்து கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன.

அத்துடன் நிமிடம் ஒன்றுக்கு 10 எறிகணைகள் மக்கள் பாதுகாப்பு வலயம் வீழ்ந்து வெடிக்கின்றன. இன்றும் முள்ளிவாய்க்கால் மருத்துவமனைப் பகுதியிலும் எறிகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted by எல்லாளன் on 2:39 PM. Filed under . You can follow any responses to this entry through the RSS 2.0

0 comments for முள்ளிவாய்க்கால் வடக்குப் பகுதி மோதல்களில் 350 படையினர் பலி! 700 படையினர் காயம்!

Post a Comment

EelamView

EMAIL

tamilthesiyam@gmail.com

2010 Tamilthesiyam. All Rights Reserved.