சிறிலங்கா அரசின் 48 மணிநேர யுத்தநிறுத்த அறிவிப்பும் அதன் பின்னணியும்

இன்று இனவாத அரசு போர் ஓய்வை 48மணித்தியாலம் முன் நிறுத்தியதன் சாரம்,அதை தெளிவாகவே கூறியுள்ளதை நோக்கினால் அதில் கைகூடும் தன் நலம் அங்கே முன் நிலைப்படுத்தியதைதெளிவாகவேகாணலாம்.

இதில் ஒன்றும் இனவாத அரசு மறைப்பெதையும் செய்யவில்லை தன் நிலையில் தன்தனியரசு சார் புத்தாண்டு நோக்கியதான ,தன்ஆக்கிரமிப்பு இராணுவத்திற்கு ஓய்வு கொடுக்கவேண்டியதன் ஆளுமையை முன் நிலைப்படுத்தி மீண்டும் சர்வதேசத்திற்கு காது குத்தி கயமை புரிகின்றது. யதார்த்தம்என்னவென்றால்புத்தாண்டுவிடுமுறையென்றும்,தன்இனமக்களின் கேளிக்கையை விமர்சையாக தினவெடுக்கவிட்டு,வடபகுதி மக்களையும் வில்லங்கமாக,(ஒட்டுக்குழுக்களின் உதவியுடன்) தனது சிங்களப்புத்தாண்டை கொண்டாட வற்புறுத்துவதாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

இதில் உண்மைத்தன்மையை மறுதலிப்பின்றி ஏறுறுக்கொள்ள கடந்தகால பல நிகழ்வுகள் கட்டியம் கூறி நிற்கின்றன,கிளிநொச்சியை இராணுவம் வல் வளைப்பின் மூலம் தன்னகப்படுத்தியதையும்,வன்னியைவிட்டுபொதுமக்களை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியேற அனுமதிக்குமாறு வழமைபோல் ஒட்டுக்குழுக்களின் வல்லாண்மையுடன் மக்களை வலியுறுத்தி,இராணுவ மயமான பயத்தை ஏற்படுத்தி,ஒரு போலித்தனமா ஊர்வலத்தை நடத்திதன் விசுவாசத்தை மீண்டும் ஒருமுறைஇந்த ஒட்டுக்கழுகுகள் ஒப்பேற்றிக்கொண்டு தன்நிலையை நிலைப்படுத்திக்கொண்டது.

இவைகடந்தகாலயதார்த்தங்கள்,ஆனால்தற்போதையஇந்த48மணித்தியாலபோர்நிறுத்தம்,இராணுவம்தன்னைஆசுவாசப்படுத்தி,தன்பாரியஇழப்புக்களை,மறைத்து இராணுவ தேவையை இட்டு நிரப்ப தனக்கு தேவைப்படும் இந்த நேர இடைவெளியை பயன்படுத்துகின்றது ,அஃதின்றிதான்எந்தஇழப்புக்களும் தனதானபடைக்கு இல்லையென்றால் இரசாயன, விஷக்குண்டுகளை பயன்படுத்ததேவையே இருந்திருக்காது,

இதுகளயதார்த்தம்.இதன்மூலம்விடுதலைப்புலிகளிற்குபாரியசேதம்என்றதனதானபிரச்சாரம்மலினப்படுத்தப்பட்டுள்ளது,அதாவது தானே தனக்கு தன் தலையில் மண் அள்ளிப்போட்டுள்ளது,இதன் சாரம் யாதென நோக்கினால் தனதான ஊடகபிரசாரங்கள்மூலம் புலம் பெயர் மக்களின்உளவுரணை சிதைப்பதையே மையப்படுத்தி வலங்கொள்கின்றது.

இதன் சாரம்மிகவும்தெளிவானதுஅதாவதுகளத்தில்போரைபலப்படுத்துவதில் மட்டுமல்ல, புலத்தில் சர்வதேசம் நோக்கிய பிரச்சாரங்களைமுன்னெடுப்பது வரை தமிழர்களாகிய புலம்,பலம் தாங்கிய புலம் வாழ் மக்களாகிய எங்கள் கைகளிலே உள்ளதென்பது ஒன்றும் பரமரகசியம் இல்லை,

ஆக அடிப்படை இந்தஅம்புவீச்சுஎங்களைநோக்கியேகுறிகொள்ளப்படுத்ப்படுகின்றது,இன்றைய நேயர்அவர்ஒருமருத்துவர்என்பதுமுக்கியமாககவனத்தில்கொள்ளப்படவேண்டியது அவசிமாகின்றது,அவர் இன்று வானொலியில் தனதான பார்வையை பகிரும்போது குறிப்பிட்ட முக்கியவிடயம் கீழே.

அதற்குமுன்இந்தஇடுகையைநான்கையில்கரம்கோர்க்க,இந்தமருத்துவரின்நியாயமானவாதம்,அத்துடன் நான் நெருடல் என்ற இணையத்தளத்தில் பார்த்தசிலஒளிப்படங்களும்,அதன் சார்பாக ஒளிப்படநிபுணர்கள் முன் வைத்த ஆதாரங்களும் என் ஆக்கத்திற்கு வலு சேர்க்க,இதோ இன்று மருத்துவர் தந்த சிறு ஆனால் ஆளுமைமிக்க ஆதாரம்,

இறந்தஉடலங்களைஎந்தஒருமருத்துவராலும்உடனேஅடையாளப்படுத்தமுடியும்,அது இறந்து எவ்வளவு காலம் என்பதையும்,அது ஒளிப்படமாகஇருந்தாலும்கூட,அதேபோல்தான் ஒளிப்படங்களிலும் அதை அடையாளப்படுத்தமுடியும்.

இராணுவம் களத்தில் ஏற்கெனவே வீரமரணம் அடைந்த மாவீர்ர்களின், சில உடலங்களையும்,பொது மக்களின் பல உடலங்களையும் ஒளிப்படமாக்கி தனதான வால் பிடி ஊடகங்களிலும் தன் வினைசார் இணையங்களிலும் வெளியிட்டு தான் ஏதோ மகத்தான வெற்றியீட்டியுள்ளதாக ஒரு மாயப்பிரம்மையை தனது சிங்கள மொட்டையர்களிற்கும்,தனது ஒட்டக்குழு மூலம் தங்களையும் தமிழ் ஊடகங்கள என தம்பட்டம் அடிக்கும் வால்பிடி ஊடகம்மூலம்பரப்புரைத்துதம்மைதாமேஏமாற்றியதோடுமட்டுமில்லாமல்,தனதான மக்களையும் ஏமாற்றி,இது ஒன்றும் எங்களிற்கு தேவையற்ற சமாச்சாரங்கள் என நாம் ஒதுக்கமுடியாது,காரணமே இங்குதான் மையம் கொள்கின்றது,

எமது விடுதலைசார் சில மக்கள் இந்த ஊடகங்களை பார்த்து மனச்சோர்வடைவதை,இன்றும் நான் எனதான சொந்த அனுபவமாக காண்கின்றேன்.உண்மையில் கள யதார்த்தம் யாரும், ஏன் நானும்கூடத்தான் எந்த ஒரு ஊகங்களயும் வைத்து கட்டுரை எழுதமுடியாது.கள யதார்த்ம் அதை கையாளும்,அல்லது அங்கு வதியும் வன்னி மக்கள் அவர்கள் கூட சரியானகளநிலைகளை கூறுவார்களோ யான் அறியேன்.

எங்கள் ஆக்கங்கள் எமை ஆசுவாசப்படுத்த யாரும் கையாளுவதில்லை,பலஊடகவியலாளர்கள் தமது ஊகங்களையும் மேலும் தமதான களநிலைத்தொடர்பான சில ஊடகர்களின் தொடர்புகளையும் முறையாக கையாண்டு தங்களது சிறப்பான,ஆதாரமான,யதார்த்தமான செய்திகளை தருகின்றார்கள்.ஆனால்தற்போதையகளநிலையையாரும்விதந்துரைக்கமுடியாது,எனபதுதான் உண்மை.

ஆயினும் களத்தில் இராணுவம் எக்கச்சக்கமான பேரிழப்பை சந்தித்துள்ளது என்பது நடைமுறை உண்மை,இல்லையெனில் ஆக்கிரமிப்பு இராணுவம் ஏற்கெனவே வன்னி முழுவதையும் கைப்பற்றியிருக்கும்.அத்துடன் பேரினவாதி தனியனாக புலிகளுடன் மோதி வெற்றி பெறுவதென்பதுஎன்றுமேபகல்கனவாத்தான்இருக்கும்.இப்போதுமட்டுமென்னஇராணுவம்சீனா,இந்தியா,பாகிஸ்த்தான்,அமெரிக்கா,பங்களாதேசம்,ஈரான்,இன்னமும் பல நாடுகளின் கருவிகளுடனும்,இந்தியாவின் நேரடியானபலவகையான இயங்குதளத்துடன் மோதியும் தனது எந்த குறிக்கோளையும் அடையமுடியாமல் பொது மக்களை நரபலியெடுத்து,சோனியாவிற்கு ஓமம் வளர்த்து யாகமாக்குது,இந்த வேள்வியின் மூலம் இந்தியாவோ,மகிந்தாவோ உற்ற பலன் அடையப்போவதில்லை என்பதை காலம் விரைவின் களமாக்கும் என்பது உறுதி.

அதாவது இந்த வல் வளைப்பு மூலம் இலங்கை ராணுவம் கண்டதெல்லாம் மனித அவலங்களும் தன் இராணுவ இழப்புக்களும்,இலங்கையில் பொருளாதார இழப்புக்களும்,மறு புறமாக பார்த்தால் தமிழர்களின் பாரம்பரிய நிலங்களை வல் வளைப்பச் செய்து சிறுவர்,பெரியோர்,பிஞ்சு,பெண்கள்,இப்படியாக எங்கள் இன மக்களை பேரழிவிற்கு உள்ளாக்கி,பேரவலம் தந்தும்,பெருவாரியான மக்களை பல் குழல் எறிகணைமூலம் படுகொலை செய்து,தன் வலயத்திற்குள் மக்களை படுகாயத்திற்கு உள்ளாக்கி எடுத்ததன் மூலம் பெண்களை வல்லுறவுகளிற்கு உட்படுத்தி,ஆண்களை படுகொலை செய்து,பாரிய இனவழிப்பை செயததன் மூலம் தமிழரின் இன விருத்தியையும்,அவலப்படுத்தி பேர் அநியாயம் விளைத்துள்ளது.

இதில் முக்கியமாக புலிகளின் பல முனைத்தாக்குதல் மூலம் தன் 58,59,போன்ற போரிடும் சக்தியாக கருதப்பட்ட பல அணிகள் பாரிய இழப்புக்களை சந்தித்து போரிடும் ஆற்றலை அறவே இழந்து இன்று இரசாயன,விஷக்குண்டுகளை வீசி பேரழிவை மக்களிற்கு ஏற்படுத்தி தானும் அதில் மாண்டு,இன்று தன் நிலையை சீராக்க புத்தாண்டிற்கான போர் நிறுத்தம் எனக் கூறி தன்னை அடுத் கட்ட இன அழிப்பிற்கு தயார் நிலைப்படுத்த இந்த கால கட்டத்தை பயன்படுத்தும் என்பதே கள நிலையாகும்.

இந்த அர்த்தமற்ற போர் நிறுத்த அறிவிப்பிற்கு வழமைபோலவே புலிகள் தமதான எந்த எதிர் வினையையும் ஆற்றாமல் தங்களின் அடுத்தகட்ட நகர்வுகளிற்கு வழமை போலவே சீர்படுத்தி மீண்டும் தற்பாதுகாப்பிற்கான தமது நிலைகளை நேர் செய்வார்கள் என்றே கருத இடமுள்ளது.ஆயினும் தொடரும்களநிலை விரைவில் பாரிய மாற்றத்தை தமிழீழப்புலிகள் சார்பான தளத்தை ஏற்படுத்தும் என்று தாராளமாகவே எதிர்பார்க்கலாம்.

--தும்பையூரான் -----

Comments