பிரித்தானியாவில் தமிழர்களால் தொடர்ச்சியாக நடத்தப்படும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் வெஸ்ட்மினிஸ்ரர் பாலம் அமைந்துள்ள பகுதியிலேயே இந்த இளைஞர்கள் இருவரும் தமது சாகும் வரையான உண்ணாநிலைப் போராட்டத்தை தொடங்கினர்.
1) சிறிலங்காவில் உடனடியாக நிரந்தரமான போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும்
2) ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான்கீ மூன் அல்லது பிரித்தானியப் பிரதமர் கோடன் பிறவுண் தங்களை நேரில் சந்தித்து தமிழர்களின் இனப்பிரச்சினை குறித்து பரிசீலித்து உறுதிமொழி வழங்க வேண்டும்
3) வன்னியில் சிக்கியுள்ள மக்களுக்கு உடனடி உணவு மற்றும் மருந்துப் பொருட்களை அனுப்பி வைக்க வேண்டும்
4) இலங்கையில் தமிழர்கள் சிங்கள மக்களுடன் ஒருங்கிணைந்து வாழ்வதா அல்லது தனித்து நாடு அமைப்பதா என்பதை அறிய ஐ.நாவின் ஏற்பாட்டில் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்
5) தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை உடனடியாக நீக்க வேண்டும்
ஆகிய ஐந்து அம்சக் கோரிக்கைகளையே மேற்படி இருவரும் முன்வைத்து தமது சாகும் வரையான உண்ணாநிலைப் போராட்டத்தை தொடங்கியிருக்கின்றனர்.
இவர்களது சாகும்வரையான உண்ணாநிலைப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் பகுதியில் துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
தமிழ் இளைஞர்கள் இருவர் தொடங்கியுள்ள இந்த சாகும் வரையான உண்ணாநிலைப் போராட்டத்தால் பிரித்தானியாவில் இடம்பெற்று வரும் தமிழர்களின் எழுச்சி ஒரு கொந்தளிப்பு மிக்க நிலையை எட்டியிருக்கின்றது.
உண்ணாநிலைப் போராட்டத்தை தொடங்கியவர்களின் பெயர் விபரம் உடனடியாக வெளியிடப்படவில்லை.
Comments