விடுதலைப் புலிகளின் ஊடறுப்புத் தாக்குதலில் 8 கிலோமீற்றர் வரையான காவலரண்கள் தாக்கியழிப்பு

தமிழீழ விடுதலைப் புலிகளால் ஊடறுப்புத் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு புதுக்குடியிருப்பின் கிழக்கு மற்றும் வடகிழக்கில் அமைந்துள்ள சிறீலங்காப் படையினரின் முன்னணி நிலைகளே விடுதலைப் புலிகளின் ஊடறுப்புத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது.

கடந்த ஞாயிறு இரவு இப்பகுதிகளுக்குள் ஊடுருவிய விடுதலைப் புலிகளின் சிறப்பு அணிகள் பெட்டி வீயூகம் அமைந்து மறுநாள் திங்கட்கிழமை மதியம் வரை படையினர் மீது தாக்குதலைத் தொடுத்துள்ளனர்.

பலமணி நேர மோதல்களின் பின்னர் சிறீலங்காப் படையினரின் முன்னரங்க நிலைகள் நோக்கி 500 மீற்றர் முன்னகர்ந்த விடுதலைப் புலிகள் பக்கவாட்டாக வலதுபுறம் 8 கிலோ மீற்றர் வரையான காவலரண்கணை தாக்கி அழித்து, குறித்த பிரதேசங்கள் தமது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

ஊடறுப்புத் தாக்குதலை தளபதி கேணல் பாணு தலைமையில் விடுதலைப் புலிகளின் முன்னணி தாக்குதல் அணிகளுள் ஒன்றான சாள்ஸ் அன்ரணி படையணியே நடத்தியுள்ளது.

இந்த ஊடறுப்புத் தாக்குதலில் சிறீலங்காப் படையினருக்கு பலத்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அத்துடன் பெருந்தொகையான படைக்கருவிகளையும் விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்டுள்ளன.

விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாத சிறிலங்காப் படையினர் அங்கிருந்து தப்பியோடிபோதும் அவர்கள் மீது படைத் தளபதிகளின் உத்தரவுக்கமைய துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. இதிலும் பல படையினர் கொல்லப்பட்டதாக விடுதலைப் புலிகள் தரப்புச் செய்திகள் மேலும் தெரிவித்துள்ளன.

Comments