8 மாத கைக்குழந்தை மருந்து இல்லாத காரணத்தால் பரிதாபமாக உயிரிழந்தது

முல்லைத்தீவில் தற்போது மிஞ்சி இருக்கும் தமிழர்கள் மீது இலங்கை அரசானது மருந்து தடைகளையும் விதித்துவருகிறது. பிறந்து 8 மாதமான கைக்குழந்தை வாந்திபேதியால் அவதிப்பட்டு போதிய மருந்துகள் இன்றி பரிதாபமாக துடிதுடித்து இறந்துள்ளது.

குழந்தையின் கண்கள் செருக, கைகள் கால்கள் குளிர, கொஞ்சம் கொஞ்சமாக மழலையின் உயிர் பிரிய செய்ய ஏதுமின்றி பிள்ளையை இறுக கட்டி அனைத்தபடி இருக்கும் இந்த தாயின் நிலை எவருக்கும் வரக்கூடாது...

Comments