பிரித்தானியா வாழ் தமிழ் மக்களுக்கு அவசர வேண்டுகோள், உடனே அணிதிரளுங்கள் பாராளுமன்றம் நோக்கி !!! எமது சிறுவர்கள் குழந்தைகள் , முதியோர் என பாராமல், பிரித்தானிய இராணுவ பொலீசார், இன்று காலை எமது தமிழ் உறவுகளை தூக்கி எறிந்து காயப்படுத்தியுள்ளனர்.
அமைதியாக சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த எமது உறவுகளை பலவந்தமாக தூக்கி எறிந்து அப்புறப்படுத்தியுள்ளது பிரித்தானிய பொலீஸ். எமது உறவுகளே உடனே உங்கள் வேலை அனைத்தையும் நிறுத்திவிட்டு பாராளுமன்றம் முன்பாக கூடவும்.
எமது பல உறவுகள் காயமடைந்துள்ள நிலையில் அங்கு தொடர்ந்தும் போராடிவருகின்றனர் அவர்களை நாம் கைவிடக்கூடாது. தோள்கொடுப்போம் , ஆகையால் விரைந்து வாருங்கள் உறவுகளே .
இன்று மழை பெய்யும் சாத்தியம் இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளதனால், அதற்கும் ஆயத்தமாக வாருங்கள்,
தொடர்ந்தும் அமைதிவழியில் எமது போராட்டத்தை முன்னெடுப்போம் ! அனைத்து பிரித்தானிய தமிழ் உறவுகளும் வந்து கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுக்கின்றனர்.
பாராளுமன்றம் முன்பாக அமைதியாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தமிழர்கள் மீது போலீசார் அராஜகம் சிறுவர் குழந்தைகள் அனைவரும் தூக்கி எறியப்பட்டனர்
Comments