இந்த சின்னம் சிறுசுகளும் இளைஞரும் குடும்பங்களும் ஒன்று திரண்டு இளையோரின் தலைமையில் உலகின் ஆன்மாவை தட்டிக்கேட்கும் இப்போராட்டம் எமது விடுதலைப்பயணத்தின் மைற்கல்.
அன்று எப்படி தலைவர் பிரபாகரன் தலைமையில் இளைஞர் படை களப்போரை ஆரம்பித்ததோ அதேபோல இவ் இளையோர்படை .லண்டனில் உலகின் மனட்சாட்சியை தட்டி உலகின் அதிகார மையத்தில் இராசதந்தர சமரை ஆரம்பிததுள்ளது.
இவ்இளையோருக்கு எம்சமூகம் வரலாற்று கடன்பட்டுள்ளது. கலகம் அடக்கும் காவல்துறை தமிழீழ தேசியக்கொடியை பறிக்க ‘என்னைக் கொல் ஆனால் என்னிடம் இருந்து தேசியக் கொடியை பறிக்க முடியாது’ என்று தேசியத்திமிருடன் நிமிர்ந்து நிற்கும் இவ் இளையோரும் போராளிகளே.
உலகமே எமை எதிர்த்து இனப்படுகொலை யுத்தத்தை செய்கையில் எம்முற்சந்ததி சேர்.பொன் இராமநாதன்கள் போல் அடிபணிந்து சொற்கேட்டு பட்டம் பெறும் சரிதம் அழிந்து விட்டது.
உலகின் மக்களாட்சியின் தொட்டிலில் எழுந்து நீதிகேட்கும் இளையோர் இன்னு
ம் வலிமையாக விட்டுக்கொடுப்பின்றி போராடிக்கொண்டிருக்கையில் புலம்பெயர் தமிழரின் புதிய தலைமைத்துவம் அவர்களின் கைகளில் சென்றடைவது தவிர்க்கமுடியாததும் கூட.
எமது சுதந்திரம் யாரால் சூறையாடப்பட்டதோ எந்த அரசின் கீழ்த்தரமான இராசதந்திர நகர்வுகளால் எமது போராட்டம் பின்னடைவுகளை சந்தித்ததோ அவ் அரசின் இயங்கு புள்ளியில் அந்த நாட்டு பிரசைகளாக நீதி கேட்டு நிற்கும் இவ் இளையோரின் உறுதி கண்டு எமது சமூகம் புல்லரித்துப்போயுள்ளது.
இப்போராட்டம் பிரித்தானியாவின் தமிழர் தொடர்பான இரட்டைவேட அணுகுமுறையை மாற்றும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. பிரித்தானியப்பிரதமர் தமிழ்பெரியோரை சந்தித்து ‘நான் கட்டாயம் நடவடிக்கை எடுப்பேன்’ என்ற வாக்குறுதி கொடுப்பதும் அவரின் ஐநா பிரதிநிதிகளும் புலனாய்வு துறையும் எமக்கு கொள்ளிசெருகுவதுமான துன்பியல் இராசதந்திரம் நிறுத்தப்படும் வரை இவ்இளையோரின் இராச தந்திரப்போர் நடக்கவேண்டியது வரலாற்று அவசியம். மற்றைய நாட்டு இளையோரும் இவர்கள் வழிநின்று போராட்டங்களை முன்னெடுக்கவேண்டியது இக்கணத்தின் கடைமை.
செ.நதிமகள்
Comments