சர்வதேசத்தின் காத்திருப்பு நிறைவேறுமா?

ஆசியாவின் கடல் வழித் தலைவாசலில் அமைந்துள்ள மையப் புள்ளியை, தமது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர, சர்வதேச சமூகம் என்று அழைக்கப்படும் சில இராணுவ பொருண்மிய பலமிக்க நாடுகள். மேற்கொள்ளும் முயற்சிகளில் ஒரு பாரிய திருப்புமுனை ஏற்படப் போகிறது.

இதுவரை எதிர்நிலைச் சக்திகள் தமக்குள் முரண்படும் இந்தியா, சீனா, மேற்குலகம் போன்றவற்றின் ஒரேவிதமாகச் செயற்பட்டு வந்த இராஜதந்திர நகர்வுகள் மாற்றமடையும் நிலை எய்துவதை அவதானிக்கலாம்.
ஆதிக்க போட்டியில் புதிய களத்தினைத் திறக்கப் போகும் இம் முரண் நிலைச் சக்திகள், இன்னமும் முற்றுப் பெறாத சில விவகாரங்கள் குறித்து காத்திருப்பது போல் தெரிகிறது.

வன்னி மக்களின் முழுமையான வெளியேற்றமும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசம் அற்ற நிலையும் முதலில் ஏற்பட வேண்டுமென்பதே இந்த ஏகாதிபத்தியங்களின் விருப்பு.

புலிகளின் பிரதேசம் என்று ஒன்று இல்லாத நிலையில் சுய நிர்ணய உரிமைப் போராட்டத்திற்கான அரசியல் தளமொன்று அகற்றப்பட்டு விடுமென்று இவர்கள் கணிப்பிடுகிறார்கள்.

அத்தோடு இராணுவக் கட்டுப்பாட்டு பிரதேசங்களுக்குள் மக்கள் நகர்த்தப்பட்டால் புலம் பெயர் நாடுகளில் ஏற்பட்டுள்ள எழுச்சி மழுங்கடிக்கப்படுமென்றும் எதிர்வு கூறப்படுகிறது.

ஆகவே, யுத்தம் முடிவுற்ற பின்னர் பேச்சுவார்த்தைகளிலோ அல்லது அரசியல் தீர்விற்கான முன்னெடுப்புகளிலோ ஆயுதப் போராட்டத்தை வழி நடத்தும் விடுதலைப் புலிகளின் வகிபாகம் இல்லாதெõழிக்கப்பட வேண்டுமென்கிற கருத்து நிலையில் இந்த ஏகாதிபத்தியங்கள் யாவும் ஒன்றுபட்டு நிற்பதைக் காணலாம்.

சமாதான கால பிற்பகுதியில் பூரணமாக தன்னை உள்நுழைத்துக் கொண்ட இந்திய வல்லாதிக்கமானது, பிராந்திய நலன் பேண விளையும் ஏனைய வல்லரசுச் சக்திகளை வெட்டி ஓடி, இலங்கைக்கான படைக்கல நிதி உதவிகளை தொடர்ச்சியாக வழங்கி வருவது எல்லோருக்கும் தெரியும்.

ராஜீவ்காந்தி விவகாரத்தை முன்னிலைப்படுத்தியே, உலகின் பார்வையை சிதைத்து இவர்களால் காலூன்ற முடிந்தது. அதேவேளை மேற்குலக அழுத்தங்களைப் புறந்தள்ளவும், விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக தோற்கடிக்கவும் இந்திய ஆதரவினைப் பெற்றுக் கொள்ள இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் தந்திரோபாய நகர்வுகளை எளிதில் புரிந்து கொள்ளலாம்.

வன்னிப் பேரவலத்தால் கிளர்ந்தெழுந்த புலம்பெயர் தமிழ் மக்களின் எழுச்சி, ஐ.நா.

வின் பாதுகாப்புச் சபை வரை, இவ்விவகாரத்தை கொண்டு செல்லுமென்கிற கணிப்பினை உள்வாங்கிக் கொள்ளும் இலங்கை, அதனை முறியடிக்க இந்தியாவின் பேருதவியை தற்போது நாடுகிறது.

அதனைப் புரிந்து கொள்ளும் இந்திய அரசு, இலங்கை அரசாங்கத்திற்குச் சார்பான இராஜதந்திர காய் நகர்த்தல்களை, மிக நுணுக்கமாக கையாளுகின்றது.

ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ ?னின் விசேட பிரதிநிதி விஜய் நம்பியார், இலங்கைக்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு, புதுடில்லி யில் ?ன்று நாட்கள் தங்கியிருந்து சில திட்டங்களை வகுத்திருப்பதாகவும் உள் தகவல்கள் தெ?விக்கின்றன.

பாதுகாப்புச் சபையில் ஒளித்துப் பிடித்து விளையாடிய நம்பியார், இறுதியில் தனது விஜயம் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

காலத்தை இழுத்தடிக்க டில்லியிலும் நியூயோர்க்கிலும் மாயாவி வாழ்க்கை வாழ்ந்தவர், ஊடகங்களுக்குத் தனது முகத்தைக் காட்டாமல் மறைந்து விட்டார்.

ஒரு மாத காலத் தலைவரும் மெக்சிகோ நாட் டவருமான குளோட் ஹெல்லர் கருத்துக்கள், பிரணாப் முகர்ஜியுடன் நம்பியார் நடத்திய மந் திராலோசனையின் தீர்மானங்களைப் பிரதிப லிப்பதாக அமைந்துள்ளதாக அரசியல் அவதானிகள் தெriவிக்கின்றனர்.

அதேவேளை மக்களை வெளியேற அனுமதித்து ஆயுதங்களைக் கீழே போட்டு, அரசியல் வாழ்வினுள் விடுதலைப் புலிகள் சங்கமிக்க வேண்டுமென்கிற கோ?க்கை ஐ.நா. பாதுகாப்புச் சபைத் தலைவரால் விடுக்கப்பட்டுள்ளது.

மேற்குலகின் சமாதானத் தூதுவர் எriக் சொல்ஹெய்muம் இதனையே முன்பு கூறியிருந்தார். விடுதலைப் புலிகளுக்கெதிரான போருக்கு முழு ஆதரவு எப்போதும் உண்டென மாவோவின் வாரிசுகள் அண்மையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் பிரதமரும் பொருளியல் நிபுணருமான மன்மோகன் சிங்கின் விடுதலைப் புலிகள் குறித்த பார்வையும் இவற்றிலிருந்து வேறுபடவில்லை.

அதாவது விடுதலைப் புலிகள் அழிக்கப்பட வேண்டிய சக்தி என்பதில், இந்த முரண் நிலைத் தன்மை கொண்ட ஏகாதிபத்தியவாதிகளிடம் ஒருமித்த கருத்து நிலையொன்று இருப்பதை தமிழ் மக்கள் உணர்ந்து கொள்கிறார்கள்.

இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு என்கிற விவகாரத்தை முன்னிலைப்படுத்தாமல் மனித அவலம் என்கிற விடயத்தை உயர்த்திப் பிடிக்கும் இந்த சர்வதேசம், இந்த அவலத்திற்கு விடுதலைப் புலிகளே காரணம் என்று அழுத்திச் சொல்வதனூடாக போராட்டத்தின் அடிப்படையை திசைதிருப்ப முயல்கிறது.

புலிகளின் இருப்பு அழியும்போது பிரச்சினைக்கான தீர்வு எட்டப்படும் என்பது போன்றதொரு மயக்கக் கருத்து நிலையை விதைக்க இவர்கள் முற்படுகிறார்கள்.ஆனாலும், இலங்கையில் இந்தியாவின் ஆதிக்கம் இறுக்கமடை வதை இந்த மேற்குலக சீனச் சக்திகளால் சகித்துக் கொள்ள முடியவில்லை என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

இலங்கை அரசாங்கத்திற்கு உதவிபுரியும் எதிர்நிலைச் சக்திகளிடையே உராய்வு நிலை தோன்ற ஆரம்பித்திருப்பதை ஐ.நா. பாதுகாப் புச் சபையில் நடைபெறும் திரை மறைவு கயிறு இழுப்புக்கள் உணர்த்துகின்றன.

மீத?ள்ள வன்னி நிலப்பரப்பையும் இராணுவம் கைப்பற்றி விட்டால் அடுத்து என்ன செய்வது என்பது குறித்தே விவாதங்கள் ஏற்கனவே ஆரம்பமாகிவிட்டன. இந்தியப் பிடிக்குள் இலங்கை ?ழுமையாகச் சென்றடைவதை மேற்குலகம் சீனாவும் ஏற்றுக் கொள்ள மாட்டா.

ஐ.நா. சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான பிரதிநிதிகளை பாதுகாப்பு வலயத்திற்கு அனுப்பி, தமது இருப்பினை அங்கு தக்க வைக்க மேற்குலகம் முயற்சிக்கலாம்.

பிõரன்சின் வெளிநாட்டமைச்சர் பெனாட் குச்னர் பி?த்தானிய வெளிநாட்டமைச்சரோடு இணைந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை நேரில் வழங்க முயற்சிகளை மேற்கொள்வதாக ஊடகச் செய்திகள் தெரிவித்தன.

தமிழர்களின் உ?மைப் போராட்டத்தின் அரசியல் தளம், புலம்பெயர்ந்த மேற்குலக தேசங்களுக்கு திருப்பப்பட்டுள்ள இவ்வேளையில் ?ரண்நிலைச் சக்திகளிடையே உருவாகும் முரண்பாடுகளுக்கும் இங்கு நடைபெறும் தொடர் போராட்டங்கள் காரணியாக அமைகிறது.

இங்கு இந்திய நகர்வுகள் குறித்த தெளிவான புவிசார் அரசியல் பார்வை மிக அவசியமானது. புலம்பெயர்ந்த மக்களுக்கும் மேற்குலக அரசுகளுக்குமிடையே முரண்பாடுகள் ஏற்பட வேண்டுமென்கிற இந்திய தந்திரோபாய உத்திகள், கூர்ந்து கவனிக்கப்பட வேண்டும்.

அதேவேளை புதிய அரசியல் தலைமை ஒன் றினை நிர்மாணிக்க, கடலடி நீரோட்டம் போன்று இயங்கிக் கொண்டிருக்கும், சில இந் திய ஆதரவுச் சக்திகளின் நகர்வுகளும் அவதா னிக்கப்பட வேண்டும்.

வருகிற 29 ஆம் திகதி கூட்டப்படவிருக்கும் ஐ.நா. பாதுகாப்புச் சபையின் திறந்த விவாதத் திற்கு ?ன்பாக இறுதி யுத்தத்தை நடத்த வேண் டுமென்கிற முனைப்பில் இந்திய அரசும், இலங்கை அரசும் உறுதியாக இருக்கின்றன

-சி.இதயசந்திரன்-

Comments