ஜோன் ஹோல்ம்சிற்கு வன்னித் தமிழர் பேரவையின் “திறந்த மடல்”

ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான பொறுப்புமிக்க செயலராகிய தங்களிடம் ஏன் இந்த பாரபட்சம் ? ஜோன் ஹோல்ம்சிற்கு வன்னித் தமிழர் பேரவையின் “திறந்த மடல்”

மொழிமாற்றம் பதிவு இணையத்தளம்

வன்னியில் தமிழ் மக்களின் நிலைக்கு முற்றிலும் மாறாக கருத்து வெளியிட்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான செயலர் கலாநிதி ஜோன் ஹோல்ம்ஸிற்கு, வன்னித் தமிழர் பேரவை “திறந்த மடல்” ஒன்றை கடந்த முதலாம் நாள் வரைந்துள்ளது.
இந்தக் கடிதம் வன்னி மக்களின் நிலை பற்றியும், அனைத்துலக சமூகத்தின் நடவடிக்கைகள் பற்றியும் அறிந்துகொள்வதற்கு மிகவும் முக்கியமானது என்பதால் வாசகர்களுக்கு அதன் மொழியாக்கத்தைத் தருகின்றோம்.

பெறுநர்:-

கலாநிதி ஜோன் ஹோல்ம்ஸ்
ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான செயலர்
ஒச்சா
யு.என்
ஜேனீவா
சுவிற்சர்லாந்து

பெருமதிப்பிற்குரிய ஐயா,

“திறந்த மடல்” PDF

ஜோன் ஹோம்ஸ் தன்னைத் தப்பிப்பிழைக்கும் தந்திரக்கலையில் வல்லோன் எனத் தானே நிரூபித்து நிற்கின்றார். முன்னர் ஒருதடவை ராஜபக்ச அரசாங்கத்தின் பொறுப்புவாய்ந்த அமைச்சரே அவரைத் தமிழீழ விடுதலைப்புலிகளிடம் பணம் பெறும் அவர்களின் முகவர் எனக் குற்றம் சாட்டியிருந்தார். இன்று அவரோ ராஜபக்சவின் முகவராகத் தானே தன்னை வெளிப்படுத்திக் கொள்ளுமளவுக்கு அந்த வகையில் தன்னுடைய அறிக்கைகளை வெளியிடுவதையே தன்னுடைய இலக்காகவும் நோக்காகவும் கொண்டு அண்மைக்காலங்களில் செயற்பட்டு வருகின்றார். வெறுமனே சிறிலங்காவின் பரப்புரை யந்திரத்திலிருந்து கிடைக்கும் ஆதார சான்றுகளற்ற அறிக்கைகளைக் கொண்டே தனது அறிக்கைகளை அளிக்கின்றார்.

வன்னி மக்கள் முகங்கொடுத்து நிற்கும் அவர்களது உடனடிப்பிரச்சினைகனைச் சந்திப்பதற்குப் பதிலாக களநிலை உண்மைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்ட நிலைப்பாடுகளை அவர் எடுக்கின்றார் என்பதை நாங்கள் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

வன்னி மக்களின் உயிர்ப்பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கூடிய வகையில் பாதுகாப்பைப் பேணல், உணவு மருந்து தேவைகளைப் பூர்த்தி செய்தல் என்பனவற்றுக்கு உத்தரவாதம் அளிக்காது அதற்குப் பதிலாக சிறிலங்கா அரசாங்கத்திலிருந்து வேறுபாடில்லாத நிலைகளையே அவர் எடுத்து வருகின்றார்.

அவரது அறிக்கையில் வன்னி மக்களின் விருப்பத்திற்கு மாறாக வன்னி மக்களைத் தமிழீழ விடுதலைப்புலிகள் தடுத்து வைத்துள்ளனர் எனச் சலஞ்சாதிக்க முயல்கிறார். அதேவேளை அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வன்னி மக்களுக்கு சிறப்பான வாழ்வு உள்ளதென்பது போலவும் காட்டப்பார்க்கின்றார்.

அதே அறிக்கையில் வன்னி மக்களைப் போக விடுமாறு தமிழீழ விடுதலைப்புலிகளைக் கோருவதையும் பலவந்தமாகப் படையில் சேர்ப்பதை நிறுத்தும்படியும் மனித கேடயமாக மக்களைப் பயன்படுத்த வேண்டாமெனவும் அவர் கேட்டுள்ளார். வன்னிக்கு வருகை தராமலும் வன்னி மக்களைச் சந்திக்காமலும் அவர்களுடைய விருப்புக்களையும் தேவைகளையும் கண்டறியாமலும் இந்தத் தவறான தகவல்களை அவர் எங்கிருந்து பெற்றார் என நாம் கேட்க விரும்புகின்றோம். திரு ஹோம்ஸ் புனை கதைகளை உரைக்கின்றார் அல்லது அரசாங்கத்தின் வழமையான பரப்புரைகளையே அவரும் கூறுகின்றார் என நாம் துணிந்து கூறுகின்றோம்.

வன்னிப் பிரச்சினை போன்ற வேறு எந்தச் சர்வதேசப் பிரச்சினைக்காவது பாதிக்கப்பட்ட மக்களை அவர்களது பாரம்பரிய தாயகத்திலிருந்து வெளியேறி வேறு பகுதிகளுக்குச் சென்று திருப்பதிகரமான தீர்வைக் பெறும்படி கேட்கப்பட்டுள்ளதா என நாம் ஹோம்ஸைக் கேட்க விரும்புகின்றோம்.

பலஸ்தீன மக்களின் பிரச்சினையில் அவர்களை உலகின் வேறு எந்தப் பகுதிக்காவது சென்று அவர்களின் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ளுமாறு கேட்கப்பட்டதா? வரலாற்றை ஆழமாகப் பார்ப்பின் யூதர்களுக்கு மத்திய கிழக்கிலுள்ள இஸ்ரேலுக்கு மாற்றாக கலிபோர்னியாவில் வாழுமாறும் உகண்டாவில் வாழுமாறும் கேட்கப்பட்டபோது அவர்கள் எதற்காக அதனை மறுத்தார்கள்?

காரணம் இஸ்ரேல் அவர்களின் ஆன்மீகப் பூமி. அதே மான நரம்பு வன்னி மக்களுக்கும் இருக்கையில் திரு ஜோன் ஹோம்ஸ் போன்ற சிந்தனையாழமற்றவர்கள் வன்னி மக்களை அவர்களுடன் பின்னிப்பிணைந்த வீடுகளையும் அவர்கள் தாயகத்தையும் விட்டு வெளியேறும்படி கேட்கையில் மறுப்பார்கள் தானே.

எங்கள் எண்ணப்படி ஐ.நா வுக்கு அண்மைக்காலங்களில் அதன் பிடி தளர்ந்து விட்டது. தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்வதற்காக உலகின் சிறுபான்மையினப் பிரச்சினைகளைச் சந்திக்க மறுக்கிறது.

சிறுபான்மையினங்கள் தங்கள் முன்னோர்களின் தாயகத்தில் வாழும் உரிமை உண்டு ஜோன் ஹோம்ஸ்ம் அவரது மேலதிகாரிகளதும்; விருப்புகளுக்கு ஏற்ற கூத்துக்களிலும் கவர்ச்சிகளிலும் பங்கேற்க மாட்டார்கள் என்பதை ஐ நாவின் உயர்மட்டங்களுக்குச் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். ஐக்கிய நாடுகள் சபை இன்று கையாலாகாத அமைப்பாகியுள்ளது. அதன் அதிகாரிகள் தாங்கள் தங்கள் பதவிக்குப் பெறும் பணத்திற்கும் கட்டுப்பட்டவர்களாக மட்டுமே உள்ளனர்.

இந்த இடத்தில் ஜோன் ஹோம்ஸ்க்கு ஒன்றை நினைவுறுத்த விரும்புகின்றோம். வன்னி நிலம் உலகின் மிக மோசமான கொலைக்களமாகக் காட்சியளிக்கிறது. சிறிலங்கா அரசாங்கம் எவ்வித அக்கறையுமின்றி தினம் தினம் 50 முதல் 60 க்கு மேற்பட்ட தமிழரைக் கொன்றும் 100 முதல் 150 க்கு மேற்பட்ட தமிழரின் உடலுக்குச் சேதம் இழைத்தும் வருகின்றது.

திரு ஜோன் ஹோம்ஸ் நன்கு படித்தவர் நிறைந்த நிர்வாக அனுபவம் உள்ளவர் பரப்புரைகளுக்கு ஊடாக உண்மைகளைக் கண்டறியும் மதிநுட்பம் உள்ளவர் என்பதை நாங்கள் ஏற்கின்றோம். இவ்வளவு உயர்ந்த திறமைகளை எல்லாம் கொண்ட ஜோன் ஹோம்ஸால் வன்னியில் மக்கள் கொன்று குவிக்கப்படுவதை மட்டும் கண்டுக்கொள்ள இயலவில்லையே என்பது பலத்த ஏமாற்றத்தை எங்களுக்குத் தருகிறது.

இந்தக் கொலைக்களம் சர்வதேச குரல்கள் எழாதவாறு செய்து கொண்டு வன்னியின் சனத்தொகையை குறைத்து மெதுவான முறையில் இனஅழிப்பைச் செய்வதற்கென வடிவமைக்கப்பட்டுள்ளது. வேகமான இனஅழிப்பா மெதுவான இனஅழிப்பா என்பதல்ல எந்த வகையான இனஅழிப்பும் நவீன உலகால் முழுஅளவில் கண்டிக்கப்பட வேண்டியதாக உள்ளது. இதனை ஜோன் ஹோம்ஸ் செய்யவில்லை என்றால் அது அவரின் சிந்தனை வெறுமையையே வெளிப்படுத்துகின்றது. ஜோன் ஹோம்ஸ் போன்றவர்கள் எதற்காக இந்த நாட்டின் இனஅழிப்பைக் கண்டிக்க மறுக்கிறார்கள்?

வன்னி மக்களில் பெரும்பாலனாவர்கள் மாதக்கணக்கில் மெதுவான இனஅழிப்புச் செய்யப்பட்டதன் பின் கூட்டு மொத்தமாகக் குரல் எழுப்பலாமெனச் சர்வதேச சமுகம் நம்புகின்றதா?

சத்தற்ற உணவென்பது மெல்லச் சாகடிப்பதற்கு மறுபெயர். வன்னி மக்கள் சத்தற்ற உணவின் பிடியில் சிக்கியுள்ளனர். தோலுரிக்கப்படாத சோயாவும் உமியகற்றப்படாத அரிசியும் பருப்பும் தினம் உண்டு அவர்கள் உயிர்பிழைக்கின்றனர். உணவின் கலோரி பெறுமதிகள் பற்றிப் பேசும் மேற்குக்கு வன்னியில் மக்கள் சத்தின்றி சாவதைக் காண முடியாது இருக்கும் ஜோன் ஹோம்ஸ் போன்றவர்கள் அவர்கள் வகிக்கும் பொறுப்பு வாய்ந்த பதவிகளுக்கு எந்த அளவுக்கு இந்நேரத்தில் தகுதியுடையவர்கள் என்று எண்ணத் தோன்றவில்லையா?

வன்னி மக்கள் மேல் வீசப்படக் கூடாதெனத் தடுக்கப்பட்டுள்ள கொத்தணிக் குண்டுகள் வெள்ளைப் பொசுப்பரஸ் குண்டுகள் நச்சு வாயு உருளைகள் தரையாலும் கடலாலும் வானாலும் கொட்டப்படுதைக் ஹோம்ஸ் தன்வசதிக்கேற்றவாறு கண்டு கொள்ளாமல் இருக்கின்றார்.

சிறிலங்கா அரசாங்கம் வைத்தியசாலைகள் மேல் குண்டுகளை வீசுவதையும் திரள்நிலை அளவில் அங்குள்ள நோயாளிகளைக் கொல்வதையும் நியாயப்படுத்தி வருகிறது. அரசாங்கத்தின் நியாயப்படுத்தலைக் கண்டிக்கவோ அல்லது இத்தகைய குண்டு வீச்சுக்கள் இடம்பெறாதவாறு தடுக்கவோ அதுவரை ஐ நா உட்பட எந்தச் சர்வதேச அமைப்பும் முயற்சிக்கவில்லை. இரண்டாவது உலக மகாயுத்தத்தில் எதிரிகளின் படைகள் வைத்தியசாலைகளைத் தாககுவதைத் தவிர்த்தன.

சிறிலங்காவுக்கு இந்தச் சட்டத்திலிருந்து விதிவிலக்களிக்கபட்டுள்ளதா? அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் வைத்தியசாலைகளைத் தாககுவதைக் கூட தவிர்க்க ஐ நா வால் ஏன் முடியவில்லை? வேறு மொழியில் கூறுவதானால் வன்னி மெதுவாக வைத்தியசாலைகள் அற்ற பிரதேசமாக மாற்றப்பட்டு வருகிறது. உலகில் வேறு எந்த ஒரு நாட்டிலாவது இதற்குச் சமானமானதாக உள்ளதா?

ஹோம்ஸையே இதற்குப் பதிலளிக்க விட்டுவிடுவோம். வன்னியில் இன்று வைத்தியசாலைகள் மரங்களின் கீழும் இடம்மாற்றக் கூடிய கூடாரங்களிலும் ஒளிவிடங்களிலும் நடைபெறுகின்றது. குறைந்த உபகரணங்களுடனும் பொருத்தமற்ற மருந்துகளுடனும் மருத்துவர்கள் மிக அதிக அளவான நோயாளிகளைச் சமாளிக்க வேண்டியுள்ளது.

சிறிலங்கா அரசாங்கத்தினதும் அதன் சுகாதர அமைச்சினதும் மருந்துகளுக்கான தடைகளினாலேயே பொருத்தமான மருந்துகளுக்கு வன்னியில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குழந்தை இறப்பு வீதம் ஆசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிக அதிகமாக உள்ளது. கர்ப்பிணித் தாய்மார்க்குச் சத்தின்மையினால் குறைப்பிரசவங்கள் அதிகரித்துள்ளன. கடந்த சில வாரங்களில் 12 பேர் பட்டினியால் இறந்துள்ளனர் என உள்ளுர் வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது 21ம் நூற்றாண்டு இவை முழு மனித குலத்துக்குமே அவமானமாகிறது.

மருந்துகள் சுகப்படுத்தலுக்கான கருவிகள். ஆனால் சிறிலங்காவில் மருந்துகள் உயிர் ஆபத்தை விளைப்பதற்கான கருவிகள். சிறிலங்கா அரசாங்கம் வன்னிக்கு எல்லாவிதங்களிலும் சகல முயற்சிகளையும் எடுத்து வன்னிக்கு மருந்துகள் மருத்துவ உபகரணங்கள் மருத்துவர்கள் செல்லாதவாறு தடுத்து வருகின்றது.

சிறிலங்கா தன்னுடைய மருத்துவ நிலையங்களை கடலுக்கு அப்பால் திருகோணமலையில் ஏற்படுத்தி அங்கு தன்னால் குண்டுவீசப்பட்டவர்களுக்குச் சிகிச்சையளிக்கிறது. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தனது நிறுவனரின் பார்வையில் இருந்து விலகி வன்னியிலிருந்து திருகோணமலைக்கு காயப்பட்டவர்களுக்கு கடற்பயணத்துக்கு உதவி வருகிறது.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வேறு மொழியில் கூறுவதானால் அரசாங்கத்தின் காயப்படுத்தி விட்டு அவர்களை காயமுற்ற பகுதிகளுக்கு வெகுதூரத்தில் கடலுக்கு அப்பால் உள்ள வைத்தியாலைகளுக்குக் காவிச் செல்லும் முயற்சியில் தன்னையறியாமலே ஒரு அங்கமாகி நிற்கிறது.

சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கத்தால் ஒழுங்குசெய்யப்பட்ட கப்பலில் கடலால் திருகோணமலைக்கும் அதற்கு அப்பாலும் எடுத்துச் செல்லப்பட்ட பொழுது கப்பலில் இறந்தவர்கள் பலர் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். இந்திய அரசாங்கம் புல்மோட்டையில் அண்மையில் ஒரு வைத்தியசாலையைத் திறந்து வன்னியிலிருந்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தால் எடுத்து வரப்படும் காயப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளித்து வருகிறது.

எமக்கு கிடைக்கப் பெற்ற நம்பகமான தகவல்களின் படி அங்கு கூறப்பட்டவாறு வைத்தியசாலை திறக்கப்படவில்லை எனவும் அங்கு தகவல் திரட்டும் புலனாய்வு நிலையமே திறக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.

இந்த விபரிப்பில் நாம் ஏற்கனவே கூறியவாறு வன்னிக்கு எடுத்துச் செல்லப்பட்ட உணவுகள் அங்குள்ள மக்களின் தேவைகளுக்குப் போதாதுள்ளது. நாம் ஏற்கனவே கூறியவாறு மக்கள் சத்துணவு இன்மையால் பாதிப்புற்றுள்ளனர். பச்சை இலைகளோ அல்லது மரக்கறிகளோ சமைப்பதற்கோ உண்பதற்கோ அங்கு இல்லை. இந்த உதவிகள் ஏதுமற்ற மக்கள் குறிப்பாக இளம் தலைமுறையினர் உடல்நலம் பெற நீண்டகாலம் எடுக்கும்.

சத்துணவின்மையாலும் பாடசாலைகள் மூடப்பட்டிருப்பதாலும் அடிக்கடி நடைபெறும் இடப்பெயர்வுகளாலும் வன்னியில் கல்வி நிலை தேக்கமடைந்துள்ளது. இது ஜோன் ஹோம்ஸ் கருத்தில் எடுக்காத மற்றொரு மனித அவலமாக உள்ளது.
அரசாங்கம் மத்தாளன், பொக்கணை, வலைஞர்மடம், முள்ளிவாய்க்கால் ஆகிய மெல்லிய கரையோரக் கிராமங்களை சுடுதிறன் பாவியாத கிராமங்களாகப் பிரகடனப்படுத்தியுள்ளது. ஆயினும் மீனவர்கள் எவருக்கும் கடலில் இறங்குவதற்குத் துணிவு இல்லை.

ஏற்கனவே கடலில் இறங்கிய மீளவர்களைச் சிறிலங்காக் கடற்படையினர் சுட்டழித்ததன் வழி வந்த மன அச்சம். நாளாந்தம் பிடிபடும் மீனின் அளவு மிகக் குறைவாக இருப்பதுடன் மத்தியதர வர்க்கத்தினரால் நுகரப்பட இயலாத அளவுக்கு விலை உயர்வாக உள்ளது. இந்தப் பகுதிகள் 300,000 க்கும் மேற்பட்ட மக்கள் வசிப்பதால் அதிக நெருக்கமானதாக உள்ளது.

நிலம் வெறுமையானதாகவும், வசதிகள் ஏதுமற்றதாகவும், பெரும் பகுதி மனித வசிப்பிடத்திற்கு ஏற்றதல்லதாகவும் இருக்கின்றது. ஆயினும் மக்கள் அதில் ஒட்டிக்கொண்டிருப்பது, இது அவர்களுடைய தாயகம் என்பதனால், ஹோல்ம்ஸ் கூறுவது உண்மையாக இருப்பின் தமிழர்கள் எப்பொழுது இந்த மண் கழிவுகள் நிறைந்த பகுதியைக் கைவிட்டு வாக்களிக்கப்பட்ட அரச பகுதிக்கு சென்றிருப்பார்கள். விடுதலைப் புலிகள் அவாக்ளைத் தடுத்து வைத்திருக்கவில்லை.

மக்கள் விடுதலைப் புலிகளில் இருந்து பிரிக்க முடியாத தன்மையுடையவர்களாக இருக்கின்றார்கள். மக்களுக்கு அவர்களுடைய பாதுகாப்பான வாழ்வு விடுதலைப் புலிகளுடன் தங்கியிருப்பதில்தான் உள்ளது என்பதுடன், நம்ப முடியாத அரசாங்கத்தின் பொய்யான வாக்குறுதிகளைப் பின்பற்றுவதில்லை என்பதில் தெளிவான இருக்கின்றார்கள்.

நாங்கள் ஒரு விடயத்தைச் சுட்டிக்காட்ட வேண்டும். அங்கு 2 முதல் 2.5 அங்குலம் நீளமான மெல்லிய மீன்கள்தான் உண்டு. இதனுடைய சுவை விளங்கிக்கொள்ள முடியாததாக இருக்கும். இந்த மீன்கூட ஒரு கிலோ 2,000 ரூபாவிற்கே கிடைக்கின்றது. ஐரோப்பிய நாடுகளில் இத்தகைய மீன்கள் மிருக தீனியாகவோ அல்லது உரமாகவோகூட பயன்படுத்தப்படுவதில்லை. இந்த விபரங்களை எல்லாம் எதற்காக இங்கு சமர்ப்பிக்கின்றோம் என்றால் இந்த மக்களின் வாழ்க்கை முறையை ஜோன் ஹோல்ம்ஸ் விளங்கிக்கொள்ள முடியாது இருக்கின்றார் என்தற்காகவே.

திரு.ஹோல்ம்ஸ் வன்னி மக்களை முற்றாக திரள் நிலையில் கிளப்பியெடுத்து அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுப் பிரதேசமாகிய வவுனியா, மன்னாருக்கு செல்ல வைப்பதால் பிரச்சினையைத் தீர்க்கலாம் என கருதுகின்றார். இது ஒருபோதும் ஏற்புடைய தீர்வாகமாட்டாது. ஏங்களுடைய மக்களை கிளப்பியெடுத்து தூர தேசங்களில் குடியமர்த்துவது தேசியத் தீர்வாகக் காட்டப்படுமானால், இதுவொரு தொhடர்ச்சியான தொடர்முறை நிகழ்ச்சியாகவே மாற்றப்பட்டுவிடும்.

நாங்கள் திரு.ஹோல்ம்ஸிற்கு எவ்வாறு யு.என்.எச்.சி.ஆர் மக்களை அவர்களது சொந்த வீடுகளில் குடியமர்த்துவதற்கு முயற்சித்தது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். அதுவே சரியான முறையில் செயற்படுவதற்கான வழியாகும். வன்னியிலுள்ள மக்களுக்கு சுகாதாரமான சுற்றாடல், உணவு, மருந்து, பாதுகாப்பான வாழ்வு ஆகியவையே தேவையாக இருக்கின்றது. அரசாங்கம் தன்னுடைய சொந்தப் படைகளைக்கொண்டு மக்களுக்கு கைநீட்டி ஆணையிடுவது போல் ஆயுதப் படைகளால் கட்டுப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் கொண்டு சென்று அந்த முகவர்கள் ஊடாக குடியமர்த்தப்பார்க்கின்றது. திரு.ஹோல்ம்ஸ் அவருடைய புத்தி நுணுக்கத்தன்மையினால் இந்த திட்டமிட்ட முறைமையை இனம் கண்டு ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது அதற்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும்.

திரு.ஹோல்ம்ஸிற்கு வன்னி மக்களது நலனில் ஏதாவது அக்கறை இருக்குமாக இருந்தால் அவர் செய்ய வேண்டியது எல்லாம், அவர்களுக்கு போதிய சத்துணவும், பாதுகாப்பான வாழ்வும், நிரந்தரமான அமைதியும் வழங்குவதாகவும். நாங்கள் திரும்பவும் திரும்பவும் வலியுறுத்துவது என்னவென்றால் மக்களை அவர்களுடைய இடங்களில் இருந்து கிளப்புவதோ அல்லது பயணப்பட வைப்பதோ தீர்வாக அமையாது, மாறாக தண்டனையாகவே மாறிவிடும் என்பதாகும்.
அவர்களுடைய நிரந்தரமான வீடுகள் காலால் நடந்துபோகும் தூரத்தில் உள்ளன. ஆயுதப் படைகள் அதனை அனுமதிப்பார்களேயானால் அவர்கள் மகிழ்ச்சியாக தங்களது வீடுகளுக்குத் திரும்ப முடியும். திரு.ஹோல்ம்ஸ் ஏன் இதனை விளங்கிக் கொள்ளாது, மறுத்து வருகின்றார் என்பது புரியவில்லை.

தமிழீழ விடுதலைப் புலிகள் இடம்பெயர்ந்த மக்களை மேற்கூறிய கிராமங்களில் பணயக் கைதிகளாகவோ, மனிதக் கேடயமாகவோ, அல்லது முகாமில் வாழ்பவர்களாகவோ வைத்திருக்கவில்லை என்பதை மீளவும் வலியுறுத்திக் கூறுவது எங்களுடைய கடமையாகும். வன்னியில் இருக்கின்ற மக்கள் நாங்கள் பிரதிநிதிகளாக இருக்கின்ற மக்கள் தங்களுடைய சொந்த விருப்பத்தின் அடிப்படையில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் வாழ்கின்றார்கள். துன்பங்களைத் தாங்குகின்றார்கள்.

தமிழீழ விடுதலைப் புலிகள் எவ்விதமாக வாழச் சொல்லுகின்றார்களோ, அவ்விதமாக வாழ விரும்புகின்றார்கள். நாங்கள் எந்தவொரு விதத்திலும் எங்களையும், தமிழீழ விடுதலைப் புலிகளையும் வேறுபடுத்திப் பார்ப்பதில்லை. திரு. ஜோன் ஹோல்ம்ஸ் வன்னி மக்கள் அவர்களின் விருப்பத்திற்கு மாறாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர், மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர்,

அல்லது விடுதலைப் புலிகளால் படைகளுக்குச் சேர்க்கப்படுகின்றார்கள் என்று கூறுவதெல்லாம் ஆதாரங்கள் அற்ற வதந்திகள் ஆகும். நாங்கள் இங்கு எங்களுடைய சொந்த விருப்பில் வாழ்கின்றோம். நாங்கள் எங்களுடைய வாழ்வை, எமது நம்பிக்கைகளை எமது சொந்த விருப்பில் செய்கின்றோம். எமது வாழ்வும், எமது தலைவிதியும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இணைந்ததாகவே உள்ளது.

உலகம் சிறீலங்கா அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபை முகவர்களையும், அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தையும், அனைத்துலக அரச சார்பற்ற நிறுவனங்களையும் வன்னியில் இருந்து வெளியேறுமாறு நாள் குறித்து வற்புறுத்தியபோதும், அவர்கள் வன்னியைவிட்டு விலகிய போதும், கண்மூடித்தனமாக மௌனம் காத்தது மிகப்பெரிய ஆரம்பத்தவறாகும். சூடான் அரசாங்கம் வெளியேறச் சொன்ன பின்னரும் டார்பூரில் பிரான்சின் எல்லைகளற்ற மருத்துவர் அமைப்பு அங்கு தொடர்ந்தும் செயலாற்றிக் கொண்டிருக்கின்றது என்பதை இவ்விடத்தில் நாம் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

வன்னியைப் பொறுத்தமட்டில் அனைத்துலக அரச சார்பற்ற நிறுவனங்களும், ஐக்கிய நாடுகள் சபையின் முகவர்களும் சிறீலங்கா அரசாங்கத்தின் ஆணைக்கு அடிபணிந்து மிக வேகமாக வன்னியில் இருந்து ஓடினர். அவர்கள் அவ்வாறு செய்யாது மக்களின் வாழ்வுக்கு ஆபத்தான சூழலிலும் எம்முடன் நின்று எமக்குப் பணியாற்றியிருக்க வேண்டும். இது ஐக்கிய நாடுகள் சபையின் முகவர்களும், அனைத்துலக அரச சார்பற்ற நிறுவனங்களும் வன்னியில் செயற்படுவது பற்றி ஒரு முக்கிய விமர்சனமாக உள்ளது.

சிறீலங்கா அரசாங்கம் காணாமல் போக வைப்பதிலும், ஊடகவியலாளர்களைக் கொல்வதிலும் அதிகளவு பெயரினைப் பெற்றிருக்கின்றது. அத்துடன், அனைத்துலக அவதானிகளை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்ல அனுமதி மறுப்பதும் அரசாங்க அதிகாரிகளின் தலையீடு இல்லாது அனுமதிக்கப்படுபவர்கள்கூட மக்களுடன் தொடர்புகொள்ள அனுமதியாது இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

தினந்தோறும் குண்டு வீச்சுக்களாலும், எறிகணை வீச்சுக்களாலும், உணவு, மருந்து மறுப்பினாலும் நிலைகொள்ள முடியாத மக்கள் சிறிய எண்ணிக்கையில் அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குச் சென்றார்கள். அவர்கள் எவ்விதமாக அரசாங்கப் படைகளால் நடத்தப்படடனர் என்பது ஐக்கிய நாடுகள் சபைக்கும், அதனது முகவர்களுக்கும் நிலமையை சீரழிப்பதற்கு ஏற்றதாக இருக்கின்றது.

எங்களுக்குக் கிடைத்த நம்பகமான தகவலின்படி ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் பிரிக்கப்பட்டு, இறுக்கமான கட்டுப்பாடு உள்ள முகாம்களில் வைக்கப்பட்டுள்ளதால், அந்த குடும்பங்கள் பிரிக்கப்பட்ட நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மீளவும் எமக்குக் கிடைத்த நம்பகமான தகவலின் அடிப்படையில் பெண்கள் பாலியல் அடிமைகளாகவும், ஆண்கள் கூலியற்ற வேலையாட்களாகவும் உள்ளனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்திக்கு ஏற்ப சுதந்திர நடமாட்டம் அவர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது. அவர்கள் வாழ்கின்ற கொட்டகைகள் சுற்றிவர முட் கம்பிகளால் பாதுகாக்கப்பட்டு படையினரால் காவல் செய்யப்படுகின்றது. உள்ளே நுழைவதும், வெளியே செல்வதும் மறுக்கப்பட்டுள்ளது.

நாங்கள் விளங்கிக்கொண்டதன்படி சில ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலர்கள் படைப் புலனாய்வு அதிகாரிகளுடனும், அரசாங்க அமைச்சர்கள் , அரசாங்கத்தினுடைய ஏனைய ஆட்கள் ஆகியோருடன் இந்த முகாம்களுக்கு வருகை தந்துள்ளனர். இவர்கள் வருவதற்கு முன்னரே அங்குள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதையுமே அதிகளவில் வருபவர்களுடன் பேசக்கூடாது என உத்தரவிடப்பட்டிருந்தது. ஐக்கிய நாடுகள் சபை அதிகாரிகள் வவுனியா முகாம்களுக்குச் சென்றபோது தாங்கள் நம்பக்கூடிய தங்களுடைய மொழிபெயர்பாளர்களை அழைத்துச் செல்லாது, அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட மொழி பெயர்ப்பிலேயே தங்கியிருந்தனர். அங்கு வெளிவந்த ஒரு சம்பவத்தின்படி கூடச்சென்ற முஸ்லீம் அமைச்சர் ஒருவர் அங்கு தமிழில் கூறப்பட்டவற்றை தமக்கேற்றவகையில் மாற்றியே ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கின்றார்.
இந்த மாதிரியான பணிகளையே ஐக்கிய நாடுகள் சபை தற்பொழுது எங்கள் பகுதிகளில் செய்து வருகின்றது. ஐக்கிய நாடுகள் சபை அதனுடைய இளமையில் இருந்த உறுதியான போக்கை இழந்து தற்பொழுது அதன் அலுவலர்கள் நேரத்தைக் கடத்துபவர்களாகவே செயலாற்றுகின்றார்கள் என்பது மனவருத்தத்துடன் கூறப்படவேண்டிய ஒன்றாக இருக்கின்றது.

நாங்கள் கேட்க விரும்புகின்றோம், ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தின் எந்தப் பிரிவின் கீழ் அரசாங்கத்தினால் நடத்தப்படும் இந்த நலன்புரி நிலையங்களில் குடும்பங்களை ஆண், பெண், குழந்தைகள் என்ற பாலியல் அடிப்படையில் பிரிக்கின்றனர். தந்தை ஒரு இடத்திலும், தாயார் இன்னொரு இடத்திலும், பிள்ளைகள் இன்னொரு இடத்திலும் பிரிக்கப்பட்டுள்ளனர்.

ஆண் குழந்தைகள் தகவல்களுக்காக வதைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். பெண் குழந்தைகள் கிரமமாக படை அதிகாரிகளால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். மூன்று நாட்களாக தொடர்ச்சியாக இடை நிறுத்தாது படை அதிகாரிகளால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட பெண்ணொருவரை ஏபி (AP) செய்தி நிறுவனம் குறிப்பிட்டிருந்தது. எங்களுக்கு கிடைத்த தகவலின்படி கணிசமானளவு பெண்கள் அநுராதபுரத்திற்கு இடமாற்றப்பட்டு அங்கு அரசாங்கத்தினால் நடத்தப்படும் விபச்சார விடுதிகளில் படை அதிகாரிகளுடைய மகிழ்ச்சிக்காகப் பயன்படுத்தப்படுகின்றார்கள்.

இந்த நேரத்தில் ஐக்கிய நாடுகள் சபை வழித்தெழிந்து அவர்களின் பொறுப்பை உணர்ந்து அரச சார்பற்ற நிறுவனங்களை இது பற்றி விசாரணை செய்யுமாறு கோரியிருக்க வேண்டும் அல்லது ஐக்கிய நாடுகள் சபையின் முகவர்களைக்கொண்டு விசாரணை செய்திருக்க வேண்டும். ஆனால் இதுவரை எதுவுமே செய்யப்படவில்லை. நலன்புரிதல் என்ற சொல் சிறீலங்கா அரசாங்கத்தின் நிலையங்களில் அதற்கேற்ற பொருளுடன் பயன்படுத்தப்படுவதில்லை.

20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் போவர் (Boer) போரின்போதும், 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலும் நாசிகளாலும் நடாத்தப்பட்ட வதை முகாம்களையே இவை நினைவுபடுத்துகின்றன. நலன்புரி நிலையங்களுக்கும், முட்கம்பிச் சுருள்களுக்கும் என்ன தொடர்பு என நாங்கள் யாராவது கேட்கலாம் அல்லவா? மேலும் இந்த நலன்புரி நிலையங்களில் வைக்கப்பட்டுள்ள ஆண்களும், முதிய பெண்களும் படையினருக்கு கட்டாய வேலை செய்விக்கப்பட்டு அதற்காக ஒரு தட்டு உணவுகூட வழங்கப்படாத நிலையில் வைக்கப்பட்டுள்ளனர் என்பதையும் சுட்டிகாட்ட விரும்புகின்றோம்.

அரசாங்கம் தாங்கள் சுடுதிறன் பயன்படுத்தாத பாதுகாப்பு பிரதேசங்களை உருவாக்கியிருப்பதாக தம்பட்டம் அடித்துக்கொள்வது பற்றி ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம். இவைகள் கழிவு, மணல் பிரதேசமாகவும், மக்கள் குடியிருப்புக்கு தகுதியற்ற நிலங்களாகவும், எந்தவொரு பயிர்ச்செய்கையும் மேற்கொள்ள முடியாத இடங்களாக உள்ளன. இதனால் நோய்கள் தோன்றி இளம் சந்ததி பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பிரதேசத்தில் ஒரு கிழமைக்கு மேல் வாழ்ந்தவர்கள் யாருமே நீண்ட நாட்களுக்கு வாழ்வார்கள் என்கின்ற நம்பிக்கை இழக்கப்பட்டுவிடும். மனிதாபிமானத் தலையீடு மூலமே இந்த மனித அழிவு தடுக்கப்படலாம் என்பதை அனைத்துலக சமூகத்திற்கு நாம் வலியுறுத்திக்கூற விரும்புகின்றோம்.

இந்தக் கணினி யுகத்தில் அனைத்துலக சமூகத்தால் ஏன் இதனைப் புரிந்துகொள்ள முடியவில்லை என்பது எமக்கு விளங்காத ஒன்றாக இருக்கின்றது. திரு.ஹோல்ம்ஸ_ம் அவருடைய மற்றையவர்களும் பாதுகாப்புப் பிரதேசம் என்பது பெயரளவில் மட்டும்தான் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

இந்தக் கிராமங்கள் தினமும் நெடுந்தூர சுடு கலன்களாலும் (ஆட்டிலறி), பல்குழல் எறிகணைகளாலும் வெள்ளையுர குண்டுகளாலும், மோட்டார் தாக்குதல்களாலும், கிபீர் மற்றும் மிக் வானூர்திக் குண்டு வீச்சுக்களாலும் தாக்கப்படுவது அரசாங்கத்தின் பாதுகாப்புப் பிரதேசம் என்ற சொல் பொய்யானது என்பதை வெளிப்படுத்துகின்றது. அரசாங்கம் புத்தியான முறையில் தினமும் கொல்லப்படும் மற்றும் காயமடையும் மக்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்தி வெளியிட்டு அனைத்துலகின் குரல் எழாதவாறு தடுக்கின்றது. சிறீலங்கா அரசுத் தலைவர் மிக அபாயகரமான வார்த்தைகளைப் பிரகடனப்படுத்தினார்.

அவர் விரும்பினால் பாதுகாப்புப் பிரதேசங்களிலுள்ள மக்களை 24 மணித்தியாலங்களுக்குள் முற்றாக அழிக்கலாம் என்று கூறினார். அவர் ஏன் இன்னும் அதனைச் செய்யவில்லை என்பதுதான் ஆச்சரியமாக இருக்கின்றது. இவ்விதமான காட்டுமிராண்டித்தனங்கள் அனைத்துலக மட்டத்தில் ஏன் வெளிக்கொண்டு வரப்படவில்லை? அல்லது ஐக்கிய நாடுகள் சபை அதிகாரிகள் இது குறித்து தட்டிக்கேட்கவில்லை? இந்தப் பாதுகாப்புப் பிரதேசங்களில் வாழ்கின்ற மக்கள் கிடங்குகளுக்குள்ளும், பதுங்ககழிகளுக்குள்ளும், சேற்றுக் குழிகளிலும் வாழ்ந்துதான் சிறீலங்கா படைகளால் செலுத்தப்படும் உயிராபத்தான ஏவுகணைகளில் இருந்து நாலு கிராமத்திலும் தப்பிப் பிழைக்கின்றனர்.

இருந்த போதிலும் சாகின்ற தொகையும், காயப்படுகின்ற தொகையும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றது. வியட்னாம் போரின்போது னுஆணு இலும், அதனைச் சுற்றி வாழ்ந்த மக்களும் இவ்விதமாக நிலத்துக்குக் கீழேயே வாழ்ந்தார்கள். நாங்கள் உறுதியாக நம்புகின்றோம் திரு.ஜோன் ஹோல்ம்ஸ் வியட்னாம் போரைப் பற்றி அறிந்தபோது இதனையும் அறிந்திருப்பார் என. அனைத்துலக சமூகம் போர் சூழலில் வாழும் மக்களின் துன்பங்களையும், வரலாற்றையும் ஒப்பிடுகின்ற உணர்வுள்ளவர்களாக இருப்பார்களேயானால் வன்னியின் நிலை தொடர அனுமதிக்க மாட்டார்கள்.

முடிவாக... இலோனியஸ் பல்கலைக்கழகத்தின் சட்டக் கல்லூரியில் அனைத்துலக சட்டத்தில் பேராசிரியராக விளங்கும் பேராசிரியர் முனைவர் பொயில் (Dr.Boyle) அவர்களின் சில வார்த்தைகளுடன் இதனை முடிக்கலாம் என எண்ணுகின்றோம். “சிறீலங்கா அரசாங்கத்தின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜபக்ச, பாதுகாப்புப் பிரதேசத்தில் வாழும் 350,000 தமிழ் மக்களினதும் அனைத்துலக மனிதாய சட்டங்களின் அடிப்படையிலான பெரும்பாலான அடிப்படைத் தேவைகளை மீறி வன்முறைப்படுத்துவதில் உறுதியாக இருக்கின்றார்.

சிறீலங்கா அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சர் அனைத்து மருத்துவர்களையும், அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தினரையும் வன்னியில் இருந்து வெளியேறுமாறு கட்டளையிட்டார். சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சர் வன்னியில் அழிக்கப்பட வேண்டிய தமிழர்களின் பட்டியலையும் தயாரித்திருக்கின்றார். உலக அரசுகள் உடனடியாக ஆற்றலுள்ள முறையில் செயற்பட்டு சிறீலங்கா அரசாங்கத்தைத் தடுத்து நிறுத்தாது விட்டால், உலகின் சேர்பனிக்கா (Srebrenica), சப்ரா (Sabra), சற்றிலா (Shattila), றுவண்டா (Rwanda), கொசோவாவின் (Kosovo) வரிசையில் தமிழர்களும் இன அழைப்பிற்கு உள்ளாக்கப்படுவதற்கு சாட்சியம் கூற வேண்டிய நிலை ஏற்படும்.

(பேராசிரியர் பொயிலின் முழுஅளவிலான செய்தியையும் படிக்க விரும்புவர்கள் இங்கே அழுத்தவும்)

நன்றி
கையொப்பம்
Dr. நித்தியானந்தசர்மா
(தலைவர்)

கையொப்பம்
கோபாலகிருஸ்ணன் M A (செயலர்)

Comments