போரை நிறுத்தி போருக்குள் வாழும் மக்க ளின் நலன்களைக் கவனித்தலே முதல் நோக்கமாக இருக்க வேண்டும் என்று சர்வதேச ரீதி யில் வலியுறுத்தப்பட்டு வருகின்றது. ஆனால், இலங்கை அரசாங்கமோ, சர்வ தேச மட்டத்தில் இருந்து வந்துகொண்டிருக்கும் போரை நிறுத்தக் கோரும் வேண்டுகோள்களை யிட்டு அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை.
சில நாட்களுக்கு முன்னதாக, வெளிவிவ கார அமைச்சர் ரோஹித போகொல்லாகம மக்களை வெளியேற்றுவதற்காக அரசாங்கம் குறுகிய சண்டை நிறுத்தம் ஒன்றைச் செய்யத் தயார் என்று அறிவித்திருந்தார்.
அதுபோன்றே ஐ.நா.வுக்கான இலங்கைப் பிரதிநிதி பலிகக்காரவும் மக்களை வெளி யேற்றப் புலிகள் அனுமதிப்பார்களேயானால் போர்நிறுத்தம் செய்ய அரசாங்கம் தயாராக இருப்பதாகக் கூறியிருந்தார்.
அதேவேளை விடுதலைப் புலிகளின் சர்வ தேச உறவுகளுக்கான பிரதிநிதியான செல்வராசா பத்மநாதனும் புலிகள் நிபந்தனையற்ற போர்நிறுத்தத்துக்குத் தயார் என்று அறிவித் திருந்தார்.
இதையடுத்து போர்நிறுத்தம் ஒன்று குறுகிய காலத்துக்கேனும் நடைமுறைக்கு வருவது போன்ற அறிகுறிகள் தென்பட்டன.
ஆனால் கடந்த வாரம், மேல் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் ஆளும் கட்சி யின் களுத்துறை மாவட்ட வேட்பாளர்கள் மத்தியில் பேசிய ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ போர்நிறுத்தம் என்ற பேச்சுக்கே இட மில்லை என்று இந்த விவகாரத்துக்கு முற்றுப் புள்ளி வைத்திருக்கிறார்.
எந்தவொரு உள்நாட்டு அல்லது வெளி நாட்டு சக்திகளுக்கும் அடிபணிந்து அரசாங்கம் போர்நிறுத்தம் செய்யாது என்று அவர் மேலும் கூறியிருக்கிறார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இந்த உரை அரசாங்கம் போர்நிறுத்தத்துக்கு ஒரு போதும் உடன்படப் போவதில்லை என்பதைத் தெளிவாக எடுத்துக் காட்டியிருக்கிறது.
ஒரு புறத்தில் சர்வதேச சமூகத்தைத் திருப் திப்படுத்தும் நோக்கில் நிபந்தனையின் அடிப் படையில் போர்நிறுத்தம் செய்யத் தயார் என்று அரசாங்கம் அறிவித்தாலும், மறுபுறத்தில் உள் நாட்டில் போர்நிறுத்தம் என்ற கருத்தை அடி யோடு நிராகரிக்கின்ற நிலையில்தான் இலங்கை அரசாங்கம் இருக்கிறது.
இது அரசாங்கம் இரு வேறு தந்திரோபாயங்களின் அடிப்படையில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சக்திகளைத் திருப்திப்படுத்த முனைவது தெளிவாகத் தெரிகிறது.
புலிகள் இயக்கம் இதுவரையில் போர் நிறுத்தம், பேச்சுவார்த்தை ஆகியவற்றுக்கு சில நிபந் தனைகளை விதித்து வந்தது.
போர்நிறுத்தத்துக்கு முந்திய காலத்தில் இருந் தது போன்று படைவிலக்கல் இடம்பெற வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியிருந்த னர்.
இப்போதைய நிலையில் இந்த நிபந்தனை சாத்தியமற்றது என்பதால் அவர்கள் கீழ் இறங்கி வந்து நிபந்தனையற்ற போர்நிறுத்தத் துக்குத் தயார் என்று அறிவித்திருக்கிறார்கள்.
ஆனால் அரசாங்கமோ புலிகளின் இந்த அறிவிப்பை முற்றாக நிராகரித்திருக்கிறது.
அரசாங்கம் இப்போதைய நிலையில் சற்றேனும் கீழ் இறங்கி வரத் தயாராக இல்லை.
புலிகளை வேரோடு அழித்து விட்டால் சரி போர்நிறுத்தம் இயல்பாக வந்து விடும் என்று கருதுகிறது.
இன்னும் மூன்று வாரங்களில் போர் முடிவுக்கு வந்து விடும் என்று அரசாங்கத் தரப்பில் அமைச்சர் ஜி.எல்.பீரீஸ் கூறியிருக்கிறார்.
இதேபோன்றுதான் இரண்டு மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வில் பேசிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன் னும் சில தினங்களில் புலிகள் அழிக்கப்பட்டு விடுவார்கள் என்று கூறியிருந்தார்.
இப்படிக் கூறிக் கூறியே அரசாங்கம் புலி களை அழித்துப் போருக்கு முடிவு காணும் கட்டம் நெருங்கி விட்டதாக தென்னிலங்கை மக் களை நம்பவைத்திருக்கிறது.
புலிகள் முற்றாக அழிக்கப்பட்டு விட்டார்கள் என்ற செய்தி எப்போது வெளியிடப்படும் என்ற ஆவலில் தென்னிலங்கை மக்கள் காத்திருக்கிறார்கள்.
அதேவேளை சர்வதேச சமூகத்தின் நெருக் குதல்களில் இருந்து அரசாங்கத்தால் தப்பிக்க முடியாத நிலையும் காணப்படுகிறது.
இதற்காகவே வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம, ஐ.நா.வுக்கான பிரதிநிதி பலிகக்கார போன்றோர் போர் நிறுத் தத்துக்கு உடன்படுவது போன்ற சமிக்ஞை களை வெளியிடுகிறார்கள்.
ஆக, அரசாங்கம் இப்போது உள்நாட்டுக் காக ஒரு கருத்தையும் வெளிநாடுகளுக்காக ஒரு கருத்தையும் முன் வைத்தாலும், அதன் ஒரே நிலைப்பாடு போர் நிறுத்தம் என்பதற்குச் சாத்தியமில்லை என்பதே.
வெளிநாடுகளுக்காக போர் நிறுத் தத்துக்குத் தயார் என்று சிலர் கூறியிருந்தாலும், மக்களை வெளியேற்றப் புலிகள் அனுமதித்தால் என்ற நிபந்தனை அதில் அடங்கியிருக்கிறது.
மக்களை வெளியேற்றுவது புலிகளின் கையில் மட்டும் இருப்பதாகத் தெரியவில்லை.
அதற்கு அப்பால் அங்கிருந்து மக்கள் வெளி யேறத் தயாராகவும் இருக்க வேண்டும்.
ஒரு பகுதி மக்கள் வேண்டுமானால் வெளியேறலாம்.
ஆனால் முழுமையாக வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.
இந்த முன்நிபந் தனைக்கு அடி பணிந்து போர் நிறுத் தத்துக்குப் புலிகள் இணங்குவார்கள் என்று அரசாங்கம் நம்பவில்லை. எனவே தான் அது தைரியமாக சர்வதேசத்தின் முன்னிலையில் இப்படியான அறிவிப்பை வெளியிட்டது.
அதேவேளை இந்தப் போரை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினாலோ அல்லது அவரது அரசாங்கத்தினாலோ இலகுவில் நிறுத்தி விட முடியாது. ஏனென்றால் போரை நிறுத்தும் கட்டத்தை கடந்து விட்டது.
திடீரென போரை நிறுத்தினால் அது அர சாங்கத்தையும் பாதிக்கும் என்பதை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புரிந்து கொள்ளாதிருக்க மாட்டார்.
தென்னிலங்கை மக்களிடத்தில் மிகப் பெ?ய இராணுவ வெற்றிக் கதைகளை கூறி யுள்ள, அரசாங்கத்தினால் போரை நிறுத்தி பேச்சு நடத் தப் போவதாகப் பூச்சாண்டி காட்ட முடியாது.
அப்படி அரசாங்கம் செய்யுமேயானால் அடுத்து வரப்போகும் தேர்தல்களில் ஆளும்கட்சி பின்னடைவுகளை தோல்விக ளைச் சந்திக்க நேரிடும்.
புலிகள் இயக்கத்தை 99 வீதம் அழித்து விட் டதாக கூறிய அரசாங்கம் கடைசி ஒரு வீதத்தை அழிக்காமல் எதற்காக போர்நிறுத்தம் செய்தது என்று எதிர்க்கட்சிகள் மட்டுமன்றி ஆளும்கட்சிக்குள்ளேயே கேள்விகள் எழுப் பப்படும்.
அதேபோன்று படைத்தரப்பிலும் அதிருப்தி கள் தெ?விக்கப்படலாம். இவையெல்லாம் இலகுவில் கட்டுப்படுத்த முடியாத சமாளிக்க முடியாத சிக்கலை அர சாங்கத்துக்கு ஏற்படுத் தும்.
போரில் இப் போது இரண்டு தரப்புமே கடு மையான இழப் புகளைச் சந்திக்கத் தொடங்கியிருக்கின்ற நிலையில் கூட போரை நிறுத்த முடியாத கட்டம் அரசாங்கத் துக்கு வந்திருக்கிறது.
தூக்கிய காவடியை ஆடித்தான் இறக்க வேண்டும் என்ற கட்டத்தில் அரசாங்கம் இருக்கிறது.
இந்த ஆட்டத்தில் அரசாங்கம் இராணுவ ரீதியாக பின்னடைவுகளைச் சந்தித்தாலும் சரி அல்லது முழுமையான வெற்றியைப் பெறாமல் போரை நிறுத்தினாலும் சரி பாதிப்பு ஏற்படப் போவது ஆளும்கட்சிக்கே.
எனவே, அரசாங்கம் போரை எப்படியாவது விரைந்து முடித்து விடும் முயற்சிகளை எடுக்குமே தவிர ஒரு போதும் போரை நிறுத்தும் யோசனையைக் கொண்டிருக்காது.
அத்துடன் போர்நிறுத்தம் செய்யுமாறு விடுக்கப்படும் கோரிக்கைகளும் அதன் காதில் விழவே விழாது.
-சத்திரியன்
நன்றி:வீரகேசரி வாரவெளியீடு
Comments