வன்னியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள எஞ்சிய பிரதேசங்களையும் மீட்பதற்கான பெரும் யுத்த நடவடிக்கைக்கு சிறீலங்காப் படையினர் தயாரான போதும் விடுதலைப் புலிகளின் எதிர்த் தாக்குதல்களால் அவை முறியடிக்கப்பட்டு வருகின்றன.
சிறீலங்காப் படையினர் மீண்டும் மீண்டும் இடம்பெயர்ந்த மக்களை மனிதக் கேடயமாகப் பயன்படுத்தியவாறு மேற்கொண்டு வரும் முன்னகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டு வருகின்றது என பதிவு இணயத்தின் வன்னிச் செய்தியாளர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்:
சிறீலங்காப் படையினரின் யுத்த நடவடிக்கையினால் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் இராணு ஆக்கிரமிப்பால் சிறைப்பிடிக்கப்பட்ட மக்களை மனிதக் கேடமான முன்னகர்த்தியவாறு படையினர் மேற்கொண்ட படை நகர்வுகளின் போது படையினரை இலக்கு வைத்து தமிழீழ விடுதலைப் புலிகளின் குறி சூட்டு அணியினர் நடத்திய குறி சூட்டுத் தாக்குதல்களினால் அவை முறியடிக்கப்பட்டுள்ளன.
ஆக்கிரமிப்பு நகர்வுகளை சிறீலங்காப் படையினர் மேற்கொண்ட போதும் அவை விடுதலைப் புலிகளின் கடுமையான எதிர்த் தாக்குதல்களால் கிடப்பில் போடப்பட்டுள்ள நிலையில் ஆங்காங்கே உக்கிர மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. இதானல் படையினரின் நகர்வுகள் காலதாமதமாகி வருகின்றன.
மனிதக் கேடயங்களாப் பயன்படுத்தும் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழ் மக்களை பச்சைப்புல்மோட்டைப் பிரதேசத்தில் சிறீலங்காப் படையினர் தடுத்து வைத்துள்ளனர். அங்கிருந்தவாறே நகர்வுகள் மேற்கொள்ளப்படும் முன்னணி நிலைக்கு மக்கள் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
இந்த நிலையில் இன்று சனிக்கிழமை சிறீலங்காப் படையினர் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு ஏதுவாக அகோர வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments