பாலுக்கு ஏங்கி சாகும் குழந்தைகள்!

புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள மக்கள் பாதுகாப்பு பகுதியில் வெறும் 30 ஆயிரம் பேர்தான் இருக்கிறார்கள் என்று சொல்லி தொடர்ந்து அப்பகுதி மீது எறிகணைத் தாக்குதலை நடத்தி வந்த இலங்கை ராணுவம், தற்போது மக்கள் பாதுகாப்பு பகுதியிலிருந்து வெள்ளிக்கிழமை வரையிலான 3 நாட்களில் மட்டும் 1 லட்சத்து 3 ஆயிரம்பேர் வெளியேறியிருப்பதாகவும் இவர்களில் 31 ஆயிரம் பேர் சிறுவர்கள் என்றும் புள்ளிவிவரம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், ""இன்னும் 15 ஆயிரம் பேர் மட்டுமே இருக்கிறார்கள். அவர்களையும் வெளியேற்றிவிட்டு புலிகளை ஒட்டு மொத்தமாக அழித்துவிடுவோம். பிரபாகரன் இனி சரணடைந்தாலும் அவருக்கு மன்னிப்பு கிடையாது'' என்று கொக்கரித்திருக்கிறார் ராஜபக்சே. இவரது கூற்றுக்கு ஒருபடி மேலே சென்றுள்ள பிரதமர் ரத்தினஸ்ரீவிக்கிரமநாயகே, ""தமிழ் மக்கள் மண் சோறு சாப்பிட்டாலும் புலிகளை அழிக்கும் போர் ஓயாது. பிரபாகரனை அழித்தே தீரு வோம்'' என்று ஆவேசப்பட்டிருக்கிறார்.

இந்த சூழலில், வெளியேறிய மக்களுக்கான வசதிகளை இலங்கை அரசாங்கம் செய்து கொடுக்க மறுப்பதாகவும் குடிப்பதற்கு ஒரு சொட்டு தண்ணீருக்காக ராணுவத்தினரோடு அல்லாடுவதாகவும் வன்னியிலிருந்து வரும் தகவல்கள் நமது நெஞ்சை அடைப்பதாக இருக்கிறது.

வன்னி பகுதியில் உள்ள ராணுவ கட்டுப்பாட்டு பகுதிகளுக்குள் வந்துள்ள மக்கள், ""வெளியேறும் மக்களுக்கு எல்லா வசதிகளையும் ஏற்பாடு செய்து தயார் நிலையில் இருப்பதாக சிங்கள அரசாங்கமும் ராணுவமும் சொன்னது. ஆனால் இங்கு ஒரு சொட்டு தண்ணீர் குடிக்ககூட நீண்ட வரிசையில் நிற்கவேண்டும். அதுவும் எல்லாருக் கும் கிடைத்துவிடாது. அதே மாதிரி ஒரு வேளை சாப்பாட்டை வாங்குவதற்கும் பிச்சைக் காரர்கள் மாதிரி அடித்துக்கொள்ள வேண்டி யிருக்கிறது. புலிகள் பகுதியில் இருந்தபோது இத்த கைய கொடுமைகள் இல்லை. ட்ரக்கு களிலும் படகுகளிலும் கால் நடையாகவும் எங்களை இழுத்துவந்த ராணுவத்தினர் தங்குவதற்கும் எந்த ஏற் பாட்டையும் செய்யவில்லை.

ட்ரக்குகளில் அடைந்து கிடந்தவர்கள் 2 நாளாகியும் அவர்களை கீழே இறங்க விடாமல் அதிலேயே அடைத்து வைத்தது ராணு வம். இதனால் 5 குழந்தைகள் இறந்துபோனது. பாலுக்கு ஏங்கி ஏங்கியே குழந்தைகள் சாகின்றன.

பெரியவர்கள் ஒரு வேளை வயிறார சாப்பிட சோறு இல்லை, காயம் பட்டவர்களுக்கு மருந்து இல்லை, தங்குவதற்கு இட மும் இல்லை. குளிக்கவும் வழியில்லை, மாற்று துணி களும் கிடையாது, இதனால் கடுமையான வெப்பத்தால் உருவாகும் அம்மை நோய் குழந்தைகளை தாக்குகிறது. இந்த அம்மை நோய் தொற்று நோய் என்பதால் மற்றவர் களுக்கும் பரவிவிடுகிறது.

அப்படி அப்படியே எல்லோரும் திரிந்துகொண் டிருக்கிறோம். திடீர்திடீரென்று ராணுவம் வந்து 50 பேர், 100 பேர் என தங்களது ராணுவ வாகனத்தில் ஏத்திக்கிட்டு கிளம்பிவிடுகிறது. எங்கு கொண்டுபோய் அடைத்து வைத்திருக்கிறார்கள் என்றும் கூட சொல்ல மறுக்கிறார்கள்.

புலிகளோடு பாதுகாப்பு வளைய பகுதியிலிருக்கும்போது எங்கட மீது குண்டு போட்டு அழித்தது ராணுவம். இங்கே எந்த வசதியையும் செய்து கொடுக்காமல் பட்டினிப் போட்டு கொல்கிறது. எங்கட துயரங்களை அவஸ்தைகளை வார்த்தைகளில் எழுத்துகளில் காட்சிகளில் விவரித்துவிட முடியாது. இங்கு களத்தில் அனுபவித்து பார்த்தால்தான் அதனை உணரமுடியும்'' என்று கதறுகின்றனர்.

இதற்கிடையே, பாது காப்பு வளைய பகுதிக்குள் நுழைந்துள்ள ராணுவம் உக்கிர மான தாக்குதலை நடத்தி வருகிறது. இது பற்றி கூறிய ராணுவ தளபதி சரத்பொன் சேகா, ""புலிகளின் கட்டுப் பாட்டு பகுதியை வெகுவாக குறைத்துவிட்டோம். தற்போது வெறும் 8 கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட பகுதிகள் மட்டுமே இருக் கிறது. ராணுவத்தை எதிர்த்து கடுமை யாக புலிகளும் தாக்கி வருகின்றனர். குறுகிய பகுதிதான் என்பதால் அவர் களின் தாக்குதல் கடுமையாக இருக் கிறது. அதனை சமாளிப்பது ராணு வத்திற்கு சிரமமாகத்தான் உள்ளது. ஆனால் இன்னும் ஓரிரு நாளில் எல்லாவற்றையும் முடித்துவிடுவோம். பிரபாகரன் தப்பிக்க முடியாது'' என்கிறார். அதேசமயம் ராணுவத்தின் உக்கிரமான குண்டு வீச்சில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதும் அதிகரித்தபடியேதான் இருக்கிறது.

தற்போதைய நிலைமை குறித்து வன்னியில் விசாரித்தபோது, ""8 கிலோ மீட்டர் என்பது மிக குறுகிய நிலப் பரப்புதான். இதனை 8 நிமிடத்தில் ராணுவம் பிடித்துவிட முடியுமே என்று தோன்றும். ஆனால் அது முடியாது. இந்தியாவின் ராணுவ உதவியால் பிரபாகரனும் முக்கிய தளபதிகளும் எங்கு இருக்கிறார்கள் என்று ஆளில்லாத உளவு விமானத் தின் மூலம் கண்டுபிடித்துள்ளார் ராஜ பக்சே. இது பிரபாகரனுக்கும் தெரியும். அதனால் இனி ராணுவம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அங்குல முன்னேற் றத்திற்கும் கடுமையான எதிர்தாக்கு தலை சந்திப்பார்கள் ராணுவத்தினர். இதில் ராணுவத்திற்கு ஏற்படும் இழப்பு கள் அதிகமாக இருக்கும் என்பதே கடைசி நேரத் தகவல்.

-கொழும்பிலிருந்து எழில்

தயா மாஸ்டர் பெயரில் புருடா!


புலிகளின் ஊடகத்துறை பொறுப்பாளராக இருந்த தயா மாஸ்டரும், ராணுவத்தினால் வீரச்சாவடைந்த புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனின் மொழிப் பெயர்ப்பாளராக இருந்த ஜார்ஜ், ஆகிய இருவரும் ராணுவத் தினரிடம் சரண் அடைந்ததாக உரத்துக் கூறினார்கள் ராணுவ தளபதிகள்.

ஆனால் இது கட்டுக்கதை என்று சரண் அடைந்ததை வலிமையாக மறுத்தனர் புலிகள். அதன்பிறகு சரண் அடைந்ததாகக் கூறுவதை ராணுவம் நிறுத்திக் கொண்டது.

உண்மையில் நடந்தது என்ன?

புலிகளை பொறுத்தவரை தயா மாஸ்டரும் ஜார்ஜும் முக்கியமானவர்கள்தான். ஆனால் தயா மாஸ்டர் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக இதய நோயால் அவதிப்பட்டுக்கொண்டு வந்தார். கடந்த வருடம் இதற்காக இதய அறுவை சிகிச்சையும் தயா மாஸ்டருக்கு நடந்தது. அதன் பிறகு அவருக்கு நிறைய ஓய்வு தேவை என்று மருத்துவர்கள் கூறிய ஆலோசனையின்படி அவருக்கு இயக்கப்பணிகளில் இருந்து ஓய்வு கொடுத்து விட்டார் பிரபாகரன். அதேசமயம் மருத்துவ மேற்சிகிச்சைகளையும் தவறாமல் எடுத்துகொள்ள பிரபாகரன் அறிவுறுத்தியிருந்த படியால் தயா மாஸ்டர், மருத் துவமனைகளுக்கே அலைந்து கொண்டிருந்தார்.

கிளிநொச்சிக்கு பிறகு புலிகள் முல்லைத்தீவிற்கு இடம் பெயர்ந்த நிலையில் புது மாத்தளன் மருத்துவமனையில் அட்மிட்டாகியிருந்தார் தயா மாஸ்டர். அதேபோல தமிழ்ச் செல்வனின் படுகொலைக்கு பிறகு, ஜார்ஜுக்கும் ஓய்வு கொடுத்து விட்டார் பிரபாகரன்.

காரணம் ஜார்ஜுக்கு 60 வயதிற்கு மேல் ஆகிவிட்டதால் குடும்பத்தோடு ஓய்வினை செலவழிக்கச் சொல்லி அறி வுறுத்தினார். அதனால் ஜார்ஜும் புதுமாத்தளனில் குடும்பத்தோடு இருந்து வந்தார். இந்நிலையில் இவருக்கும் உடல்நிலை சரி யில்லாததால் புதுமாத்தளன் மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருந்தார். புதுமாத்தளன் மருத்துவமனை மீதும் குடியிருப்பு கள் மீதும் தொடர்ச்சியான குண்டுகளை வீசியது ராணுவம்.
இதில் மருத்துவமனை சேதமடைந்தது. குடியிருப்பு களும் தீக்கிரையானது. அந்த சமயத்தில், அப்பகுதியை விட்டு மக்கள் வெளியேறியபோது அவர்களோடு தயாமாஸ்டரும் ஜார்ஜும் அடுத்த பகுதிக்கு செல்வதற்காக விரைந்தனர்.

அப்போது அந்த பகுதிக்குள் நுழைந்த ராணு வம் மக்களை வளைத்து பிடித்து வலுக் கட்டாயமாக இழுத்துச் சென் றது. மக்களோடு மக்களாக இருந்த அவர்களிடம் ராணுவம் விசாரித்தபோதுதான் இவர்கள் தங்களை பற்றிய விவரங்களை சொல்லியுள்ளனர். அதன்பிறகு ராணுவத்தின் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக் கப்பட, அதனைத்தொடர்ந்து ஒரு திரைக்கதை எழுதப்பட்டு சரண் அடைந்ததாக கட்டுக்கதையை அவிழ்த்து விட்டனர் ராணுவ அதிகாரிகள். தற்போது அவர்கள் இருவர் மீதும் தேசவிரோத சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் நிரந்தர மாக அடைத்து வைக்க ராணுவத் தரப்பில் முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. இதற் கிடையே பிரபாகரனைப் பற்றியும் புலிகளை பற்றியும் இவர்கள் இருவரும் வாக்குமூலம் தந்ததாக புருடா செய்திகளை வெளியிட ராணுவ அதிகாரிகள் திட்டமிட்டி ருப்பதாக கொழும்பில் தகவல்கள் பரவிக்கிடக்கின்றன.

Comments