கனடாவின் ரொறன்ரோவில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தின் முன்பாக தமிழ் இளையோர் அமைப்பினால் தொடர் போராட்டம் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் தொடக்கம் நடைபெறுகின்றது.
ஏராளமான மாணவர்களும் மக்களும் தொடர்ந்து இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டு வருகின்றனர்.
ஏராளமான புலிக் கொடிகளையும், தேசியத் தலைவரின் படங்களையும் தாங்கி, வன்னியில் தற்போது நிகழும் இன அழிப்பின் கோரங்களை உலகின் கவனத்திற்குக் கொண்டுவரும் பல்வேறு படங்கள் பதாதைகளைத் தாங்கியபடி, முழக்கங்களுடன் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
காலத்தின் தேவை கருதி, அனைத்து மக்களும் தொடர்ந்து தமக்கு வசதியான நேரங்களில் இந்தக் கவனயீர்ப்பு நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Comments