தாயகத்தில் சிறீலங்கா படையினரது தாக்குதல்கள், மற்றும் பொருண்மியத் தடையினரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிப் பொருள்களை எடுத்துச் செல்லவுள்ள “வணங்கா மண்” கப்பலுக்கான உணவுப் பொருள்கள், மற்றும் நிதி என்பன யேர்மனி, பிரான்ஸ், நோர்வே, நெதர்லாந்து போன்ற நாடுகளுடன் சுவிசிலும் இடம்பெற்று வருகின்றது.
சுவிசிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் நிதி, மற்றும் பொருள் சேகரிப்பு நடவடிக்கை இடம்பெற்று வருவதாக அறிவித்துள்ள ஏற்பாட்டுக் குழுவினர், எதிர்வரும் 7ஆம் நாள் (செவ்வாய்க்கிழமை) இரவு 8:00 மணிக்கு முன்பாக மக்கள் நிதி, மற்றும் பொருள்களை வழங்க முடியும் என அறிவித்துள்ளனர்.
Comments