குறிப்பாக, இந்திய இராணுவ தளவாடங்களை வைத்து, போராளிகளை சிங்கள பேரினவாத அரசாங்கம் மிகவும் எச்சரிக்கையாக அணுகியது.
இதில் பல ஆயிரம் கோடிகளை இராணுவ செலவுக்காக இன அழிப்பு நடவடிக்கைக்காக கொட்டியது இந்திய அரசு. தமிழின படுகொலையை நிகழ்த்திய இந்திய அமைதிப்படையைப் பார்த்து கபட சிரிப்பு சிரித்தது சிங்கள அரசு. பொருள் இழப்பு, பல ஆயிரம் இந்திய படை வீரர்களை இழந்து வெறுங்கையுடன் திரும்பியது.
என்ன சாதித்தது?
அண்டை மண்ணில் மண்ணை கவ்வியப்படி முக்காடுப் போட்டுக் கொண்டு திரும்பியது அமைதிப்படை.
அது போலவே கணவனை இழந்து துயரத்தில் இருக்கும் சோனியாவின் குரோத்த்தை இராஜபக்சே பயன்படுத்திக் கொண்டார். அன்று ஒப்பந்தத்தின் மூலம் அத்துமீரல் நிகழ்த்தப்பட்ட்து. இப்போது சிங்கள அரசு தன் சொந்த மக்களின் மீதே முப்படைத் தாக்குதல்களை நிகழ்த்திவருகிறது.
இன்று ஒப்பந்தங்கள் இல்லை. மறைமுக தார்மீக ஆதரவு…
(இடையிடையே மேனன்,முகர்ஜி , சோனியா காந்தி போர் குறித்து ஆழ்ந்த கவலைகளை பகிர்ந்து கொள்வார்கள்)
வழி நடத்துவது இந்தியப்படை.
தொழில் நுட்ப உதவிகளை அளிப்பது இந்தியப்படை.
பயிற்சி அளிப்பது இந்தியப்படை.
நிதி உதவிகளை வழங்குவது இந்திய அரசு.
நேற்றுக் கூட உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட இரசாயண குண்டுகளை வீசியுள்ளது. நூற்றுக்கணக்கான மக்களை படுகொலை செய்யப்பட்டுள்ளதை உலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.
எதைக் கைப்பற்ற இந்த போர்?.
யாரைக்கேட்டார் சோனியா?
நாடாளுமன்றத்தில் விவாதித்தாரா?
எதிர் கட்சியுடனே பேசினாரா?
அல்லது தோழமைக் கட்சியின் ஒப்புதல் வாங்கினாரா?
சாதித்தது என்னவோ இராஜபக்சேதான்.
பல இலட்சக்கனக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர்.
போராளிகளின் எல்லைகள் சுறுக்கப்பட்டு விட்டது. சம்மந்தமே இல்லாத இந்தியாவை, சோனியாவின் குரோத குணத்தைக் நயவஞ்சகமாக பயன்படுத்தினார் பக்சே.
இந்தியாவின் வெளியுரவுக் கொள்கை காற்றில் பறக்கிறது.
இந்திய சாமாதான புறா இரத்தத்தில் முகிழ்ந்து பறக்கிறது.
பல ஆயிரம் இந்திய வீரர்களின் மரணம் ஏன். யாரால்?
உலக வல்லரசுகளே நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளபோது இந்திய கரன்சிகள் கோடி கோடியாக இலங்கையில் ஏன் கொட்டப்படுகிறது?
சோனியா நினைக்கிறார் , போராளிகளை தனிமைப்படுத்தி ஒழிக்கலாம் என்று?.
இராஜபக்சேவுக்குத் தெரியும் போராளிகளை மக்களும் வேறல்ல என்று.
சுமார் 3 இலட்சம் ஈழத்தமிழர் கொலைக்களத்தின் விளிம்பில் மிரட்சியோடு நிற்கிறார்களே யாரால்?
தினம் தினம் இந்திய வீரர்களின் சவப்பெட்டி வந்தவண்ணம் உள்ளதே யாரால்?
சோனியா எதை வென்றார்?
பதில் வெறுமையே.
Comments