தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு; அக்கறையற்ற முறையில் அரசாங்கம் நிராகரிப்பு: ஏ எப் பி
எனினும், தமிழீழ விடுதலைப் புலிகளின் இந்த கோரிக்கையை இலங்கை அரசாங்கம் முற்றாக நிராகரித்துள்ளதாக ஏ எப் பி செய்தி சேவை சுட்டிக்காட்டியுள்ளது.
இது குறித்து ஏ எவ் பி செய்திச் சேவை தெரிவித்திருப்பதாவது:-
தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் சமாதான பேச்சுவார்த்தைக்கு அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாக ஏ எப் பி செய்தி சேவை செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கை அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட 2 நாள் மோதல் தவிர்ப்பு காலம், இராணுவத்தினருக்கு வழங்கப்பட்ட இரண்டு நாள் விடுமுறையாகவே தாம் கருதுவதாக தமிழீழ விடுலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழ் பொது மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கு, ஓரு நிரந்தர போர் நிறுத்தம் அவசியம் என அவர்கள் தெரிவித்துள்ளதாக ஏ எப் பி செய்தி சேவை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் நிரந்தரமான போர் நிறுத்தம் ஒன்றினை மேற்கொண்டு, சமாதான பேச்சுவர்த்தைக்கு வர தாம் தயாராக இருப்பதாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை தமிழீழ விடுதலைப் புலிகளின் இந்த கோரிக்கையை இலங்கை அரசாங்கம் முற்றாக நிராகரித்துள்ளதாகவும் ஏ எப் பி செய்தி சேவை சுட்டிக்காட்டியுள்ளது.
தற்போது விடுதலைப் புலிகள் மீள முடியாத தோல்வியை கண்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்திருப்பதாக அந்த செய்தியில் குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில் எந்த காரணத்திற்காகவும் நிரந்தர போர் நிறுத்தத்தை அறிவிக்கப் போவதில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பாதுகாப்பு பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெலவிடம் எமது செய்திப் பிரிவு தொடர்பு கொண்டு வினவிய போது கருத்து தெரிவித்த பாதுகாப்பு பேச்சாளர், விடுதலைப் புலிகளுடன் எந்த நிலையிலும் சமாதான பேச்சுவார்த்தைக்கு செல்லப் போவதில்லை என தெரிவித்தார்.
அத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான சமாதானப் பேச்சுவார்த்தை என்ற வசனம் தமது அரசினால் தடை செய்யப்பட்ட வசனமாகவே கருதுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் தோல்வியுற்று பலமிழக்கும் வேளையில், தம்மை வலுப்படுத்திக் கொள்ள இவ்வாறு பேச்சுவார்த்தைகளுக்கு அழைப்பு விடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இது தொடர்பில், சர்வதேச அழுத்தத்தையும் பிரயோகித்து, அரசாங்கத்தினை இணங்க வைக்க முயற்சிக்கின்றனர். எனினும், இதற்கு தற்போதைய அரசாங்கம் இசைந்து கொடுக்காது என பாதுகாப்பு பேச்சாளர் இதன் போது தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தினால் மேற்கொள்ள வேண்டிய ஒரே வேலை, பாதிக்கப்பட்டுள் தமிழ் மக்களை விடுவிக்கும் நடவடிக்கை மாத்திரமே என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Comments