மட்டக்களப்பில் துணை ஆயதக்குழுக்களால் நடாத்தப்பட்டுவரும் மக்கள் களியாட்ட விழாக்களை முன்னிட்டு நேற்று தென்தமிழீழ மக்கள் பேரவை நேற்று வெளியிட்டுள்ள துண்டுப்பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
நமது தேசிய விடுதலைப் போராட்டம் ஒரு தீர்க்கமானதும் இறுக்கமானதுமான ஒரு கட்டத்தில் நிற்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். மரபு நிலைப் போராற்றலை சிதைப்பதனுடாக மரபுவழித் தாயகக் கோட்பாட்டை அழித்துவிடலாம் என சிங்கள தேசம் கங்கணம் கட்டி நிற்கிறது. ஊடக ஏகதிபத்தியங்களினதும் இந்திய அடக்கு முறைவாதிகளினதும் முண்டுகொடுப்பில் தமிழர் தேசம் கபழீகரம் செய்யப்பட்டு வயதுவேறுபாடின்றி வகை தொகையற்று நம் உறவுகள் உடல் கருகி சாகும் தறுவாயிலும் நாகரீக உலகின் மனிதத்துவம் நமக்காக எதுவும் செய்ய முடியாது கை பிசைந்து நிற்க, கொடுங்கோல் ராஜபக்ஷக்கள் இன வெறித்தாண்டவமாடி இன அழிப்பை அரங்கேற்றி கொண்டிருக்கும் இந்த இக்கட்டான கால கட்டத்தில் களத்தில் விடுதலைப் போராளிகளும் புலத்தில் நம் உறவுகளும் தமிழகத்தில் எமது தொப்புள்கொடி உறவுகளும் போராடிக் கெண்டிருக்க நாம் நமது வரலாற்றுக் கடமையை மறந்து இன்று என்ன செய்து கொண்டிருக்கின்றோம்.
விடுதலைப் போராட்டத்தை காட்டிக்கொடுத்த கயவர்களுடன் கூட்டுவைத்து அவர்கள் பேசுகின்ற பசப்பு வார்த்தையில் மயங்கி மலசலகூடத்தை கூட இடமாற்ற தகுதியற்ற மாகாணசபை எனும் மாயாஜாலத்துள் முகம் புதைத்து இன்று மகிந்தவின் கறைபடிந்த வேட்டிக்கு வெள்ளாவி போடும் கயவனின் அராஜகத்துக்கு பயந்து சிறிலங்கா சுதந்திரக்கட்சிக்கு கொடிபிடித்து பசை வாளி சுமந்து திரிகின்றோம். அத்தோடு சிங்கள தேச எஜமானர்களின் பாதணிகளை நக்கி துடைக்கும் இக்கூட்டம் நம்மை எல்லாம் அந்த எஜமானர்களுக்கு அடிமையாக இருந்து உயிர் வாழும் தகுதியை பெறுங்கள் என்று மேடை போட்டு முழங்குவார்கள். கைகளை உருட்டியும் பிரட்டியும் சைகை செய்து பொய்களை உன்மையாக புனைந்து நாம் எவ்வாறு 'சிறந்த முறையில்;' சிங்கள தேசத்துக்குள் அடிமையாக வாழலாம் என்று பேட்டிகளிலே நமக்கு கற்றுத்தருவார்கள்.
உலகத்தமிழர்கள் இரத்தக்கண்ணீர் வடிக்கும் இந்நேரத்தில் இவர்கள் இழுத்த இழுப்புக்களுக்கெல்லாம் எவ்வளவு நாள் இழுபடப் போகின்றோம்? எனினும் இளைஞர்களே எல்லோரும் உணர்வுகளை வெளிக்காட்டுவது போல்
வெளியே காட்டமுடியாத திறந்த வெளிச்சிறைக்குள் வாழும் நாம் நம் சக்திக்கு உட்பட்ட வகையில் அழியும் நம் உறவுகளுக்காக நம் ஆதரவுகளையும் ஆறுதலையும் இன உணர்வுகளையும் பகிர்வோம். உணர்வு மிக்க இளைஞர்களே! அழிகின்ற நம் தேச மக்களின் துன்பங்களில்
பங்கேற்பதற்காக களியாட்ட நிகழ்ச்சிகள், கொண்டாட்ட வைபவங்கள் குதுகலிப்பு வெடிகள் பேன்றவற்றை தவிர்த்து வரலாற்று கடமையில் நம் பாத்திரத்தினை செய்ய நம்மை தயார்படுத்திக்கொள்வோம். சிங்களப் படையுடன் சேர்ந்து சித்திரைப் புதுவருடத்தை கொண்டாட வேண்டாம் எனவும் இத்தால் கேட்டுக்கொள்கின்றோம்.
குறிப்பு: இவ்வறிவித்தலை கவனத்தில் கொள்ள தவறும் சங்கங்கள்,விளையாட்டு கழகங்கள், அமைப்புக்கள் உன்னிப்பாக கவனிக்கப்படும் என்பதை அறியத்தருவதுடன் இவ்வறிவித்தலை தெரியாதவர்களுக்கும் தெரியப்படுத்துமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
என அத்துண்டுப்பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments