ஐ.நா. வின் சுயரூபம் அம்பலம் கல்லில் நாருரிக்க முயலும் தமிழர்கள்

சிறிலங்காவின் கோரிக்கையை ஐ.நா. வழிமொழிந்தது - விடுதலைப் புலிகளைச் சரணடையுமாறு ஐ.நா கோரிக்கை!

தமிழீழ விடுதலைப் புலிகளைச் சரணடையுமாறு ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபை கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து நியூயோர்க்கில் நடைபெற்ற பாதுகாப்புச் சபை கூட்டத்தில் பிற்பாடு பாதுகாப்பு சபையின் தலைவர் குளூட் கெலர் (Claude Heller) இக்கருத்தினைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்: தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாத நடவடிக்கைகளை விட்டுவிட்டு ஆயுதங்களைக் கீழே வைக்கவேண்டும்.ஐக்கிய நாடுகள் சபையின் உதவியுடன் எஞ்சியுள்ள பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற்ற தமிழீழ விடுதலைப் புலிகள் உதவவேண்டும்.

தமிழீழ விடுதலைப் புலிகள் பேச்சு வார்த்தைகளின் ஊடாக அரசியல் தீர்வை ஆரம்பித்து இன முரண்பாட்டை முடிவுக்கு கொண்டு வரவேண்டும்.பயங்கரவாத அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகள் அப்பகுதியில் மக்களை விடுவிக்காது வைத்திருப்பதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

இதேநேரம் சிறீலங்கா அரசாங்கம் அனைத்துலக மனிதாபிமான சட்டவிதிகளுக்கு உட்பட்டு நடக்க வேண்டும். இடம்பெயர்ந்த மக்களுக்கான உதவிகளைச் சென்றடைவதை அனுமதிக்க வேண்டும் எனவும் பாதுகாப்புச் சபையின் தலைவர் குளூட் கெலர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் ஒருபோதும் சிறிலங்கா இராணுவத்தினரிடம் சரணடையமாட்டார்கள்,

அப்படி ஒருசூழ்நிலை வந்துவிடவில்லை, விடுதலைப்புலிகள் தற்போதும் முழுநம்பிக்கையுடனும் தைரியத்துடனுமே போராடிவருகின்றனர்

என தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலக பொறுப்பாளர் புலித்தேவன் கடந்த செவ்வாயன்று தெரிவித்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.


விடுதலைப் புலிகள் ஒருபோதும் சரணடையப்போவதில்லை: புலித்தேவன் அறிவிப்பு



Comments