இலங்கையில் அப்பாவி தமிழர்களை குண்டு வீசி தாக்கி கொன்று வரும் சிங்கள இராணுவத்தை கண்டித்தும் உடனே போர் நிறுத்தம் செய்ய வற்புறுத்தியும் தமிழீழ ஆதரவு இயக்கம் சார்பில் கந்திலியில் பொதுக்கூட்டம் நடந்தது.
ஒருங்கிணைப்பாளர் கண்ணன் தலைமை தாங்கினார். புரட்சிகர இளைஞர் முன்னணி வக்கீல் வே.ஆனந்தகிருஷ்ணன், ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணியை சேர்ந்த வக்கீல் மதியழகன், பெருமாள், சட்டக்கல்லூரி மாணவி மும்தாஜ், விவசாய தொழிலாளர் முன்னணியை சேர்ந்த செந்தில், ராஜகுரு, வெங்கடேசன், மூர்த்தி, பா.ம.க. ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ் ஆகியோர் இலங்கை அரசை கண்டித்து பேசினார்கள்.
மாவட்ட திராவிடர் கழக துணைத் தலைவர் கோவிந்தன், பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட துணைத் தலைவர் கு.பெருமாள், பள்ளத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் சின்னராஜ், கலை இலக்கிய அணி ஒன்றிய செயலாளர் ரமேஷ், அம்பேத்கார் சுமை தூக்கும் தொழிலாளர் சங்க தலைவர் பட்டேல் மற்றும் ஏராளமான பொதுமக்கள் பலர் கலந்து கொ டனர்.
தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சினிமா இயக்குனர் சீமான், திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி, ம.தி.மு.க. கொள்கை பரப்புச்செயலாளர் நாஞ்சில் சம்பத், விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த 26 பேர் உள்பட அனைவரையும் தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும்.
ஈழத்தமிழர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் மீது போலீசார் தாக்கியதை கண்டிப்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. முடிவில் செல்வராணி நன்றி கூறினார்.
Comments