சோனியா குடும்பத்துக்கு மிரட்டல் விடுக்கவில்லை: விடுதலைப்புலிகள்

ltte1விடுதலைப்புலிகளால் சோனியா உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று மத்திய உளவுத் துறை எச்சரித்தது. உளவுத்துறை எச்சரிக்கையைத் தொடர்ந்து சோனியா காந்திக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு விடுதலைப்புலிகள் மறுப்பு தெரிவித்து உள்ளனர். இது பற்றி விடுதலைப்புலிகளின் ஆதரவு இணையதளம் ஒன்றில் கூறப்பட்டுள்ளதாவது.

சோனியாகாந்திக்கோ, அல்லது அவருடைய குழந்தைகளுக்கோ எங்களால் எந்த ஆபத்தும் வராது. எங்களுக்கு கெட்டப்பெயரை உருவாக்க வேண்டும் என்று இப்படி செய்தியை பரப்பி வருகிறார்கள். இலங்கை தமிழர்களுக்கும், இந்தியாவுக்கும் இடையே பிளவை ஏற்படுத்துவதுடன் இலங்கை தமிழர் பிரச்சினையை திசை திருப்பும் வகையில் இவ்வாறு தகவல்கள் வெளியிடப்படுகின்றன என்று கூறப்பட்டுள்ளது.

Comments