தமிழ்ப் பகை சக்திகளை முறியடிக்க திரள்வீர் - பழ.நெடுமாறன் அழைப்பு

தமிழ்நாட்டில் வாழும் ஆறரைக் கோடி தமிழ் மக்களும் ஒன்றாக இணைந்து "இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்படவேண்டும், ஈழத்தமிழர் படுகொலை நிறுத்தப்படவேண்டும்" என்ற கோரிக்கைகளை முன்வைத்து பலவகையான போராட்டங்களை கடந்த 4 மாதங்களுக்கு மேலாக நடத்தியும் இந்திய அரசு அதற்கு செவிசாய்க்க வில்லை. இந்தச் சூழ்நிலையில் வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர்கள் ஆற்ற வேண்டிய கடமை குறித்து ஆராய்வதற்காக திருச்சியில் வருகிற 4-4-09 சனிக்கிழமை அன்று கலந்தாய்வுக் கூட்டம் ஒன்றை உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் கூட்டியிருக்கிறார்.

இது தொடர்பாக பல்வேறு அமைப்புகளுக்கும் அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைத் தமிழினத்தையே அழித்து ஒழிக்கும் வெறிகொண்டு சிங்கள இராணுவம் தமிழ் மக்கள் மீது ஏவுகணைகளை ஏவியும் குண்டுகள் வீசியும் கொன்று குவித்து வருகிறது. நாளுக்கு நாள் அங்கிருந்து வரும் செய்தி கள் நமது நெஞ்சங்களைப் பிளக்கின்றன. கடந்த இரு மாத காலத்திற்கும் மேலாக தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கமும் மற்றும் பல அமைப்புகளும் தொடர்ந்து நடத்திய போராட்டங்கள், ஊர்வலங்கள், உண்ணா நிலைப் போராட்டங்கள், மனிதச் சங்கிலிகள், மக்கள் திரள் பேரணிகள், எல்லாவற் றிற்கும் மேலாக 12 தோழர்கள் தீக்குளித்து உயிர்த்தியாகம் செய்த நிகழ்ச்சிகள் ஆகியவற்றின் விளைவாக தமிழகத்தில் மாபெரும் மக்கள் எழுச்சி ஏற்பட்டுள்ளது.

இந்தச் சூழ்நிலையில் நாடாளு மன்றத் தேர்தல் குறுக்கிட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி ஈழத்தமிழர் பிரச் னையை பின்னுக்குத் தள்ளி மக்களின் கவனத்தைத் திசை திருப்ப முயற்சிகள் நடைபெறுகின்றன. இதை நாம் ஒரு போதும் அனுமதிக்கக் கூடாது. 12 தோழர் களின் உன்னதமான உயிர்த்தியாகம் வீணாக அனுமதிக்கக் கூடாது.

கடந்த தேர்தல்களில் முன் வைக்கப்படாமல் மறைக்கப்பட்ட ஈழத் தமிழர் பிரச்னை இந்தத் தேர்தலில் மய்யப் பிரச்னையாக ஆகியுள்ளது. இதைப் புறந்தள்ள நடைபெறும் முயற்சிகளை முறியடித்து தமிழக மக்களை அணி திரட்டி தமிழ்ப் பகை சக்திகளை இத்தேர் தலில் தோற்கடித்துத் தீர வேண்டிய கட்டாயம் உள்ளது என்பதை தாங்கள் ஏற்பீர்கள் என நம்புகிறேன்.

ஈழத் தமிழர் பிரச்னை மட்டுமல்ல தமிழக மீனவர்கள் தொடர்ந்து சிங்களவர் களால் சுட்டுக் கொல்லப்படும் கொடுமை கள் - காவிரி, பாலாறு, முல்லைப் பெரி யாறு ஆகிய நதிநீர்ப் பிரச்னைகளில் உச்ச நீதிமன்றம், நடுவர் மன்றம் ஆகிய வை அளித்த தீர்ப்புக்கு எதிராகத் தொடர்ந்து செயல்பட்டு, தமிழகத்தை வஞ்சித்து வரும் அண்டை மாநிலங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க மத்திய காங்கிரசு ஆட்சி முன் வரவில்லை. தொடர்ந்து தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டு வருகிறோம்.

மத்திய அரசும் தமிழக அரசும் தொடர்ந்து தமிழர்களின் நலன்களுக்கு எதிராகச் செயல்பட்டு வருகின்றன. எனவே வரவிருக்கும் தேர்தலில் மீண்டும் மத்தியில் காங்கிரசு தலைமையிலான ஆட்சி அமையுமானால் ஈழத் தமிழர் பிரச்னைக்குப் பெரும் கேடுகள் விளை யும் என்பதில் அய்யம் இல்லை. எனவே தமிழர் பகை சக்திகளை தோற்கடிப்பதின் மூலம் மட்டுமே தமிழர் நலன்களைப் பாதுகாக்க முடியும்.

இது குறித்து ஆராய்ந்து முடி வெடுக்க அனைத்துத் தமிழ்த் தேசிய அமைப்புகள், முற்போக்கு இயக்கங்கள், பெரியாரியல் அமைப்புகள், வழக்கறிஞர் கள், மகளிர், மாணவர்கள், தொழிலாளர் கள், மீனவர்கள், எழுத்தாளர்கள், திரையுலகைச் சேர்ந்தவர்கள் மற்றும் பிற அமைப்புகள் ஆகியவற்றின் பிரதிநிதி கள் கலந்து கொள்ளும் கூட்டம் 4-4-09 சனிக்கிழமை அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திருச்சி, சுமங்கலி மகால் திருமண மண்டபத்தில் நடைபெறும். இக்கூட்டத்தில் தாங்கள் அவசியம் கலந்து கொண்டு சிறப்பிக் கும்படி வேண்டிக் கொள்கிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments