இலங்கை இராணுவத்தினால் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதற்கு தென் ஆபிரிக்க அமைப்புக்கள் எதிர்ப்பு

இலங்கை இராணுவத்தினால் வன்னித் தமிழ்மக்கள் படுகொலை செய்யப்பட்டு வரும் சம்பவங்களுக்கு தென் ஆபிரிக்க அமைப்புக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.
ஆபிரிக்க தேசிய காங்கிரஸ், தென் ஆபிரிக்க தொழிற்சங்க காங்கிரஸ், தென் ஆபிரிக்க கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ் அமைப்புக்கள் இணைந்து இந்த எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.

இலங்கையின் வடபகுதியில் இடம்பெற்று வரும் பொதுமக்கள் அழிவுகளை ஏற்றுக்கொள்ள முடியாதென குறித்த அமைப்புக்கள் கண்டனம் வெளியிட்டுள்ளன.

தமிழ் மக்களின் நியாயமான அபிலாஷைகளை இராணுவ நடவடிக்கைகளின் மூலம் ஒருபோதும் நிறைவேற்ற முடியாதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் நடத்தப்படும் யுத்த சட்டங்களுக்கு புறம்பான தாக்குதல்கள் கண்டிக்கப்பட வேண்டியவை என குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கம் இன அழிப்பு கொள்கையை தொடர்ந்தும் கடைபிடித்தால் யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்தும் வகையில் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க நேரிடும் என தென் ஆபிரிக்க அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

Comments