தமிழக செய்தி ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இந்த கருத்தினை தெரிவித்துள்ளார். தனக்கு, பிரதமராகும் தனிப்பட்ட எண்ணமும் இல்லை என அவர் இந்த செவ்வியின் போது குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் யுத்த நிறுத்தம் ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே தமது நிரந்தரமான நிலைப்பாடு, இதன் ஊடாகவே அப்பாவி பொது மக்கள் கொல்லப்படுவதற்கு ஒரு முடிவினை ஏற்படுத்த முடியும். அவ்வாறில்லை என்றால், பொது மக்கள் கொல்லப்படுவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக கருத்து வெளியிட்டதாக கூறப்படும் வை. கோபாலசாமி குறித்து கருத்து தெரிவித்த ஜெயலலிதா, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொது செயலர் வை. கோபாலசாமி, புதிதாக எதனையும் சொல்லிவிட வில்லை எனவும், ஏற்கனவே அவர் காங்கிரஸ் கட்சியுடன் இருந்த போதும், வை. கோபாலசாமி இந்த நிலைப்பாட்டினையே கொண்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், வை. கோபாலசாமி, தேசிய பாதுகாப்புக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் எதனையும் தெரிவித்திருக்கவில்லை எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
Comments