முதல்வர் கருணாநிதிக்கு விடுதலைப் புலிகள் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படும் குற்றச்சாற்று உண்மையல்ல என்று கூறியுள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழகத்தில் விடுதலைப் புலிகள் கைதுசெய்யப்பட்டதாக வெளியான செய்தி ஓர் நாடகம் என்றும் குற்றம் சாற்றினார்.
மதிமுக பிரமுகர் இல்லத் திருமண வரவேற்பு விழா ஒன்றில் கலந்துகொண்டு பேசிய வைகோ, "கடந்த சில தினங்களுக்கு முன்னர், முதல்வர் கருணாநிதிக்கு விடுதலைப் புலிகள் கொலை மிரட்டல் விடுத்ததாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியானது. இது உண்மையல்ல, முதல்வர் கருணாநிதியின் ஏற்பாடு தான் இது" என்றார்.
"அடுத்த தினமே, தமிழகத்தில் புலிகள் கைது என்றும் செய்திகள் வெளியிடப்பட்டன. இதுவும் ஓர் நாடகம் தான். எதிர்வரும் தேர்தலை மனதில் கொண்டு இதுபோன்ற நாடகங்கள் நடத்தப்படுகின்றன. இது மிகப்பெரிய துரோகம். இந்த துரோகத்திற்கு வரலாற்றில் மன்னிப்பே கிடையாது" என்றும் அவர் ஆவேசமாக கூறினார்.
இலங்கை தமிழர் பிரச்சனைக்காக அரசியலில் மதிமுக இழந்தது அதிகம் என்று கூறிய வைகோ, என்றாலும் இலங்கை தமிழர்களுக்காக மதிமுக தொடர்ந்து போராடும் என்றும் உறுதியளித்தார்.
|

Comments