படையினரின் முன்னேற்ற முயற்சி முறியடிப்பு பல இராணுவத்தினர் காயம்

இன்று அதிகாலை இராணுவத்தால் ஆரம்பிக்கப்பட்ட வலிந்த தாக்குதலை புலிகள் வெற்றிகரமாக முறியடித்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பலத்த இழப்புக்களை சந்தித்த இராணுவத்தினர் தமது பழைய நிலைகளுக்கு திரும்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.



அத்துடன் கடும் எறிகணை மற்றும் விமானத்தாக்குதல்களை தொடுத்திருப்பதாகவும் அறியப்படுகிறது. இன்று நடை பெற்ற விமானத் தாக்குதல்களில் 272 அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ள அதேவேளையில், மேலும் பல நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

கொழும்பு இரத்மலானை விமான நிலையத்தில் இருந்து சுமார் 20 அம்பூலன்ஸ் வண்டிகள் இராணுவ வைத்தியசாலை நோக்கி விரைந்திருப்பதாக, நேரில் கண்ட பலர் அதிர்வு நிருபரிடம் தெரிவித்துள்ளனர். காயமடைந்த இராணுவத்தினரே கொழும்பு சென்றடைந்ததாக உறுதிப்படுத்தப்படாத தகவல் ஒன்று தெரிவிக்கின்றது.

இன்று மதியம் சுமார் 3.00 மணியளவில் கிபீர் விமானங்கள் நடத்திய குண்டுத்தாக்குதலின் காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது...

மீதமுள்ள புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை கைப்பற்றும் நோக்கில் இலங்கை இராணுவம் இன்று அதிகாலை 3.45 மணியளவில் பாரிய தாக்குதலை ஆரம்பித்துள்ளது.

வான், கடற்படை மற்றும் தரைப்படை என்பனவற்றை தாக்குதலில் பயன்படுத்தி, கனரக ஆயுதங்களையும் முன் நகர்த்தி பாரிய அழிவினை ஏற்படுத்த இலங்கை அரசு முனைகிறது.

கடும் முறியடிப்புச் சமரில் விடுத்லைப் புலிகள் ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முள்ளிவாய்க்கால் ஊடாக இராணுவத்தினரை தரையிறக்கி தாக்குதலை நடத்த இராணுவம் திட்டமிட்டிருந்ததாகவும். பல படகுகளில் இராணுவத்தினர் தரையிறக்கத்துக்காக காத்திருந்த வேளை புலிகளின் RPG தாக்குதல் பிரிவு நடத்திய தாக்குதலில் பல படகுகள் சேதமானதாக தெரிவிக்கப்படுகிறது.

வட்டுவாகல் பகுதியில் புலிகள் அமைத்திருக்கும் பாரிய மண் அணையை உடைத்து பாதுகாப்பு வலயத்துக்குள் உள் நுளைய இராணுவம் கடும் முயற்சிகளை மேற்கொள்ளும் நிலையில் அங்கு நிலை எடுத்திருக்கும் புலிகள் கடும் தாக்குதலை தொடுத்திருப்பதுடன், புலிகளின் குறிசூட்டனியும் தொலைதூரத்தில் இருந்து தாக்குதல் நடத்துவதால் இராணுவத்தால் முன்னேறமுடியாத நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவர் இந்த தாக்குதலை நெறிப்படுத்துவதால் இராணுவம் பல இழப்புக்களை சந்திக்கும் என கூறப்படுகிறது. இருப்பினும் , தற்போது வான் தாக்குதல்கல் அதிகரிக்கப்பட்டு கண்மூடித்தனமாக எறிகணைத் தாக்குதலும் நடத்தப்படுவதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments