*தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும், சுயநிர்ணய உரிமையையும், அங்கீகரிக்கவேண்டும்,
*ஆக்கிரமிப்பு இராணுவம் தமிழர் தாயகத்திலிருந்து வெளியேற்றப்பட வேண்டும்,
*தமிழீழ மக்களை அவர்கள் நிம்மதியாக வாழ விரும்பும் அவர்களின பூர்வீக நிலங்களிலிருந்து வெளியேற்ற அனுமதிக்கக்கூடாது,
*உடனடி யுத்தநிறுத்தம் மேற்கொள்ளப்படுவதுடன், வன்னி வாழ் மக்களின் உடனடித் தேவையான உணவு, மருத்துவ உதவிகள் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்
ஆகிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு இந்நிகழ்வு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது
உரிமைப்பேரணி ஒட்டாவா பாராளுமன்ற முன்றலில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (21 - 04 -2009) காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வு நடைபெறவுள்ளது எனக் கேள்விப்பட்டவுடன் மக்கள் தமது வேலைகளுக்கு விடுப்பெடுத்து நாளை நடைபெறவுள்ள உரிமைப்போருக்கு வார இறுதியிலேயே தயாராகி வருகின்றனர்.
மக்கள் பேரெழுச்சி கொண்டுள்ளதால் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொள்வர் என கனடிய தேசிய ஊடகங்கள் எதிர்வு கூறுகின்றன.
தமிழர் வர்த்தகநிலையங்கள் மற்றும் சேவைநிறுவனங்கள் என்பன செவ்வாய்கிழமை தமது நிறுவனங்களை மூடுவதாக தீர்மாணித்துள்ளனர்.
இந்நிகழ்வில் கனேடிய ஆளும், எதிர்கட்சி பாரளுமன்ற உறுப்பினர்களும் மந்திரிகளும் மற்றும் விசேட பிரதிநிதிகளும் கலந்துகொள்வர் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஊர்ச்சங்கங்கள், விளையாட்டுக் கழகங்கள் என்பன பதாகைகள் (Placards) நீண்ட பதாகைகள் (Banner) தயாரிப்பு வேலையில் ஈடுபட்டுள்ளன.
நூறுக்கும் மேற்பட்ட பேருந்துக்கள் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்களின் உதவியுடன் ஊர்ச்சங்கங்களின் கூட்டமைப்பினால் எற்பாடுசெய்யப்பட்டு ஒட்டாவா செல்வதற்கு தயார் நிலையில் நிற்கின்றன.
பேரூந்துப் பதிவுகளுக்கும் ஏனைய தொடர்புகளுக்கும் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளனர் 416- 825 6020, 416- 825 1210, 416- 858 3896, 647- 838 6925
வாகனத் தரிப்பிடத்தின் வரைபடம்:-
Comments