தடைசெய்த இயக்கத்தை ஆதரித்து பேசிய குற்றச்சாட்டில் சிறையில் இருந்த இய‌க்குன‌ர் சீமான் நிபந்தனை ‌பிணை‌யி‌ல் விடுதலை

தடை செ‌ய்ய‌ப்ப‌ட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் இய‌க்க‌த்தை ஆத‌ரி‌த்து பே‌சியதாக குற்றஞ் சாட்டப்பட்டு புது‌ச்சே‌ரி காவ‌ல்துறை‌யின‌ரா‌ல் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டு ‌சிறை‌யி‌ல் உ‌ள்ள இய‌க்குன‌ர் ‌‌‌‌சீமானை நீ‌திம‌ன்ற‌ம் ‌நிப‌ந்தனை ‌‌பிணை‌யி‌ல் ‌விடுதலை ச‌ெ‌ய்து‌ள்ளது.

இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக இய‌க்குன‌ர் சீமானை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் நெல்லை காவ‌ல்துறை‌யின‌ர் கைது செய்ததை சென்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் சமீபத்தில் ரத்து செய்தது.

ஆயினும், புதுச்சேரி காவ‌ல்துறை‌யின‌ர் தொடர்ந்த வழக்குக்காக அவர் புதுச்சேரி சிறையில் இருந்து வந்தார். இந்நிலையில், புதுச்சேரி வழக்கிலும் ‌விடுதலை ‌பிணை கேட்டு இய‌க்குன‌ர் சீமான் புதுச்சேரி மாவட்ட தலைமை நீதிபதி கிருஷ்ணாராஜாவிடம் ‌‌விடுதலை ‌பிணை மனு தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த தலைமை நீதிபதி, சீமானை நிபந்தனை ‌பிணை‌யி‌ல் விடுதலை செய்தார். தலைமை நீதிபதி உத்தரவில் ரூ.10 ஆயிரத்திற்கு 2 பேர் சொத்து ‌பிணை கொடுக்க வேண்டும் என்றும், வெளியில் சென்று சாட்சிகளை கலைக்கவோ, அச்சுறுத்துவோ கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளார்.

இதை‌த் தொட‌ர்‌ந்து வரு‌ம் 27ஆ‌ம் தேதி ‌சிறை‌யி‌ல் இருந்து இயக்குனர் சீமான் வெளியே வருவார் என தெரிவிக்கப்படுகிறது.

Comments