பிரித்தானிய அரசாங்கம் மாணவர்களுடன் இணைந்து நாளையில் இருந்து எதிர்வரும் 10 நாட்களுக்குள் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர் குழுவில் ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மூன்று மாணவர்கள் வீதம் நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கும் ஒரு குழுவும் மற்றைய குழு பெல்லியத்தில் ஐரோப்பிய ஆணையகத்திற்கும், மூன்றாவது குழு பிரித்தானியாவில் கொமன்வெல்த்திற்கும் சென்று போராட்டக்காரர்களின் கோரிக்கைகள் தொடர்பில் பொதுவான அடிப்படையில் தீர்வினை எய்துவதற்கான சந்திப்புக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
நியூயோர்க் செல்லும் மாணவர் குழுவில் உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபடும் சிவா என்ற இளைஞர் செல்லவிருப்பதாகவும் மற்றய மாணவர்கள் பற்றிய விபரங்கள் இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
பாராளுமன்றத்திற்கு முன்பாக அமைந்துள்ள சதுக்கத்தில் இடம்பெற்றுவரும் இப்போராட்டத்தை மாணவர்கள் விரும்பினால் எதிர்வரும் செவ்வாய் வரை பாராளுமன்ற சதுக்கத்தில் மேற்கொள்வதற்கு அனுமதி வழங்குவதாகவும் அதன்பிற்பாடு அதற்கு அருகில் அமைந்துள்ள தேவாலய பகுதியில் உள்ள மைதானப்பகுதியில் மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
இதேவேளை பொதுவான போராட்டங்களில் தமிழர்களின் சின்னமான புலிக்கொடி போன்றவற்றை பாவிப்பதற்குகான அனுமதியை நீதிமன்றம் மூலம் எடுப்பதற்கும் மற்றும் இதன்மூலம் விடுதலைப்புலிகளின் தடையை எடுப்பதற்கும் வழிவகைகள் செய்ய முடியும் எனவும் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
ஐந்து அம்சக் கோரிக்கை:
Comments