"அடங்காப்பற்று" பிரான்சில் தொடர் போராட்டத்தின் மாபெரும் ஒன்றுகூடல்

உலகெங்கும் தொடர்ச்சியாக உண்ணாநிலைப் போராட்டங்களும் கவனயீர்பு ஒன்றுகூடல்களும் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் பிரான்ஸ் தலைநகர் பாரிசிலும் மக்கள் போராட்டம் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

தொடரும் நான்கு இளைஞர்களின் உண்ணாநிலைப் போராட்டத்தின் விளைவாக இரவு பகல் பாராது பெரும் எண்ணிக்கையில் மக்கள் அணிதிரண்டு போராட்டத்தினை மேலும் வலுப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் எதிர்வரும் 18.04.2009 சனிக்கிழமை 13:00மணிக்கு மிக முக்கியமான மாபெரும் ஒன்றுகூடல் ஒன்று நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பிரான்சின் நாடாளுமன்ற பிரதிநிதிகள் மற்றும் 35ற்கும் மேற்பட்ட நகரசபை தலைவர்கள் மற்றும் நகரசபைப்பிரதிகள். பிரான்சில் இயங்கிவரும் ஏனைய நாட்டு பொது அமைப்புகள் சங்கங்கள் ஆகியவற்றின் உறுப்பினர்களும் பிற சமூகங்களும் கலந்துகொள்ளும் இவ் ஒன்றுகூடலில் அனைத்து தமிழ் மக்களையும் தவறாது கலந்துகொள்ளுமாறு இந் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.

சிறீலங்கா அரச பேரினவாதத்தின் தமிழின அழிப்பை உலகே மௌனமாக ஆதரிக்கிறதா? அல்லது எமது நீதியான போராட்டத்தை கவனத்தில் எடுத்து எமக்காக குரல் கொடுக்க முன்வருவார்களா?. பெரும் மாற்றத்தை உருவாக்குவோம், நீதி கேட்போம்... உரிமையோடும் இன உணர்வோடும் பங்கு கொண்டு... ஆயிரமாயிரமாய் அணிதிரண்டு நீதிகேட்போம்.

18.04.2009 சனிக்கிழமை போராட்டம் தொடர்பான அறிவித்தலுக்கு...

Comments