சிறீலங்கா இனவெறி அரசின் கொடூர கொலைவெறியினைத் தடுத்து நிறுத்த அழுத்தம் கொடுக்கக்கோரி கனடியத் தலைநகரில் தமிழர்களால் தொடர் போராட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
கனடியத் தமிழர் சமூகம் மற்றும் கனடியத் தமிழ் மாணவர்களின் ‘கனடிய அரசாங்கம் செயலில் ஈடுபடும் வரையான தொடர் போராட்டம்’ அழைப்பையேற்று தமிழ் மக்கள் அனைவரும் கனடியத் தலைநகரான ஒட்டாவா நோக்கி அணிதிரண்டு கொண்டுள்ளார்கள்.
செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 7, விடிகாலை 6 மணியிலிருந்து பேருந்துகள், தங்கள் தனிப்பட்ட வாகனங்கள் மூலம் போராட்டத்திற்காகத் தலைநகர் நோக்கி மக்கள் சென்று கொண்டுள்ளார்கள்.
கனடிய பாராளுமனறத்தில் ஆரம்பித்த போராட்டம் சிறிது நேரத்தில் வீதியை நோக்கி நகர ஆரம்பித்தது. தலைநகரின் வீதியில் இறங்கி போக்குவரத்தினை மறித்த கனடியத் தமிழ் மக்கள் தலைநகரின் முக்கிய வீதிகளான Bank Street, O’Conner Drive ஆகிய வீதிகள் உட்பட்ட முக்கிய வீதிகளில் வீதி மறிப்பில் ஈடுபட்டிருந்தனர். இதனால் அலுவலகங்கள் முடிவடைந்த பின்னர் நகரே ஸ்தம்பித்திருந்தது.
தமிழ் மக்களால் ஏற்படுத்தப்பட்ட வீதித் தடையினால் பல கிலோ மீற்றர் நீளத்திற்கு நகரின் பொதுப்போக்குவரத்து வாகனங்கள் மற்றும் தனியார் வாகனங்கள் நகரமுடியாது நிறுத்தப்பட்டிருந்தன.
வாகனப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டதைத் தொடர்ந்து அங்கு பெருமளவு காவற்றுறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஆயினும்,
தமிழ் மக்களின் மீது மேற்கொள்ளப்படும் படுகொலையை நிறுத்துவதற்கு சிறீலங்கா இனவெறி அரசிற்கு அழுத்தம் கொடுக்கவேண்டும்,
உடனடி யுத்த நிறுத்திற்கு சிறீலங்கா அரசைக் கொண்டுவரவேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து கனடியத் தலைநகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அத்துடன், இவை நடைமுறைப்படுத்தப்படும் வரை தொடர்ச்சியான போராட்டமாக இப் போராட்டம் மேற்கொள்ளப்படும் என ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
தலைநகரான ஒட்டாவாவில் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ள அதேவேளை ரொறன்ரோ நகரில் உள்ள மாகாணப் பாரளுமன்றத்திற்கு முன்னாலும் தொடர் போராட்டத்தினை மக்கள் தொடர்ந்த வண்ணமுள்ளனர்.
கடும் குளிரையும் பொருட்படுத்தாது கனடியத் தலைநகர் ஒட்டாவா வீதிகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் கனடியத் தமிழ் சமூகமானது தங்கள் கோரிக்கை நிறைவேற்றும் வரை வீதிகளை விட்டு அசையோம் எனும் உறுதியுடன் உள்ளார்கள்.
பல்லாயிரக்கணக்கில் பங்கேற்று காலத்தின் கடமையை நிறைவேற்றும்படி ஒருங்கிணைப்பாளர்கள் கனடியத் தமிழ் மக்களைக் கேட்டுக்கொள்கின்றார்கள். இப் போராட்டத்தில் கலந்து கொள்ளவிருக்கும் மக்களிற்காக தொடர்ச்சியாக பேரூந்து வசதி ஏற்பாட்டாளர்களால் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் காலை ரொறன்ரோ நகரின் பல பாகங்களில் இருந்தும் ஒட்டாவா செல்வதற்காக பேரூந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
கீழுள்ள படங்கள் ரொறன்ரோவில் ..
Comments