தென்னாபிரிக்காவில் முன்னாள் த.தே.கூட்டமைப்பின் நா.உறுப்பினர் உண்ணாநிலைப் போராட்டம்

சிறிலங்கா அரசாங்கத்தினால் தமிழர் மீது திணிக்கப்பட்டுள்ள போரை அனைத்துலகம் உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து முன்னாள் த.தே.கூட்டமைப்பின் பா.உ. மா.க.ஈழவேந்தன் தென்னாபிரிக்காவின் டேர்பனில் அமைந்துள்ள மாரியம்மன் ஆலயத்தில் உண்ணாநிலைப் போராட்டத்தினை ஆரம்பித்துள்ளார்.

இன்று வியாழக்கிழமை காலை 8:30 மணியளவில் பின்வரும் ஆறு கோரிக்கைகளை அனைத்துலக சமூகத்திடம் வலியுறுத்தி தொடங்கியுள்ளார்.

1.உடனடியாக நடைமுறைப்படுத்தக் கூடியவாறான நிரந்தரமான போர் நிறுத்தம் மேற்கொள்ளக் கோரி சிறிலங்கா அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

2.அனைத்துலக அரச சார்பற்ற நிறுவனங்களின் மேற்பார்வையுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளும் உடனடியாக வழங்கப்படவேண்டும்.

3.இராணுவத்தால் நிர்வகிக்கப்படும் தடுப்பு முகாம்களுகக்கு சுதரந்திரமான அனைத்து மனிதாபிமான நிறுவனங்களும் எந்தவித தடைகளும் இன்றி அனுமதிக்கப்பட வேண்டும்.

4.தமிழர்களின் சுயநிர்ணய அடிப்படையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசாங்கத்திற்கும் இடையில் உடனடியான பேச்சுக்கள் தொடங்கப்பட வேண்டும்.

5.தென்னாபிரிக்க தமிழ்ச் சமூகத்தினர் இவரின் உண்ணாநிலைப் போராட்ட முயற்சியில் தங்களையும் இணைத்துகொள்வதற்கு முன்வந்துள்ளார்.

6.புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களுகம்இ மனித உரிமை ஆர்வலர்களையும் இவ்வாறான நடவடிக்கைகளில் தத்தமது நாடுகளில் ஈடுபடுமாறு உலகத் தமிழ்ச் சொந்தங்களை அவர் கோருகின்றார்.

76 அகவையுடைய முன்னாள் த.தே.கூட்டமைப்பின் பா.உ. மா.க.ஈழவேந்தன் கடந்த அறுபது ஆண்டுகளாக சிறிலங்கா அரசியலில் ஈடுபடு கொண்டவர்.

ஈழத் தமிழர்கள் மீது கொடிய சிங்கள இராணுவத்தால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள திட்டமிட்ட இனப் படுகொலையை அனைத்துலக சமூகம் தண்டிக்கவுமில்லை, கண்டிக்கவுமில்லை. எனத் தெரிவித்து ஈழத்தில் கருவில் வளரும் குழந்தைகளும், தாய்மார்களும் இனவாத இராணுவத்தின் விசமிய ஆயுதங்களால் கொன்றொழிக்கப்படும் வேளையில் அவர்களை காப்பாற்றும் நோக்கில் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஒரு உண்மையான தென்னாபிரிக்கச் சுதந்திரப் போராட்டம் வென்ற மண்ணில் இருந்து இந்தப் பயணத்தை மேற்கொள்வதன் மூலம் நெல்சன் மண்டேலா மற்றும் கிறிஸ்தவ மதகுருத் தலைவர் டெஸ்மன் டூட்று போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்களையும் மற்ற உலகத் தலைவர்களையும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் துன்பங்களுக்கு எதிராக நேர்மையான வெளிப்படையான நிலைப்பாட்டை மேற்கொள்ள கோரி வேண்டுகோள் விடுக்கின்றார்.

Comments