டோக்கியோ இணைத்தலைமை நாடுகளின் ஒருபக்கச் சார்பால் அவதியுறும் தமிழர்கள்

“டோக்கியோ இணைத்தலைமை நாடுகள்” நான்கு கட்சிகள் அடங்கிய ஒரு குழு: விடுதலைப் புலிகளுக்கும் ஸ்ரீலங்கா அரசிற்கும் இடையே போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை நடத்திய நோர்வே, ஜப்பான், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகிய நான்கு அமைப்புகளே அவை. டோக்கியோ இணைத்தலைமை நாடுகள் தொடர்ந்து ஸ்ரீலங்காவிற்கு சாதகமான நடவடிக்கைகள் மற்றும் நிலைப்பாடுகளை எடுத்து வந்ததால் அவை நாணயமற்ற பேச்சுவார்த்தையாளர்களாக நடந்து கொண்டுள்ளனர் எனத் தமிழர்கள் கருதுகின்றனர். இலங்கையில் இன்னமும் இரத்தம் சிந்துதல் தொடர்வதற்கு ஒரு முக்கியக் காரணம் டோக்கியோ இணைத்தலைமை நாடுகளின் ஒருதலைச் சார்பானதும் மற்றும் அரை மனதுடனுமான செயல்களேயாகும்.

ஒபாமாவுக்கான தமிழர்கள் இலங்கையில் அமைதியைக் கொண்டுவர டோக்கியோ இணைத்தலைமை நாடுகளின் ஒருதலைச் சார்பானதும் மற்றும் அரை மனதுடனுமான செயல்களைக் கண்டித்து ஒரு கடிதம் எழுதியுள்ளனர். நம்பகமற்ற மற்றும் பலவீனமான பேச்சுவார்த்தை செயல்பாடுகள் மூலம் இந்த நால்வர் குழு ஸ்ரீலங்கா அரசின் இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைக்கு உதவியாக இருந்துள்ளனர் என ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பு கருதுகின்றது.

இக்கடிதத்தில் ஒபாமாவுக்கான தமிழர்கள் டோக்கியோ இணைத்தலைமை நாடுகளின் செயல்கள் மீதான தங்களது கடுமையான விமர்சனம் எவ்வாறு நியாயமானது என விளக்கியுள்ளனர். எவ்வாறெனில், தமிழர்கள் டோக்கியோ இணைத்தலைமை நாடுகளை “நம்பகமானவர்கள், நல்லெண்ணம் உள்ளவர்கள், நீதியை விரும்புபவர்கள் மற்றும் மனிதாபிமானம் உள்ள மனிதர்கள் மற்றும் அமைப்புகள்” எனப் புகழ்ந்து பேசி ஆரம்பித்து விட்டு பின்னர் எவ்வாறு “டோக்கியோ இணைத்தலைமை நாடுகளின் நல்லெண்ணச் செய்கைகளால் ஏற்கனவே கெட்ட நிலை இன்னும் கேடு கெட்ட நிலையாகி விட்டது எனக் குறிப்பிடுகின்றனர்”.

“நடுநிலையற்ற தன்மையே இணைத்தலைமை நாடுகளின் செயற்பாட்டில் உள்ள மிகப்பெரிய பிழையாகும்” என ஒபாமாவுக்கான தமிழர்கள் கூறுகிறார்கள்.

டோக்கியோ இணைத்தலைமை நாடுகளின் சமரச முயற்சிகளில் உள்ள ஒருதலைச் சார்பான நடவடிக்கைகளுக்கு சான்றாக ஒபாமாவுக்கான தமிழர்கள் பல எடுத்துக்காட்டுகளை முன்வைக்கின்றனர். அவை உள்ளடக்குவன:

1. ஸ்ரீலங்கா அரசு (GOSL) மற்றும் விடுதலைப் புலிகள் ஆகியவற்றிற்கிடையில் பேச்சுவார்த்தைகள் சிறிது காலம் நடந்த பின், டோக்கியோ இணைத்தலைமை நாடுகள் பேச்சுவார்த்தைகளை அமெரிக்காவிற்கு நகர்த்தினர். விடுதலைப் புலிகளைத் தவிர மற்ற அனைவருக்கும் வசதியாக அமைந்தது. டோக்கியோ இணைத்தலைமை நாடுகள் ஸ்ரீலங்கா அரசை அழைத்தது, ஆனால் தமிழக்ர்ளை அழைக்கவில்லை. இந்தப் பேச்சுவார்த்தைக் காலத்தில் ஒரு பக்கத்தினர் மட்டுமே பங்கேற்கவோ அல்லது பேசவோ அனுமதிக்கப்பட்டனர்.

2. டோக்கியோ இணைத்தலைமை நாடுகள் தொடக்கத்திலிருந்தே-இலங்கை பிரிக்கப்பட முடியாதது-என்ற ஸ்ரீலங்கா அரசின் நிலைப்பாட்டை எடுத்துக் கொண்டு தனி நாட்டிற்கான தமிழர்களின் விருப்பம் மற்றும் அதற்குப் பதிலீடான கூட்டமைப்பு நாடு ஆகியவற்றை நிராகரித்தன. டோக்கியோ இணைத்தலைமை நாடுகள் பேச்சுவார்த்தையில் தமிழர்களுக்கு குறைந்த அளவு தனி நிர்வாக உரிமை உள்ள அரசைக் கொடுப்பதைப் பற்றிப் பரிசீலனை செய்யக்கூட மறுத்துவிட்டனர். தமிழர் எதிர்ப்புப் போராட்டத்தின் முக்கியமான குறிக்கோளே இதுதான் என்கிற போது, தமிழர் போராட்டத்தின் முழுமுதற் குறிக்கோளை நிராகரித்தது இணைத்தலைமைகளின் ஸ்ரீலங்காவுக்கு ஆதரவான பக்கச்சார்புள்ள நிலையை வெளிப்படுத்தியது.

3. ஸ்ரீலங்கா அரசு தங்களது அரசாங்கத்தையும் அவர்களது பேச்சுவார்த்தைக் குழுவையும் தமிழர்களால் முன்மொழியப்பட்ட தீர்வான இடைக்கால தன்னாட்சி நிர்வாகத்தை(ISGA)வெறுமனே பரிசீலனை செய்ததற்காகவே கலைத்த போது, டோக்கியோ இணைத்தலைமை நாடுகள் ஸ்ரீலங்கா அரசு மீது ஒரு உறுதியான நிலைப்பாட்டை எடுத்திருக்க வேண்டும்.

4. ஸ்ரீலங்கா அரசின் நீண்ட காலத்திய இனச் சுத்திகரிப்பு மற்றும் அரச பயங்கரவாத வரலாற்றை அறிந்திருந்தும் இணைத்தலைமை நாடுகள் தொடர்ந்து விடுதலைப்புலிகளின் செயல்களை வலுவாகக் கண்டித்தும்,ஸ்ரீலங்கா அரசின் அக்கிரமங்களைக் கண்டுகொள்ளாமலும் இருந்தனர்.

5. ஸ்ரீலங்கா அரசின் தீவிரவாதச் செயல்களைக் கண்டுகொள்ளாத அதே நேரம், டோக்கியோ இணைத்தலைமை நாடுகள் ஐரோப்பிய யூனியன் விடுதலைப் புலிகளை அவர்களது தீவிரவாத இயக்கங்களின் பட்டியலில் சேர்க்க வேண்டும் என வற்புறுத்தி தமிழீழ விடுதலைப் புலிகளின் ஐரோப்பிய யூனியன் நாடுகளில் உள்ள சொத்துக்களை முடக்கின. அதே நேரத்தில் டோக்கியோ இணைத்தலைமைகள் ஸ்ரீலங்கா அரசின் அட்டூழிங்களைக் கண்டு கொள்ளாதது மட்டுமல்லாமல், ஸ்ரீலங்கா அரசின் இனவெறிப் படைகளுக்குப் பணம், ஆயுதம் மற்றும் இராணுவப் பயிற்சி ஆகியவற்றை வழங்கினர்.

6. 2000-இல் டோக்கியோ இணைத்தலைமை நாடுகள் ஸ்ரீலங்கா அரசுக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையே ஒரு போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்படுத்தினர். ஸ்ரீலங்கா அரசு தன்னிச்சையாக இந்தப் போர்நிறுத்தத்தை முறித்த போது, டோக்கியோ இணைத்தலைமை நாடுகள் தங்கள் வருத்தத்தை மட்டும் தெரியப்படுத்தினர், ஆனால் ஸ்ரீலங்கா அரசிற்கு எதிராக உறுதியான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஒபாமாவுக்கான தமிழர்கள் டோக்கியோ இணைத்தலைமை நாடுகள் நம்பகமான நடுநிலையாளர்களாக செயல்படவில்லை என்ற முடிவை எட்டுகின்றனர். போரிடும் குழுக்களுக்கிடையேயான அவர்களது சமரசப் பேச்சு ஸ்ரீலங்கா அரசிற்கு ஏற்றவாறு ஒருபக்கச் சார்புடையதாக இருந்துள்ளன. இவ்வாறாக அவர்கள் ஸ்ரீலங்கா அரசிற்கு இனப்படுகொலை செய்ய உதவியாக இருந்துள்ளனர் மற்றும் இரத்தம் சிந்தும் நிலைமை இன்னும் மேசமாவதுக்கு ஏதுவாக இருந்துள்ளனர்.

முழுமையான கடிதத்தைப் படிப்பதற்கு http://www.tamilsforobama.com/Letters_to_Co_Chairs.html என்ற இணைய முகவரிக்குச் செல்லவும்.

இந்த ஊடக அறிவிப்பைத் ஆங்கிலத்தில் படிப்பதற்கு http://www.tamilsforobama.com/Letters_to_Co_Chairs_english.html என்ற இணைய முகவரிக்கு வருகை தரவும்.

தமிழர்கள் பெரும்பாலும் வடக்கு-கிழக்கு இலங்கையிலும் மற்றும் தென்னிந்தியாவிலும் வாழக்கூடிய ஒரு இனக்குழுவாகும். இலங்கையில் அவர்கள் சிறுபான்மையினராவார்கள் மற்றும் தற்போது அவர்கள் இனப்படுகொலை எனக் கருதும் போரினால் பாதிக்கப்பட்டவர்கள். தீவின் மூன்றில் ஒரு பங்கு தமிழர்கள் உயிரைக்காக்கத் தீவை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் வாழ்ந்து வருகிறார்கள். ஒபாமாவுக்கான தமிழர்கள் குழு அமெரிக்காவில் குடியேறிய அல்லது அமெரிக்காவில் பிறந்த தமிழர்களைக் கொண்டதாகும்.

இக்குழுவைத் தொடர்பு கொள்ள, (617) 765- 4394 என்ற எண்ணில் அழையுங்கள், அல்லது தொலைதொடர்பு இயக்குனர், ஒபாமாவுக்கான தமிழர்கள் என்பவருக்கு உங்கள் செய்தியைத் தெரிவியுங்கள்.

http://www.TamilsForObama.com

Comments