சில நாட்களுக்கு முன்னர் சிறீலங்கா இராணுவ இணையத்தளத்தில் விடுதலைப்புலிகளிடம் இருந்து கைப்பற்றபட்ட ஆயுதங்கள் என குறிப்பிட்டு சில புகைப்படங்கள் வெளியிடப்பட்டிருந்தன. அவை யாவும் போலியானவை என்பதை நெருடல் தொழில்நுட்பவியலாளர்கள் ஆராய்ந்து கண்டுபிடித்துள்ளோம்.
Digital Photo Cameraவில் எடுக்கப்படும் புகைப்படங்களில் Meta data எனும் சில தரவுகள் அந்த படங்களுடன் பதிவு செய்யப்படுவதுண்டு. அத் தரவுகளை கொண்டு பல விடயங்களை ஆதாரத்துடன் கண்டு பிடிக்கலாம். அந்த வகையில் புகைப்படம் எடுக்கப்பட்ட திகதியும் பதிவுசெய்யப்படும்.
அவ் இணையத்தளத்தில் வெளிவந்த புகைப்படங்கள்:
போலியானவை என்பதற்கான ஆதாரம்:
அதே இணையத்தளத்தில் கீழ் உள்ள புகைப்படம் மார்ச் மாதம் 30ம் திகதி சில மக்கள் தங்களுடைய கட்டுப்பாட்டு பகுதிக்கு வந்ததாக குறிப்பிடப்பட்டு வெளியிட்டார்கள். ஆனால் அந்த புகைப்படம் உண்மையில் மார்ச் மாதம் 13ம் திகதி எடுக்கப்பட்டது.
ஆதாரம்:
இப் பொய்ப்பிரசாரங்களை எமது ஆங்கில செய்திச்சேவையில் நாம் அம்பலப்படுத்தி சில மணித்தியாலங்களில், அச் செய்தியையே தமது இணையத்தளத்தில் இருந்து அகற்றிவிட்டார்கள். அந்த வகையில் எமக்கு வெற்றிதான்.
இன்னும் தொடரும்…
- அறிவன்பன் (நெருடல்)
Comments