ஜ.நா தயாரித்து வந்த அறிக்கையானது தற்போது கசிந்துள்ளதால் பல புகைப்படங்கள் எமக்கு
கிடைக்கப்பெற்றுள்ளது. இதில் பல செயற்கைக்கோள் புகைப்படங்களானது போர் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்க விடையமாகும்.
ஒவ்வொரு நாளாக மக்கள் இடம்பெயரும் காட்சிகளும், இன்று இருந்த கட்டிடங்கள் நாளை அந்த இடத்தில் இடிந்து தரைமட்டமாக இருக்கும் காட்சிகளும் செய்மதியூடாக எடுக்கப்பட்டுள்ளது. பல அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு அவை ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. "சாட்சியம் அற்ற போர்" எனபெயரிடப்பட்டிருக்கும் இந்த அறிக்கையில் மக்கள் வரிசை வரிசையாக இடம்பெயர்வதும் அவர்கள் இடம் பெயரும் சமயத்தில் வீழ்ந்து வெடிக்கும் குண்டுகளின் புகைமண்டலமும் தெளிவாக படம் பிடிக்கப்பட்டுள்ளன.புலிகளால் அமைக்கப்பட்டிருக்கும் மண் அரண் முதல் இராணுவத்தால் அமைக்கப்பட்டிருக்கும் முள்ளுகம்பி வேலி மற்றும் தடைகள் என்பன திட்டவட்டமாக காண்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வறிக்கையானது இலங்கை அரசு போர் குற்றங்கள் புரிந்திருக்கிறது என்பதை நிரூபிக்க போதுமான அளவு சாட்சிகளை உள்ளடக்கியுள்ளதாக கூறப்படுகிறது. புதுமத்தளான் மற்றும் கரையோரப்பகுதில் மக்கள் அமைத்திருக்கும் தற்காலிக குடில்கள் அவை பின்னர் அகற்றப்பட்டு இடம் மாறி இருப்பதுஇ எறிகணை வீச்சில் நிலப்பரப்புகள் குண்டும் குழியுமாக காணப்படுவது என்பனவும் முறையே இங்கு படம் பிடிக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
நாம் இதனை எமது வாசகர்களுக்காக மொழி பெயர்த்துக்கொண்டிருக்கிறோம். இன்னும் சற்று காத்திருங்கள் விரைவில் வெளிவரும்.
இடம் பெயரும் மக்கள், கூட்டமாக ஒரே நேராக நடந்து செல்கின்றனர். கண்னிவெடிகளை தவிர்ப்பதற்காக
26-03- 2009 இந்த இடத்தில் காணப்பட்ட 800 தற்காலிக குடில்கள் 19-04- 2009 இங்கு இருந்து காணாமல் போயுள்ளது
இங்கு வட்ட வட்டமாக காணப்படுவது அனைத்தும் எரிகுண்டு எறிகணைத் தாக்குதல் நடத்தப்பட்ட இடம்
மண் அரன் மற்றும் வீதித் தடை அத்துடன் எறிகணைகள் வீழ்ந்து வெடித்துள்ள பிரதேசம்.
12 மீட்டர் விட்டம் கொண்ட பாரிய குழி. கடும் விமானத்தாக்குதலால் ஏற்பட்டிருக்கலாம் மற்றும் அணை
பாரிய மணித அவலம் ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படும் இடம் எல்லாத் தரவுகளும் குறியிடப்பட்டுள்ளது
Comments