தமிழினம் மன்ம் தளர்ந்து விடக்கூடாது நம்பிக்கையுடன் மீண்டும் எழவேண்டும்--ரவிசங்கர்

""தமிழினம் பல்வேறு பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கின்றது. ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி விஷம் போல் அந்தப் பிளவு அமைந்து விடுகின்றது. இதனால் கிடைக்க இருக்கின்ற நன்மைகள் அனைத்தும் ஒட்டுமொத்த தமிழினத்துக்கும் கிடைக்காமல் போய்விடுகின்றது.

அது மாத்திரமல்ல தமிழர்களது விரலை எடுத்து தமிழினத்தின் கண்களையே குத்தும் நிகழ்வுகளும் இடம் பெற்று வருகின்றன. இவை அனைத்திற்கும் ஒற்றுமை இன்மையே காரணமாகி விடுகின்றது.

எனவே தமிழினத்துக்கு இன்று தேவை ஒற்று மையே'' இவ்வாறு இந்தியாவின் வாழும் கலை அமைப்பின் தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் குருஜி இலங்கைக்கு கடந்த வாரம் மேற்கொண்ட விஜயத்தின்போது வார இதழுக்கு வழங்கிய விசேட செவ்வியில் கூறினார். அவர் அளித்த செவ்வியின் விவரம் பின்வருமாறு:

கேள்வி: இலங்கைக்கு வந்ததின் நோக்கம் பற்றிக் குறிப்பிட முடியுமா குருஜி?

பதில்: இலங்கையில் தமிழ் மக்கள் அநாதைகளாக உள்ளனர். அதாவது அரசியல் ரீதியாக அநாதையாகிவிட்டார்கள். ஆன்மீக ரீதியிலும் தமிழ் மக்கள் அநாதைகளாகி விடக்கூடாது என்ற ஒரு நோக்கத்துடன் தான் இலங்கைக்கு வந்துள்ளேன்.

கேள்வி: இலங்கை விஜயத்தின்போது பல்வேறு மட்டங்களைச் சேர்ந்தவர்களை நீங்கள் சந்தித்திருப்பீர்கள். குறி ப்பாக ஜனாதிபதியைச் சந்தித்தீர்களா? முக்கியமாக எந்த விடயம் குறித்துப் பேசினீர்கள்?

பதில்: ஜனாதிபதியைச் சந்தித்தேன். போர் காரணமாக ஆயிரக்கணக்கில் தமிழ் மக்கள் இடம்பெயர்ந்து அகதிகளாக உள்ளனர்.

பலர் அகதி முகாம்களில் தங்கியுள்ளனர். இவர்கள் அனைவரையும் விரைவாக அவர்களது சொந்த இடங்களில் குடியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நான் ஜனாதிபதியிடம் கேட்டுக் கொண்டேன். போர் நடைபெற்ற பகுதிகளில் மீதிவெடிகளும், ஆபத்தான வெடி பொருட்களும் புதைக்கப்பட்டுள்ளன. முதலில் இவைகள் அகற்றப்பட்டாக வேண்டும்.

மிதி வெடிகளையும் வெடி பொருட்களையும் அகற்றிய பின் இடம்பெயர்ந்த மக்கள் சொந்த இடங்களில் குடியமர்த்தப்படுவர் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

கேள்வி: முல்லைத்தீவில் இருந்து இடம்பெயர்ந்த அகதிகளை நே?ல் சென்று பார்வையிட்டீர்கள். அவர்களுடன் பேசினீர்களா?


பதில்: வன்னியில் அகதி முகாம்களுக்குச் சென்றிருந்தேன். அவர்களுடன் பேசினேன். என்றுமே எவரிடமும் கையேந்தி நிற்காத தமிழினம் கையேந்தி நிற்பது மனதை உருக்கும் காட்சியாக இருந்தது. எவரிடமும் கையேந்தாத நாம் இன்று தண்ணீருக்கும் சாப்பாட்டுக்கும் கையேந்தி நிற்கிறோம் என்று கண்ணீர்மல்க அந்த மக்கள் தெரிவித்தனர்.

இது என்னைக் கலங்க வைத்தது, வருத்தமாகவும் இருந்தது. அந்த மக்களுக்கு ஆறுதல் கூறினேன். வாழ்க்கையில் நம்பிக்கையை இழந்து போக வேண்டாம். எதிர்காலத்தை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளுங்கள்.

மனிதத்துவமும் இறையருளும் துணை நிற்கும் என்று நம்பிக்கையூட்டினேன்.

கேள்வி: தமிழ் மக்களுக்கு குருஜி கூறும் செய்தி என்ன?

பதில்: சொந்தங்களை, சொத்துகளை இழந்து அநாதைகளாகி விட்ட தமிழ் மக்களுக்கு மாத்திரமல்ல, ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் நான் கூறுவது இரண்டு செய்திகள்தான்.

சொந்தங்களை, சொத்துகளை இழந்து விட்டோமே என்று கலங்கி நிற்கின்றீர்கள்.அதற்காக நீங்கள் நம்பிக்கையை இழந்து விடக் கூடாது.

அழிவுகள், இழப்புகள், அனர்த்தங்களில் இருந்து தமிழ் மக்கள் மீண்டும் தலை நிமிர்ந்து நிற்க வேண்டும். அழிவுகளும், இழப்புகளும் அனர்த்தங்களும் நிரந்தரமானவையல்ல.

இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஜெர்மனி முற்று முழுதாக அழிந்து சிதைந்து போனது.சிதைந்து போன ஜெர்மனியை மக்கள் அப்ப டியே விட்டு விடவில்லை. இழப்புக்களையும் அழிவுகளையும் கண்டு மூலையில் அமர்ந்து விடவில்லை. புதிய நம்பிக்கையுடன் தைரியத்துடன் உத்வேகத்துடன் புறப்பட்ட ஜெர்மன் மக்கள் புதிய ஜெர்மனியை உருவாக்கி தலைநிமிர்ந்து நிற்கின்றனர். எனவே தமிழினம் புதிய உத்வேகத்துடனும் நம்பிக்கையுடனும் எழ வேண்டும் என்பது தான் எனது முதலாவது செய்தி. இரண்டாவதாக நான் கூறுவது கசப்பானதாக இருக்கலாம். ஆனால் அதுதான் உண்மை. அந்தச் செய்தி ஒற்றுமை குறித்தது.

தமிழர்கள் ஒன்றுபட வேண்டும். ஒற்றுமைப்பட வேண்டுமென நான் கேட்டுக் கொள்கின்றேன். தமிழினம் பல்வேறு பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கின்றது. அந்தப் பிளவு சிறிய பிரிவுகளா அல்லது பெரிய பிரிவுகளா என்பதல்ல பிரச்சினை. ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி விஷம் போல் அந்தப் பிளவுகள் அமைந்து விடுகின்றன.

இதனால் கிடைக்க இருக்கின்ற நன்மைகள் அனைத்தும் ஒட்டுமொத்த தமிழினத்துக்கும் கிடைக்காமல் போய்விடுகின்றது.

அது மாத்திரமல்ல தமிழர்களது விரலை எடுத்து தமிழினத்தின் கண்களையே குத்தும் நிகழ்வுகளும் இடம்பெற்று வருகின்றன. இவை அனைத்திற்கும் ஒற்றுமை இன்மையே காரணமாகி விடுகின்றது. எனவே தமிழினத்துக்கு இன்று தேவை ஒற்றுமையே. இந்தச் செய்திகளை மிக அழுத்தமாக தமிழினத்துக்கு கூறி வைக்க விரும்புகின்றேன்.

கேள்வி: இலங்கையின் இன விவகாரத்தில் குருஜி மிக ஆழமாக அக்கறை கொண்டு செயற் படுகின்றீர்கள். இது தொடர்பாக நீண்ட நேர்காணல் ஒன்றை கொடுத்திருந்தீர்கள். இன விவகாரம் குறித்து ஜனாதிபதியிடம் பேசினீர்களா?

பதில்: இன விவகாரத்திற்கு தீர்வு காணப்பட வேண்டும். அதிகாரப் பரவலாக்கல் மூலம் இந்தத் தீர்வு எட்டப்பட வேண்டுமென்று நான் ஜனாதிபதியிடம் கூறினேன். சுய கௌரவத்துடன், பாதுகாப்புடன், சம உ?மைகள் பெற்றவர்களாக தமிழ் மக்கள் வாழ வழி செய்யப்பட வேண்டுமென்று நான் அவரிடம் கேட்டுக் கொண்டேன்.

கேகள்வி: தற்போது போர் பெருமளவில் முடிவுக்கு வந்தவிட்டதாகக் கூறப்படுகின்றது. இந்நிலையில் அரசியல் தீர்வுத் திட்டம் முன்வைக்கப்படுவது குறித்து ஜனாதிபதியுடனான சந்திப்பின்போது பேசினீர்களா?


பதில்: இல்லை. நான் அகதிகளாகிவிட்ட மக்களின் நிலை குறித்தே கூடுதலாக அக்கறை எடுத்ததினாலும் இது பற்றியே கூடுதலாக ஜனாதிபதியிடம் பேசினேன். அத்துடன் ஆன்மீக ரீதியில் முன்னெடுக்கப்பட வேண்டிய விடயங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்துப் பேசினோம்.

கேள்வி: வவுனியாவில் உள்ள அகதி முகாம் ம்களைப் பராமரிப்பது குறித்தோ அல்லது தங்களது அமைப்பின் மூலம் பொறுப்பெடுப்பது பற்றியோ யோசனை எதனையும் கொண்டுள்ளீர்களா?

பதில்: தற்போது வவுனியாவிலும் ஏனைய பகுதிகளிலும் அமைக்கப்பட்டுள்ள அகதி முகாம்கள் நிரந்தர முகாம்களாக செயற்படக் கூடாது.காஷ்மீர் மற்றும் உலகத்தின் ஏனைய பகுதிகளில் போன்று மக்கள் தொடர்ந்தும் அகதி முகாம்களில் வைத்து பராமரிக்கப்படக் கூடாது. இலங்கையில் நீண்ட காலமாக சில இடங்களில் அகதிகள் ?காம்கள் இயங்குவதாகக் கேள்விப்பட்டேன். இந்த நிலை நீடிக்கக் கூடாது.

முல்லைத்தீவில் இருந்து இடம்பெயர்ந்தவர்களும் இவ்வாறான ஒரு நிலைக்கு தள்ளப்பட்டு விடுவார்களோ என்ற அச்சம் எனக்குள் உள்ளது.

அந்த நிலை உருவாகக் கூடாது.மக்கள் அவர்களது சொந்த இடங்களில் விரைவாகக் குடியமர்த்தப்பட வேண்டும். அகதி முகாம்களில் முடக்கப்பட்டு வைக்கப்படக் கூடாது.

கேள்வி: இலங்கையின் இன விவகாரம் குறித்து இந்தியாவின் நிலைப்பாடு எத்தகையதாக இருக்க வேண்டுமென எதிர்பார்க்கின்றீர்கள்?

பதில்: இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகளை ச?வரத் தெ?யõதவர்களைக் கொண்டு இந்திய அரசாங்கம் இன விவகாரத்தைக் கையாண்டு வருகின்றது.

இதனால் இந்திய அரசாங்கத்தின் முடிவுகள் சரியாக அமையவில்லை. இதில் மாற்றம் ஏற்பட வேண்டும்.

கேள்வி: இந்தியாவில் தற்போது தேர்தல் நடைபெற்று வருகின்றது. இந்திய அரசியலில் மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளனவா?

பதில்: நிறையவே இருப்பதாகத் தென்படுகின்றது

Comments