ஹிலாரி கிளின்ரனின் இலங்கை குறித்த கண்ணோட்டத்தை சுவிஸ் மனித உரிமை ஆர்வலர் ஷான் தவராஜா விமர்சித்துள்ளார்
தவராஜா விமர்சித்துள்ளார்.
நீண்ட காலமாக பல்வேறு தியாகங்களுடன் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தை கைவிட்டு, உதவி வழங்கும் நாடுகளின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ளுமாறு ஹிலாரி தெரிவித்துள்ளமை ஏற்றுக்கொள்ள முடியாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
யுத்த முடிவின் பின்னர் இலங்கையில் ஏற்படுத்தப்படவுள்ள அதிகாரப் பகிர்வு மற்றும் அரசியல் தீர்வுத் திட்டம் குறித்த ஹிலாரியின் கருத்துகள் வெறும் கற்பனைகளே அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறெனினும், தமிழர் அபிலாஷைகளுக்கு நியாயமான தீர்வு வழங்கப்பட வேண்டுமென ஹிலாரி தெரிவித்துள்ள கருத்து பாராட்டுக்குரியதென அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இடம்பெற்று வரும் யுத்தம் காரணமாக அப்பாவி பொதுமக்கள் பெரும் இன்னல்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவித்து அமெரிக்க செனட் சபை
உறுப்பினர்களினால், ஹிலாரிக்கு அனுப்பி வைத்த கடிதத்திற்கு அனுப்பி வைத்துள்ள பதில் கடிதத்தில் ஹிலாரி மேற்குறிப்பிட்ட விடயங்களை தெரிவித்திருந்தார்.
இலங்கைத் தமிழர் குறித்த அமெரிக்காவின் நிலைப்பாட்டில் ஓர் தெளிவற்ற தன்மை காணப்படுவதாக ஷான் தவராஜா சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்ரன்
சுவிஸ் மனித உரிமை ஆர்வலர் ஷான் தவராஜா
Comments