தமிழக மக்களை ஏமாற்ற முதல்வர் கருணாநிதி முயல்கிறார்" - பழ நெடுமாறன் குற்றஞ்சாட்டு

தி.மு.க விற்கு ஓட்டு போடாதீங்க
"இலங்கையில் போரை நிறுத்த முதல்வர் கருணாநிதி எதைச் செய்ய வேண்டுமோ, அதைச் செய்யவில்லை. இன்றோ தமிழக மக்களை ஏமாற்ற முயல்கிறார்" என இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ நெடுமாறன் குற்றஞ்சாட்டினார்.

புதன்கிழமை சென்னையில் செய்தியாளர்களிடம், "இலங்கையில் இப்போது ஒவ்வொரு நிமிஷமும் ஏராளமான தமிழர்கள் கொல்லப்படுகின்றனர். பல உலக நாடுகள் வலியுறுத்திய பிறகும், இலங்கை அரசு போரை நிறுத்த மறுத்து விட்டது. போரை நிறுத்த இந்திய அரசு எதுவுமே செய்யவில்லை.

இந் நிலையில் முதல்வர் கருணாநிதி பொது வேலை நிறுத்தம் செய்கிறார். காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசில் தி.மு.க.வும் இடம்பெற்றுள்ளது. மத்திய அரசிடம் பேசி, போரை நிறுத்த நடவடிக்கை எடுக்க வைக்கும் பொறுப்பு தி.மு.க.வுக்கு உள்ளது. தி.மு.க.வின் இந்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்காவிட்டால், மத்திய அமைச்சரவையிலிருந்து தி.மு.க. வெளியேற வேண்டும்.

பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டவர்களை நேரில் சந்தித்து போரை முடிவுக்குக் கொண்டு வர கருணாநிதி நடவடிக்கை எடுத்திருக்கலாம். குறைந்தபட்சம் மத்திய அமைச்சரவைக் கூட்டங்களில் தி.மு.க. அமைச்சர்கள் இப் பிரச்சினையை எழுப்பி, போரை நிறுத்த முயன்றிருக்க வேண்டும்.

இதைத்தான் முதல்வர் கருணாநிதி செய்திருக்க வேண்டும். ஆனால் தி.மு.க.வும் இடம்பெற்றுள்ள மத்திய அரசை வலியுறுத்தி வேலை நிறுத்தம் நடத்துகிறார். செய்ய வேண்டியதை அவர் செய்யவில்லை. தமிழக மக்களை கருணாநிதி ஏமாற்ற முயல்கிறார்" என்றார் நெடுமாறன்.

Comments